Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 1 ஆகஸ்ட், 2012

மக்கள் வியந்து பாராட்டும் அமைச்சரின் நடவடிக்கை !


திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் இன்று திடீர் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஜெயா நகரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. அலுவலகத்தில் வேலைவாய்ப்பு பதிவை முறையாக செய்வதில்லை, ஆன்லைன் மூலம் பதிவு செய்ய மறுக்கின்றனர், வெளியே இன்டர்நெட்மையங்களுக்கு செல்லுமாறு கூறுகின்றனர். விண்ணப்பங்களை இலவசமாக தருவதில்லை என பல்வேறு புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் அலுவலகத்தில் முன்னறிவிப்பின்றி திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடக்கத்தில் பதிவு செய்ய வந்தவர்களிடம் சென்று அவர்களின் பதிவு விவரங்களை சரிபார்த்தார். பின்னர் பதிவு செய்யும் இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது கணினியில் பதிவு செய்ய முடியாமல் ஊழியர் திணறிக் கொண்டிருந்தார். அவரிடம் கேட்டபோது தனக்கு கணினி இயக்கும் அனுபவம் இல்லை எனக்கூறியதால் அமைச்சர் கோபமடைந்தார்.
பதிவு அட்டையில் ஒரு பெயரும், கணினியில் ஒரு பெயரும் சிலருக்கு பதிவு செய்யப்பட்டிருந்தன. அங்கிருந்த பொதுமக்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக எதுவும் நடைபெறுவதில்லை. அனைத்துக்கும் பணம் கேட்கின்றனர். ஆன்லைன் மூலம் பதிவே இங்கு செய்யப்படுவதில்லை என அமைசச்ரிடம் புகார் கூறினர்.
கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை எனவும் தெரிவித்தனர். பின்னர் வேலைவாய்ப்பு அலுவலக ஊழியர்களிடம் நேரடியாக விசாரணை செய்தார். அலுவலக பதிவேடுகளை ஆய்வு செய்த அமைச்சர் செல்லபாண்டியன், அங்கிருந்தே
தொலைபேசி மூலம் வேலைவாய்ப்புத்துறை செயலருக்கு அனைத்து ஊழியர்களையும் இடமாறுதல் செய்யுங்கள் என உத்தரவிட்டார்.
பின்னர் அமைச்சர் செல்லபாண்டியன் நிருபர்களிடம் கூறியது:
இங்குள்ள அலுவலகத்துக்கு முதல்வரிடம் அனுமதி பெற்று சொந்தக் கட்டடம் கட்டப்படும். அலுவலகமே ஊழல் மயமாகி உள்ளது. அனைத்து ஊழியர்களையும் இடம் மாறுதல் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
அலுவலகத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும். காலிபணியிடங்கள் நிரப்பப்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக