Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 7 ஜூலை, 2012

கல்வித்துறை அலட்சியம்:கலைந்து போனது மாணவியின் கனவு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவரது மகள் கார்த்திகா (17). ஸ்ரீவைகுண்டம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கணிதத்தை பாடமாக எடுத்து படித்தார். எஸ்எஸ்எல்சி தேர்வில் 74  சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற கார்த்திகா கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2வில் காலாண்டு உள்ளிட்ட தேர்வில் 1000 மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்றார். பொதுத்தேர்விற்காக நன்றாக படித்து தேர்வு எழுதிய அவருக்கு கடந்த மே 22ல் வெளியான தேர்வு முடிவு அதிர்ச்சி அளித்தது. ஆம், வெறும் 639 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். இதனால்  அனைத்து விடைத்தாள் நகல்களையும் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய 3 விடைத்தாள்கள் மட்டும் வந்தன. அவையும் கார்த்திகாவின் விடைத்தாள்கள் இல்லை. மதிப்பெண் பட்டியலில் ஏமாற்றத்தை தந்த தேர்வுத் துறை, விடைத்தாள் நகலையும் மாற்றி அனுப்பி தனது குழப்பத்தை அரங்கேற்றி இருந்தது.

இதனால் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தன்னிடம் இருந்த ஆதாரங்களை சமர்ப்பித்து விட்டு நம்பிக்கையோடு காத்திருக்கிறார் கார்த்திகா. மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த கார்த்திகாவிற்கு 39.16 சதவீதம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதனால் சுய நிதி பொறியியல் கல்லூரியில் கூட சேர்ந்து படிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக