Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 14 டிசம்பர், 2012

திருச்சியில் அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் போராட்டம்


காவிரியில் தண்ணீர் இன்றி சம்பா பயிர் கருகி வருவதால்  விவசாயிகளுக்கு வங்கிகள் வழங்கிய கடன்களை தள்ளுபடி     செய்யவேண்டும், விவசாயிகள் வாழ வழிவகை செய்யவேண்டும், நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு அரசு உரிய விலை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட பாரதீய கிசான்சங்கம் சார்பில் இன்று, அரைநிர்வாணத்துடன் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தது.

ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.  அதையும் மீறி திட்டமிட்டபடி ரெயில் மறியல் நடைபெறும் என பாரதீய கிசான் சங்கம் அறிவித்தது. அதன்படி இன்று காலை மாநில   துணைத்தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டவிவசாயிகள் திருச்சி ஜங்ஷன்ரெயில் நிலையத்திற்கு சட்டையின்றி திரண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டியிருந்தனர். அத்துடன் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய வாசக அட்டைகளையும் கையில் ஏந்தியிருந்தனர்.

ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீஸ் உதவி கமிஷனர்கள் காந்தி, சீனிவாசன், இன்ஸ்பெக்டர்கள் சிகாமணி, நிக்சன்  உள்ளிட்ட போலீசார் மறித்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்ய  முயன்றனர். அப்போது போலீசாரிடம் ரெயிலை மறிக்க தங்களுக்கு அனுமதி  வழங்கவேண்டும் என்று கேட்டனர். அதற்கு போலீசார் மறுத்ததால் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதையடுத்து மாநில துணைத்தலைவர் அய்யாக்கண்ணு திடீரென ரெயில் நிலையம் முன்புள்ள ரோட்டில் படுத்தார். வெயில் அதிகமாக இருந்ததால் கொதிக்கும் தரையில் படுத்த அவரை எழுந்திருக்குமாறு போலீசார் கேட்டனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையே விவசாயிகள் சிலர் அங்கிருந்து நழுவி ரெயில்   நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மடக்கினர். அந்த சமயம் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு உருவானது. இதைத்தொடர்ந்து போலீசார்  அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டஅய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளை கைது செய்து குண்டு கட்டாக வேனில் ஏற்றினர்.

"இன்னும் சிறைகளிலேயே தொடர்கிறவர்களும் ஒப்புக் கொள்ளுகிற உண்மை" - 'பிறைமேடை' தலையங்கம் -எம். அப்துல் அப்துல் ரஹ்மான் எம்.பி


பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!

எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

உணர்வலைகள் உந்தப்படுகிறபோது உண்மைகளும், யதார்த்தங்களும் பல சமயங்களில் திசை மாறிவிடுகின்றன. ஆயுள் சிறைவாசிகளாக அடைக்கப்பட்டுக் கிடக்கிற தேகங்கள் கதிரவனின் கடும் வெப்பத்தை மறைத்து நிற்கிற மேகங்களைப் போன்றவவைகள். தோற்றத்தில் மேகங்கள் கருமையைப் பூசிக் கொண்டதைப்போலத்தான் தெரியும்; அவைகளுக்குள் அடங்கிக் கிடப்பது அனைத்து ஜீவன்களுக்கும் அவசியமான தண்ணீர் அல்லவா? அதைப் போலத்தான் இவர்களைப் பார்க்கிறபோது தவறு செய்தவர்களாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பார்கள். சரியா, தவறா என்பதற்குள் நாம் நுழைய விரும்பவில்லை. ஆனாலும் தவறான வழிகாட்டுதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மட்டும் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. காரணம் சிறைக் கொட்டடிகளிலிருந்து மீண்டு வந்தவர்களும், இன்னும் சிறைகளிலேயே தொடர்கிறவர்களும் ஒப்புக் கொள்ளுகிற உண்மை இது. இருந்தபோதிலும் இவர்களின் இதயங்கள் தங்களின் சுயலாபங்களை எண்ணியதே இல்லை; தங்களின் சொந்தபந்தங்களைக்கூடப் பெரிதாக ஏற்கவில்லை; மனைவி மக்களையும் மனதில் கொள்ளவில்லை; முழுக்க முழுக்க உள்ளார்ந்த உணர்வுகளுக்கு மட்டுமே உருகி நின்றார்கள்; "இளங்கன்று பயமறியாது என்பார்களே; இந்த இளங்குருத்துக்களை இஷ்டத்திற்கு வழிகாட்டியவர்கள் இன்பமாக உலா வருகிறார்களே; தவறாக வழிகாட்டப்பட்ட இளைஞர்கள் மாட்டிக் கொண்டார்களே" என்று வேதனைக் கண்ணீர்விட்ட நம் தலைவர் மர்ஹும் சிராஜுல் மில்லத் அவர்களை எண்ணிப் பார்க்கிறேன். அப்படி மாட்டிக் கொண்டவர்களில் ஒருவன்தான் தம்பி கோவை அபுதாஹிர்.


அபுதாஹிரோ மற்ற எவருமோ சிறை செல்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு துளியளவும் காரணம் இல்லை; என்றாலும் அவனது உடல்நிலை எஸ்.எல்.இ. என்று சொல்லப்படும் ஓர் அபூர்வ கொடிய நோயால் பாதிக்கப்பட்டு கல்லீரல், மண்ணீரல், இதயம் மற்றும் அவனுடைய இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் ‘‘என்னை வழிகெடுத்தவர்களும் கைவிட்டுவிட, பரிதவித்து நிற்கிற எனக்கு ஆதரவு கரம் நீட்டமாட்டீர்களா?’’ எனத் தகவல் அனுப்பிக் கேட்டான் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் அவர்களிடத்தில். ஏறத்தாழ ஐந்து வருடங்களாகின்றன. இதுவரையிலும் 11 தடவை பரோலில் வெளியே வந்து தனது சுற்றத்தார் ஆதரவோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாலேதான் இந்த அளவுக்காவது இறைவனின் பேரருளால் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று சொல்ல வேண்டும். இந்த 11 தடவைகளில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று பரோலில் வெளிவந்த 2 தடவை நீங்கலாக மற்ற 9 தடவைகளும் முஸ்லிம் லீக் தலைமை மேற்கொண்ட முயற்சியால் மாத்திரமே சாத்தியமானது என்பதை எவரும் மறுக்க முடியாது.

துரதிஷ்ட நிலை; ஜெயலலிதா அரசு பொறுப்பேற்ற பிறகு பலமுறை நாம் விண்ணப்பங்கள் கொடுத்தும், அபுதாஹிரின் சுற்றத்தார் வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாமல் போகவே அவரின் சகோதரர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். உயர்நீதிமன்றமும் சென்ற 24.08.2012 அன்று அளித்த தீர்ப்பில் ‘அபுதாஹிரின் மருத்துவ சிகிச்சையை முக்கிய அம்சமாகக் கொண்டு 90 நாட்களுக்கு பரோலில் வெளியே சென்று வரலாம்’ என ஆணை பிறப்பித்தது. ‘அபுதாஹிரை வெளியேவிட முடியாது’ என்று அடம்பிடித்துக் கொண்டு அரசு தரப்பில் மறுபரிசீலனை மனுதாக்கல் செளிணியப்பட்டது. உயர்நீதிமன்றம் அதையும் டிஸ்மிஸ் செய்து ‘உடனே பரோலில் விடவேண்டும்’ என்று மறுதீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வந்து இப்போது இரண்டு மாதங்கள் ஆகியும் பரோலில் விடுவதற்குப் பதிலாக மொட்டைப் பிடிவாதம் கொண்டு தமிழக அரசு முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத அரசாக தமிழக அரசு இருப்பதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு அபுதாஹிரின் குடும்பத்தார் கொண்டு சென்றால் என்னவாகும்? என்று சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.


இதற்கிடையில் சென்ற சில தினங்களுக்கு முன்பாக சிறைச்சாலையிலேயே கிடந்த அவனது உடல் நிலை மிகவும் மோசமாகி கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறான். அங்கேயும் சிகிச்சையளிக்க முடியாத நிலையில் கோவை குப்புசாமி நாயுடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தீவிர சிகிச்சையில் இருப்பதாக நமக்குத் தகவல் கிடைத்தது. இதற்கு முன் பலமுறை தமிழக அரசின் உள்மீதுறைச் செயலாளரையும், சிறைத் துறை மேலதிகாரியையும் சந்தித்து பரோலில் விடுமாறு வேண்டுகோள் வைத்திருந்தபோதிலும் சென்ற 27.11.2012 அன்று டில்லியிலிருந்தே தமிழக உள்துறைச் செயலாளர் திரு.ராஜகோபால் அவர்களுக்கு பேக்ஸ் மூலம் வேண்டுகோள் கடிதம் அனுப்பி பரோலில் விடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன்.

தமிழக அரசின் நிலைபாட்டில் எந்த மாற்றமும் தென்படாமல் இருந்ததால் சென்ற 8.12.2012 சனிக்கிழமையன்று சென்னை அரசு தலைமைச் செயலகத்திற்கே சென்று உள்துறைச் செயலாளரை நேரில் சந்தித்து சற்று கடுமையாகவே அழுத்தம் கொடுத்து நிலைமையை விளக்கினேன். வழக்கம்போல ஆவண செளிணிவதாகச் சொன்னாலும் ஏதோ கொஞ்சம் வெளிச்சம் தெரிகிற வகையில் பதில் இருந்ததாகச் சொல்லலாம். நல்லது இனிமேலாவது நடக்கட்டும்.

தீவிர சிகிச்சையில் இருக்கும் அபுதாஹிரைச் சந்தித்து நிலைமையை அறிய விருப்பம் கொண்ட தாளிணிச்சபை முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்கள் மறுநாளே என்னை கோவை புறப்பட்டுச் செல்லப் பணித்தார்கள். அன்றிரவே பயணித்து மறுநாள் ஞாயிறு காலை கோவை சென்றடைந்து கோவை மாவட்ட முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உடன்வர நேராக மருத்துவமனைக்குச் சென்றேன்.

ஒடுங்கிப்போன தேகம்; நடுங்கிப்போன இதயம்; வீங்கிப்போன முகம்; கழுத்திலும் கைகளிலும் செருகப்பட்ட நிலையில் மருந்துக் குழாய்கள்; தலைவிரி கோலமாகவும்  கண்கள் இரண்டையும் ஒப்புக்காக மூடித் திறக்கும் இறுகிய இமைகள்; நெஞ்சு புடைத்து மீண்டும் உள்வாங்கும் மூச்சுத் திணறல்; உடுத்திய கைலியைக்கூடப் பிடித்துக் கொள்ளாத முடியாத குழியாக  ஆகிவிட்ட வயிறும் இடுப்பும்; பார்த்த மாத்திரத்தில் ‘வாங்க’ என்றுகூடத் தெளிவாகச் சொல்ல முடியாமல் ஒட்டிக் கொண்ட உதடுகள்; படுத்த நிலையில் இருந்த தேகம் மெதுவாக எழுந்து உட்கார முயற்சிக்கிறது; முடியவில்லை. இந்த தேகத்தைச் சுற்றி ஏ.கே.47 துப்பாக்கியுடனும், காக்கி உடையுடனும் எட்டு காவல் துறை அதிகாரிகள்; இரண்டு உளவுத்துறை அதிகாரிகள். இவர்களெல்லாம் பாதுகாப்புக்காக நிற்கிறார்களாம் மருத்துவமனையில். கைதி தப்பிவிடாமல் இருப்பதற்காம். என்னே உஷார்! ‘‘இந்த துப்பாக்கியே நோயைப் பன்மடங்காக்கிவிடும்போல் இருக்கிறது சற்று தள்ளி நில்லுங்கள்’’ என்று துப்பாக்கியுடன் அருகில் நின்று கொண்டிருந்த காவலாளியிடம் சொன்னேன்.

அபுதாஹிருக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லிவிட்டு புறப்பட்டேன். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருப்பதால் மறுநாளே டில்லி செல்ல வேண்டும். கோவைக்குச் சென்றபோது சிறைவாசிக் குடும்பங்களுக்காக உதவிடும் கிச்சான் புகாரி, சம்சுதீன், கோவை தங்கப்பா, ரஹ்மத்துல்லாஹ், அப்துல் பாசித், குட்டியப்பா என்று பலரும் சந்தித்து பல்வேறு தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பிறைநெஞ்சே! கடந்த ஐந்து ஆண்டு காலமாக இந்த அபுதாஹிரைக் கண்டு கொள்ள எந்த கழகம் முன்வந்தது? எந்த அமைப்பு அருகே வந்தது? இப்போது சில நாட்களாக அபுதாஹிரின் உடல்நிலையைக் கையில் எடுத்துக் கொண்டு விளம்பரமே விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. போராட்டம் என்றும், முற்றுகை என்றும், அத்துமீறல் என்றும் திடீரென கரிசனம் வந்து அபுதாஹிருக்காகச் செளிணிகிறோம் என்கிறார்களே! உள்ளபடியே அபுதாஹிருக்கு பரோல் விடுதலை கிடைக்க வேண்டும் என்றுதான் செய் கிறார்களா? அல்லது இப்படிச் செய்வதால் அதிகாரிகளுக்கு எரிச்சல் உண்டாகி பரோல் கிடைக்கப் பெறாமல் போய்விடட்டும் என்று நினைக்கிறார்களா? அல்லது இத்தனை நாட்கள் முஸ்லிம் லீகைத் தவிர வேறு யாருமே அண்டவில்லையே! எங்கே போனார்கள் இவ்வளவு நாட்களாக? நாம் கேட்கவில்லை. அபுதாஹிரின் சுற்றமே கேட்கிறது.

யாராவது பதில் சொல்வார்களா? உளப்பூர்வமாக ஈடுபட்டால் வரவேற்க வேண்டியதுதான்.

உருகிக் கொண்டிருக்கும் அருமைத் தம்பி அபுதாஹிர் உடல் நலம் பெற துஆ செய்வோம்; துணை நிற்போம்!

தயவு செய்து அவனை விளம்பரப் பொருளாக மட்டும் ஆக்கிவிடாதீர்கள் !என்று பிறைநெஞ்சே! நீயும் கேள்; நானும் கேட்கிறேன்.

இன்ஷா அல்லாஹ்.


வியாழன், 13 டிசம்பர், 2012

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு காங்கிரஸ் கூட்டணி அரசு தடை !


'சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டுக்கு, கேரளாவில் அனுமதியில்லை' என, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு முடிவு செய்துள்ளது.

எனினும், அன்னிய முதலீட்டை அனுமதிக்க, அந்தந்த மாநில அரசுகள், முடிவு எடுத்து கொள்ளலாம் என, மத்திய அரசு தெளிவுபடுத்திஉள்ளது. நேற்று, கேரள சட்டசபையில், மாநிலத்தில் பாராம்பரியமாக நடக்கும், கயிறு திரிப்பு, முந்திரி பதப்படுத்துதல், ஜவுளி தயாரிப்பு, பீடி சுற்றுதல் ஆகிய தொழில்களில் உள்ள பிரச்னைகள் குறித்து, ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.இதற்கு பதிலளித்து பேசிய, முதல்வர், உம்மன் சாண்டி கூறியதாவது:

ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி காலத்தில், எந்த சூழ்நிலையிலும், சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது இல்லை என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவில் மாற்றம் இல்லை. இதற்கான அனுமதியை, மேலிடத் தலைவர்களிடம் பெற்றுள்ளோம்.இந்த விஷயத்தில், நம், எம்.பி.,க்கள் ஒற்றுமையுடன் உள்ளனர். இருப்பினும், பார்லிமென்டில் நடந்த ஓட்டெடுப்பில், கட்சியின் கொறடா உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, ஓட்டளித்தனர்.மாநில அரசின் முடிவு குறித்து, பிரதமர், மன்மோகன் சிங்கிற்கும், கட்சி தலைவர், சோனியாவுக்கும் தெரிவித்துள்ளோம்.இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.



ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.920 கோடி முதலீட்டில் சூரிய மின் சக்தி பூங்கா


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்காவில் 500 ஏக்கர் பரப்பளவில் 920 கோடி ரூபாய் முதலீட்டில் சூரிய மின்சக்தி பூங்கா நிறுவும் திட்டத்திற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கும் திருவாளர்கள் ராசி கிரீன் எர்த் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த பூங்காவில் 100 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படும். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ல், தமிழகத்தில், வரும் 11 ஆண்டுகளில் சூரிய சக்தி மூலம் 5000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

மேலும், தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012-ல், தமிழகத்தில் 2015-ஆம் ஆண்டுக்குள் சுமார் 3000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டங்களை முதலீட்டாளர்கள் செயல்படுத்துவதற்கு ஏதுவாக சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்காக்கள் அமைக் கப்படுவதை ஊக்குவிப்பதும் இக்கொள்கையின் ஒரு அம்சமாகும்.

இந்த இலக்கினை எட்டும் வகையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் வரும் 5 ஆண்டுகளில் சுமார் 1000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டங்களை செயல்படுத்திட சூரிய மின்சக்தி உற்பத்தி பூங்காக் களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நிறுவுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்காவில் 500 ஏக்கர் பரப்பளவில் 920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 மெகா வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் வகையிலான சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கும், திருவாளர்கள் ராசி கிரீன் எர்த் எனர்ஜி பிரை வேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழக அரசின் சார்பில் முதன்மைச் செயலாளரும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான ஹன்ஸ் ராஜ் வர்மா, திருவாளர்கள் ராசி கிரீன் எர்த் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நரசிம்மனும் கையெழுத்திட்டனர்.

இந்த சூரிய மின்சக்தி பூங்கா, சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டங்களை சிறப்பாக அமைப்பதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், வடிகால் வசதிகள், போதுமான தண்ணீர் வசதி, செம்மைப்படுத்தப்பட்ட நில வடிவமைப்பு, மின்சாரம் வெளியேற்று வசதிகள் போன்றவைகளை சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வகையில் அமைக்கப்படும். இதனால், இப்பூங்காவில் அதிக அளவில் சூரிய மின்சக்தி நிலையங்களை அமைப் பதற்கு முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவர். இந்த சூரிய மின்சக்தி பூங்காவானது அரசு மற்றும் தனியாருடைய கூட்டு முயற்சியில் இந்தியாவிலேயே முதன் முறையாக பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது.

இந்த சூரிய மின்சக்தி பூங்கா திட்டம் 12 மாதங்களில் முடிக்க இலக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2000 பேர் வேலைவாய்ப்பு பெறுவர். இந்தப் பூங்கா வானது, தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012-ன்படி அமைக்கப்படும் முதலாவது சூரிய மின்சக்தி பூங்காவாகும். நிகழ்ச்சியில் நிதி, மின்சாரம், தொழில்துறை முதன்மைச் செயலாளர், எரிசக்தித்துறை செயலாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எல். அன் டி நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ராஜவேல், கெனடியன் சோலார் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் வினய் ஷெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சவூதி அரேபியா மற்றும் அரபு அமீரகத்தில் அதிகமான இந்திய தொழிலாளர்கள் உள்ளனர்


சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகமான இந்தியா தொழிலார்கள் பணி செய்து  வருகின்றனர்

வெளிநாட்டு இந்திய தொழிலாளர்கள் நலன் விவகார அமைச்சர் வயலார் ரவி ,சவுதி அரேபியாவில்  இரண்டு மில்லியன் இந்தியர்களும் ,ஐக்கிய அரபு எமிரேட்டில் 1.8 மில்லியன் இந்தியர்களும்  வேலை செய்கின்றனர் என்று கடந்த புதனன்று  மக்களவையில்  கூறினார்.

மேலும் ,குவைத்(641,062 ) ,ஓமன் (581,832), கத்தார் (500,000) மற்றும் பஹ்ரைன் (400,000) ,ஈராக்கில் 16,000 இந்திய தொழிலாளர்கள், லெபனான் 10,000, ஜோர்டான் 9,000 மற்றும் லிபியா 1,800  என்றும்  அவர் கூறினார்.

மாணவர்களை பள்ளியில் சேர்க்க மாற்று சான்றிதழ் தேவையில்லை


கல்வி உரிமை சட்டத்தின்படி, 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், இடைநின்று, வேறு பள்ளியில் சேரும் போது, அவர்களிடம், பள்ளி மாற்றுச் சான்று கேட்டு, கட்டாயப்படுத்தக் கூடாது. வயதை நிரூபிக்கவும் சான்று கேட்க கூடாது என்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 13 வயதுக்கு உட்பட்டோர், 8ம் வகுப்பு வரை படிக்க வேண்டும். பள்ளி படிப்பை தொடர முடியாதவர்கள், பிழைப்பிற்காக இடம் மாறியவர்கள், இச்சட்டத்தால் பலன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய சட்டப்படி, "13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், இடை நின்று, வேறு பள்ளியில் சேரும் போது, அவர்களிடம், பள்ளி மாற்றுச் சான்று கேட்டு, கட்டாயப்படுத்தக் கூடாது. வயதை நிரூபிக்கவும் சான்று தேவையில்லை. பெற்றோர் உறுதி மொழியை, வயது சான்றிதழாக ஏற்று, தேர்வுக்கு முதல் நாள் கூட சேர்க்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை உடனடியாக அமல்படுத்த, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இச்சட்டத்தின் படி, பிழைப்பிற்காக வெளி மாவட்டங்களில் குடியிருப்போர், தங்கள் குழந்தைகளை, வசிக்கும் பகுதி பள்ளிகளிலே சேர்க்க, வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் வி.கே.புரம் மதுரா கோட்ஸ் கதவடைப்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு


தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை யில் ஏற் பட்ட இழுபறியை தொடர்ந்து விகேபுரம் மதுரா கோட்ஸ் ஆலை நிர் வாகம்  நேற்று 2வது ஷிப்ட் முதல் கதவடைப்பு செய்தது. இதையொட்டி ஆலை முன்பு பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது.

மதுரா கோட்ஸ் நிறு வனம் மதுரை, தூத்துக்குடி, விகேபுரம் ஆகிய இடங்களில் 133 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த ஆலைகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் தற்போது மதுரையில் 290 பேரும், தூத்துக்குடியில் 250 பேரும், விகேபுரத்தில் 780 பேரும் நிரந்தர தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

 இவர்களுக்கு இந்தாண்டுக்கான சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடந்தது. இதில் மாத சம்பள உயர்வு ரூ.4003ம், அரியர்ஸ் ரூ. 6 ஆயிரம் வழங்கவும் நிர்வா கம் ஒப்புகொண்டது. இதனை மதுரை, தூத்துக் குடி ஆலைத் தொழிலாயளர் கள் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் விகேபுரம் ஆலைத் தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கூடுதல் சம்பள உயர்வு கேட்டு, 6ம் தேதி முதல் ஸ்டிரைக் செய்ய போவதாக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர். அதன்படி கடந்த 5ம் தேதி மதுரையில் பேச்சு வார்த்தைக்கு நிர்வாகம் சம்மதித்தது. இந்நிலையில் பேச்சுவார்தைக்கு முன்பே கடந்த 1ம் தேதி 2வது ஷிப்ட் முதல் 4 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். எஞ்சிய 4 மணி நேரம் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 5ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

நேற்று (12ம் தேதி) மாலை 5 மணிக்கு மதுரை யில் பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. ஆனால்  தொழிலாளர்களின் தொடர் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தால் நஷ்டம் ஏற்படுவதாக காரணம் காட்டி  நிர் வாகம் நேற்று 2வது ஷிப்ட் முதல் போலீஸ் பாதுகாப்புடன் கதவடைப்பு செய்தது.