Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 17 ஜூலை, 2012

2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள இந்திய ரயில்வே துறை !


"ரயில்வேயில் 20 ஆண்டுகளில் 6 லட்சம் பணியிடங்கள் சரண்டர் செய்யப்பட்டன. தற்போதுள்ள 12.50 லட்சம் பணியிடங்களில் இரண்டரை லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன,'' என டி.ஆர்.இ.யூ., செயல் தலைவர் இளங்கோவன் குறிப்பிட்டார். மதுரையில் அவர் கூறியதாவது : ஸ்பெஷல் கிராசிங்குகளில் மூன்று ஊழியர்களை நியமிக்கும்படி டி.ஆர்.இ.யூ., வலியுறுத்தியது. மதுரை கோட்டத்தில் 52, தெற்கு ரயில்வேயில் 432 ஸ்பெஷல் கிராசிங்குகள் உள்ளன. எந்நேரமும் ரயில் போக்குவரத்து மிகுந்த இந்த கிராசிங்குகளில் தொழிலாளர்கள் அதிக நேரம் பணிபுரிகின்றனர். குறைந்தபட்ச வேலை வழங்க கோரி தேவைப்பட்டால், வேலை நிறுத்தத்தில் டி.ஆர்.இ.யூ., ஈடுபடும். பொது துறையினருக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது. எனவே ரயில்வே தொழிலாளர்களுக்காக ஏழாவது சம்பள கமிஷனை அமைக்க வேண்டும். வேலைப்பளு அதிகம் புதிய ஓய்வூதிய திட்டம் கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் அமல்படுத்தப்படவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தில், 31 லட்சம் ஊழியர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஓய்வூதிய பணம் ஷேர் மார்க்கட்டில் முதலீடு செய்யப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வருவாய் மூலம் ஓய்வூதியம் வழங்குவது கேலிக்கூத்து. 1990ல் ரயில்வேயில் 18.54 லட்சம் பணியிடங்கள் இருந்தன. தற்போது 12.54 லட்சம் பணியிடங்கள் உள்ளன. ஆறு லட்சம் பணியிடங்கள் "சரண்டர்' செய்யப்பட்டன. தற்போதும் இரண்டரை லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், வேலை பளு அதிகமாகியுள்ளது. விபத்து அபாயம் உள்ளது. இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக