Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? :மரைன் இன்ஜினியரிங் படிப்பு


மரைன் இன்ஜினியரிங் என்பது, கடல்சார் கட்டமைப்பு மற்றும் அறிவியல் தொடர்பான ஒரு பொறியியல் பிரிவாகும். மரைன் இன்ஜினியர்கள், ஒரு கப்பலின் தொழில்நுட்ப மேலாண்மைக்கு முழு பொறுப்பாகிறார்கள்.
Steam turbines, gas turbines and diesel engines போன்ற ஒரு கப்பலின் சாதனங்களை தேர்வு செய்யும் பொறுப்பு இவர்களுடையது. மேலும், கட்டுமானம், இயக்கம் மற்றும் இன்ஜின் அறை பராமரிப்பு போன்ற பணிகள் இவர்களுக்கு முக்கியமானவை. மரைன் இன்ஜினியரிங் பாடமானது, ஆன்த்ரோபாலஜி, ஆர்க்கியாலஜி, சோசியாலஜி மற்றும் மனிதனின் கடல் சம்பந்தமான இன்னும் சில துறைகளுடன் தொடர்புடையது.
மரைன் இன்ஜினியரிங் தொடர்பாக வழங்கப்படும் சில பாட வகைகள்
* Diploma in Marine engineering
* Bachelor of engineering in Marine engineering
* Bachelor of technology in Marine engineering
* Bachelor of technology in naval architecture & ocean engineering
* Master of technology in air armament
* Master of engineering in Marine engineering
* Master of technology in Marine engineering
* Master of technology in ocean engineering and naval architecture

இப்படிப்பில் சேர்வதற்கான அடிப்படை தகுதிகள்
இளநிலைப் படிப்பு
இளநிலைப் பட்டப் படிப்பில் சேர விரும்பும் ஒருவர், கணிதம், இயற்பியல், உயிரியல் மற்றும் வேதியியல் போன்ற அறிவியல் பாடங்களோடு, மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேசமயம் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர வேண்டுமெனில், JEE போன்ற கூட்டு நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தப் படிப்பின் காலகட்டம் 4 வருடங்கள்.
முதுநிலைப் படிப்பு
மரைன் தொடர்பான முதுநிலைப் படிப்பில் சேர்பவர்களுக்கு, பி.இ/பி.டெக் அல்லது வேறு ஏதேனும் சமமான பொறியியல் பிரிவில் இளநிலைப் பட்ட தகுதி இருக்க வேண்டும். முதுநிலைப் படிப்பின் காலஅளவு 2 வருடங்கள்.
இத்துறையில் வழங்கப்படும் சில சிறப்புநிலை(specialisation) படிப்புகள்
* Maritime commerce
* Marine refrigeration
* Command and control system
* Weaponry and weapon systems
* Navigation systems and equipment
* Marine renewable energy research
* Autonomous underwater vehicle research
* Information, communication systems and equipment
* Offshore extractive and infrastructure (cable laying)
வேலை வாய்ப்புகள்
இந்திய அளவில், சிறந்த வேலைவாய்ப்புக்காக, மாணவர்கள் விரும்பி தேர்வு செய்யும் ஒரு சில முக்கிய படிப்புகளில் இதுவும் ஒன்று. இதற்கான வேலை வாய்ப்புகள் ஏராளம். Marine engineer, Ocean engineer and Naval architect போன்ற பணி நிலைகளுக்கு, தனியார், கல்வி, கார்பரேட் மற்றும் அரசுத் துறைகளில் வாய்ப்புகள் நிறைய உள்ளன.
இந்தியா மற்றும் வெளி நாடுகளில் அபரிமித வேலைவாய்ப்புகள் உள்ளன. நவீன உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் நேவிகேஷன் போன்ற அம்சங்களால் இந்தப் பணியின் தன்மை மேம்பட்டுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது. மரைன் இன்ஜினியரிங்கில், environmental protection, offshore oil recovery, marine metals and corrosion, renewable energy, remote sensing, naval architecture, defense, underwater vehicles, global climate monitoring and marine transportation போன்ற பணிகள் குறிப்பிடத்தக்கவை.
இத்துறை பொறியாளர்களுக்கான சில பணி நிலைகள்
* Pumpman
* Harbor master
* Chief engineer
* Third engineer
* Fourth engineer
* Second engineer
* Marine engineering officers
* Junior (fifth) engineer
* Navy weapon engineering officer
ஊதியம்
அதிக சம்பளம் கிடைக்கும் துறைகளில் இதுவும் ஒன்றாகும். பயிற்சி நிலையில் உள்ள ஒரு பொறியாளர், மாதம் ரூ.30000 முதல் ரூ.40000 வரை பெறலாம். அனுபவம் மற்றும் விஷயங்களை தெரிந்துகொண்ட பிறகு, ஒருவர் பெறும் ஊதியம் மிக அதிகமாக இருக்கும்.
இந்திய மெர்சன்ட் நேவியில் பணிபுரியும் ஒரு பொறியாளர் கவர்ச்சிகரமான சம்பளம் பெறுகிறார். வெளிநாட்டில் பணிபுரியும் ஒரு மரைன் பொறியாளருக்கு NRI தகுதி கிடைக்கிறது. வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் பெறும் ஊதியமும் அபரிமிதமானது.
எங்கு படிக்கலாம் ? 
2.Sri Venkateswara College of Engineering,http://www.svce.ac.in

3.G.K.M. College of Engineering and Technology, Chennai


4.Vels College of Engineering and Technology - Chennai


5.R.L. Institute of Nautical Sciences, Madurai 


6.Indian Maritime College, Chennai


படிப்பில் பின்தங்கிய மாணவர்களை முன்னேற்றும் ஆசிரியர்களே தேவை

படிப்பில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களை முன்னேற்றும் ஆசிரியர்களே இன்றைய தேவை என்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் கூறினார்.

 சென்னை ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் பில்லபாங் சர்வதேசப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நேருக்குநேர் நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியது:
 வாழ்வில் சாதனை படைக்க விரும்பும் மாணவர்கள் ஏதேனும் ஒரு லட்சியத்தைத் தேர்வு செய்து, அதை அடைவதற்கான முயற்சியில் தொடர்ந்து இடைவிடாமல் கடுமையாக உழைக்க
 வேண்டும்.


 அவ்வாறு உழைக்கும்போது எதிர் வரும் சிரமங்களையும், பிரச்னைகளையும்,சோதனைகளையும் துணிவுடன் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெற
 வேண்டும்.


 ராமேசுவரத்தில் எனக்கு கல்வி போதித்த ஆசிரியர் சிவசுப்ரமணிய அய்யர், பறவை எவ்வாறு வானத்தில் பறக்கிறது என்பதை விளக்கிக் கூறி, எனது படைப்பாற்றல் திறனை மேம்படுத்த உதவியதால், படிப்படியாக ஏவுகணை பொறியாளராக, விண்வெளித்துறை தொழில்நுட்பப் பொறியாளராக உயர முடிந்தது.


 மற்றொரு ஆசிரியரான அய்யாதுரை சாலமோன், வாழ்க்கையில் முன்னேற லட்சியம், அதை அடைந்தே தீருவேன் என்ற நம்பிக்கை, அந்த லட்சியத்தை அடைவதற்கான கடும் உழைப்பு ஆகியவை அவசியம் என்று வலியுறுத்தி, வழிகாட்டினார். பெரும்பாலான ஆசிரியர்களைப் போன்று அவர் வகுப்பில் நன்கு படிக்கும் மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து மேலும் ஊக்குவிக்காமல், படிப்பில் பின்தங்கியநிலையில் இருந்த மாணவர்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்தினார்.
 அவரைப்போன்று அனைத்து ஆசிரியர்களும் தங்களிடம் கல்வி பயிலும் மாணவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியத்துடன் முன்னேற உதவ வேண்டும்.


 மாணவர்கள் தங்களது தனித்திறனை மேம்படுத்தி, சரித்திரத்தில் இடம் பெறும் வகையில் உழைத்து வாழ்வில் உயர வேண்டும் என்றார்.



ஈரானில் நிலநடுக்கம்: 250 பேர் உயிரிழந்தனர்

ஈரானில் 11 நிமிட இடைவெளியில் 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 250 பேர் உயிரிழந்தனர்.

 ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள ஆஹார், ஹாரிஸ், வர்சாகான் ஆகிய நகரங்களை சனிக்கிழமை மாலை 4.53 மணிக்கு நிலநடுக்கம் உலுக்கியது.
 இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளுக்கும் மேல் பதிவானதாக, தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 நிலநடுக்கத்தால் 250 பேர் வரை இறந்ததாகவும், 400 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கங்களால் 60 கிராமங்கள் பலத்த சேதமடைந்தன. 4 கிராமங்கள் ஒட்டுமொத்தமாகத் தரைமட்டமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மேற்கண்ட நகரங்களில் 5 முறை சிறிய அளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
 இதனால் பீதியில் உறைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியில் ஓடிவந்தனர். நில அதிர்வுகள் அதிகம் உணரப்பட்ட டப்ரிஸ் நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மின்விநியோகம் தடைபட்டுள்ளது. ஈரான் மீட்புப் பணிகள் துறைத்தலைவர் மஹ்மூத் முஸôபர் இது குறித்துக் கூறுகையில், ""அருகிலுள்ள கிராமங்களை ரேடியோ டிரான்ஸ் ரிசீவர் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடிகிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது'' என்றார்.
 ஈரானின் பாம் நகரத்தில் கடந்த 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 31 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 11 ஆகஸ்ட், 2012

சிரியாவில் புதிய ஆட்சியை அமைக்க அமேரிக்கா துருக்கி ஆலோசனை


சிரியாவில் அதிபர் ஆசாத்தை வெளியேற்றிய பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துருக்கியும் அமெரிக்காவும் திட்டமிடத் தொடங்கியிருக்கின்றன.
ஒருநாள் பயணமாக துருக்கி சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அகமது தேவுதோக்லுவுடன் இன்று பேச்சு நடத்தினார். சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராகச் சண்டையிட்டுவரும் கிளர்ச்சிப் படைகளுக்கு ஆதரவளிக்கும் நாடு என்ற வகையில் துருக்கியுடன் அமெரிக்கா கைகோர்த்திருக்கிறது.
புதிய அரசை அமைப்பது தொடர்பாக சிரிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களைச் சந்திக்கவும் ஹிலாரி கிளின்டன் திட்டமிட்டிருக்கிறார். சிரிய அதிபர் ஆசாத் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறப்படும் ஈரானைச் சேர்ந்த சில நிறுவனங்கள் மீது அமெரிக்கா நேற்று பொருளாதாரத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

ஓங்கி ஒலிக்கட்டும் நமது ஆதரவு குரல்கள் ! குவியட்டும் நமது உதவிகள் !


ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள். கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். கலவரக்காரர்கள் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருப்பது உறுதியானது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிசைகள் பற்றி எரிந்து புகை மேலெழும்புவது தெரிந்தது. இளைஞர்கள் கத்தி மற்றும் கம்புகளுடன் கிராமத்தின் நுழைவு பாதைகளில் பாதுகாப்பிற்காக நின்றனர்.

ஆனால் என்ன பயன்? “ராணுவ உடையில் 30க்கும் மேற்பட்ட போடா வன்முறையாளர்கள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்தனர். எங்களால் அவர்களை தடுக்க முடியவில்லை. எங்கள் கண் முன்னால் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள். வீடுகளை தீயிட்டு கொழுத்தினார்கள். விவசாயப் பொருட்களை கொள்ளையடித்தார்கள். துப்பாக்கி முனையில் எங்களை நிறுத்தி இங்கிருந்து சென்றுவிடுங்கள்” என மிரட்டினார்கள். கொக்ராஜர் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் நயான் அலி(வயது 22) கூறுகிறார்.

டெஹல்கா பத்திரிகை அஸ்ஸாமில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை வெளிக்கொணர்ந்துள்ளது.

நஸீருல்(வயது 4), ராக்கிஃபுல்(வயது 6) சகோதரர்களான இருவரும் போடோ இனவெறியர்களை கண்டதும் ஓடத் துவங்கினர். கொஞ்ச தூரம் சென்ற பிறகு இருவரும் திரும்பி பார்க்கையில் அவர்களது பெற்றோரை காணவில்லை. அவர்கள் திரும்பிச் சென்றபொழுது கிராமம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் உதவியற்ற நிலையில் அழுதுகொண்டிருந்தார்கள். அப்பொழுது அக்கிராமத்தின் மூத்த நபரான மும்தாஸ் அலி(வயது55) அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு உயிரை காப்பாற்ற தப்பிச் சென்றார்.
“நான் அச்சிறுவர்களை அடையாளங் கண்டுகொண்டேன். அவர்கள் நவ்ஷாத் அலி என்பவரின் பிள்ளைகள். நவ்ஷாதையோ அவரது மனைவியையோ காணமுடியவில்லை. எனவே அவ்விரு சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு உயிரைக் காப்பாற்ற நான் அங்கிருந்து பயந்து ஓடினேன்” என மும்தாஸ் அலி நடந்த நிகழ்வை நினைவு கூறுகிறார்.
கடந்த நான்கு தினங்களாக அச்சிறுவர்களின் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர். இதைப்போல நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் குடும்பத்தினரை காணாமல் அகதி முகாமில் உள்ளதாக அகதிகள் முகாமில் உள்ளோர் கூறுகின்றனர்.

பி.எல்.டி(போடோ லிபரேசன் டைகர்ஸ்) என்.டி.எஃப்.பி(நேசனல் டெமோக்ரேடிக் ஃப்ரண்ட்ஆஃப் போடோ லாண்ட்) ஆகிய கிளர்ச்சி பிரிவினைவாத போடோ குழுக்களை சேர்ந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளனர். கலவரம் நடத்துவதில் அனுபவம் பெற்றவர்கள் என கிராமவாசிகள் கூறுகின்றனர்.
ஆயுத கலகங்களில் இவர்கள் ஈடுபடுவதால் துப்பாக்கிகள் இவர்களுக்கு சுலபமாக கிடைக்கிறது. சிறுபான்மை சமுதாயங்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை தேடி இவர்கள் ஆவேசத்துடன் பாய்ந்து செல்கின்றார்கள்.

குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்தியது போன்ற திட்டமிட்ட இனப் படுகொலைகளை போடோ இனவெறிக் குழுக்கள் அஸ்ஸாமில் அரங்கேற்றியிருப்பதாக கூறப்படுகிறது.
மரண எண்ணிக்கை அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களை விட எத்தனையோ மடங்கு அதிகம் என கிராமவாசிகள் கூறுகின்றனர்.
உறவினர்கள் இல்லாத நூற்றுக்கணக்கான குழந்தைகள் அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். கொக்ராஜரில் ஒரு சிறிய பள்ளிக்கூடத்தை அகதிகள் முகாமாக மாற்றியுள்ளனர். 5 அறைகளை மட்டுமே கொண்ட இந்த பள்ளிக்கூடத்தில் 5 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

10 கர்ப்பிணி பெண்கள் தங்கியுள்ள இங்கு கடந்த நான்கு தினங்களாக ஒரு டாக்டர் கூட இல்லை. அரிசி மற்று குடிநீரை ரேசன் போல இங்கு அதிகாரிகள் விநியோகிக்கின்றனர். ஒரேயோரு கழிப்பறையை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்த வேண்டிய நிலை. இதனால் நோய் பரவும் வாய்ப்புள்ளது. தாங்கள் சந்தித்த பயங்கர அனுபவத்தின் காரணமாக மீண்டும் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் சென்றால் சுட்டுக் கொல்லப்படுவோம் என அஞ்சுகிறார்கள். வீடுகளை இழந்த முஸ்லிம்கள் தாங்கள் உயிரோடு இருப்பது அல்லாஹ்வின் கருணை என கூறுகிறார்கள்.


வண்ண வண்ண மின் விளக்குகளால்
மின்னும் மினாராக்கள்...
வித விதமான
அரேபிய பேரீச்சம் பழங்கள்,
பல ரகங்களில் பழ வகைகள் ...
பாத்திரம் வடிய நோன்பு கஞ்சி...
தாகம் தணிக்க குளிர் பழச் சாறு...
இப்தார் விருந்தால் இடமின்றி தவிக்கும்
பள்ளி வாசல்கள்...
அசைவ உணவின்றி முழுமை பெறாத
சஹர் நேர சாப்பாடு...

இவ்வாறாக பகலில் நோன்பும் மாலை நேரங்களில் கடை வீதிகளில் பெருநாள் துணி எடுப்பதுமாக நம்மிடையே கண்ணிய மிகு ரமலான் மாதம் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
அருள்மிகு மாதத்தை நாம் ஆனந்தமாய் அனுபவித்து வரும் நிலையில் நம் சகோதர முஸ்லிம்கள் அஸ்ஸாம், மியான்மர், மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அனுபவித்து வரும் இன்னல்களை கவனிக்கத் தவறிவிட்டோம். எனவே தான் அவர்கள் படும் துன்பங்கள் நம் உள்ளத்தில் எந்த வித உறுத்தலையும்  ஏற்படுத்தவில்லை.புனித ரமளானை இறையில்லங்களில் கழிக்க வேண்டிய  முஸ்லிம்கள்  இன்று நிவாரண முகாம்களில் இருட்டறையில் தங்கள் வாழ்நாட்களை கழித்து வருகின்றனர். நாம் நோன்பு துறக்க கஞ்சி குடித்து வரும் நிலையில், அங்குள்ள மக்கள் நோன்பு  வைக்கவே கஞ்சியின்றி பட்டிணி கிடந்து வருகின்றனர்.

பெருநாள் நெருங்கி வரும் நிலையில் நம் குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் புத்தாடைகளை எடுப்பதற்காக கடை கடையாக ஏறி இறங்கி கொண்டிருக்கிறோம். ஆனால் அஸ்ஸாம், மியான்மரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் உடுப்பதற்கு மாற்று துணி கூட இல்லாமல் கிழிந்த ஆடைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் அநாதைகளாகி விட்ட நிலையில் நூற்றுக்கனக்கான இளம் பெண்கள் தங்கள் கணவர்களை துப்பாக்கி  குண்டுகளுக்கு  பலி கொடுத்து விட்டு விதவைகளாக கண்ணீர் வடித்து வருகின்றனர். குடியிருந்த இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்டுவிட்டதால் வானமே கூரையாக தங்கள் வருங்காலத்தில் தாட்ட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


எனவே ,ஜனநாயகத்தின் நம்பிக்கை கொண்டுள்ள மக்களே! முஸ்லிம்களே! நமது கைகள் உயரட்டும் அல்லாவிடம் அஸ்ஸாம் முஸ்லிம்களுக்காக! ஓங்கி ஒலிக்கட்டும் நமதுகுரல்கள் மத்திய அரசை நோக்கி அஸ்ஸாம் முஸ்லிம்களுக்காக ! குவியட்டும் நமது உதவிகள் அஸ்ஸாம் முஸ்லிம்களுக்காக !

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

வாழ்க்கையின் அடுத்த கட்டம் எது ?

சமீபத்தில் சந்தித்த ஒரு வெற்றிகரமான பத்திரிக்கையாளர் சொன்ன கருத்து மிகவும் சிந்திக்க வைப்பது. வெற்றிகரமான பத்திரிக்கையாளராக இன்று வரை இருந்து வரும் அவர், விரைவில் பத்திரிக்கை தொழிலை விட்டு வேறு தொழிலுக்குச் செல்லப் போகிறேன் என்று கூறினார்.

ஏன் என்று கேட்டதற்கு, நான் பத்திரிக்கை தொழிலுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. தொடக்கத்தில் நான் பத்திரிக்கை தொழிலுக்கு வந்த போது, இந்தச் சமுதாயத்தையே மாற்றிப் போட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் வந்தேன். ஆனால் நாளடைவில் பத்திரிக்கை தொழிலில் இருந்து கொண்டு அது போல எதுவும் செய்ய முடியாது என்பது புரிந்து, ஏதோ நம்மால் இயன்றவற்றை செய்யலாம் என்று தான் இன்று வரை செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.

ஆனால், இருபது ஆண்டுகளுக்கு முன்பாவது பத்திரிக்கையில் எழுதினால் ஏதாவது ஒரு தாக்கம் இருக்கும். நடவடிக்கை இருக்கும். ஆனால் இப்போது சூழல் மிக மோசமாக மாறி விட்டது. ஆதாரத்தோடு பத்திரிக்கையில் எழுதினால் கூட எதுவுமே நடக்க மாட்டேன்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால், ரோடு சரியில்லை, விவசாயிகள் பிரச்சினை, காவல்துறையிலும் மற்ற துறைகளிலும் ஊழல் என்று நான் எழுதியது இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்றும், சாலை சரியில்லை, ஊழல் என்றுதான் எழுத வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும் போது, நான் எதற்காக பத்திரிக்கை துறையில் தொடர்ந்து இருக்க வேண்டும் ? ஜனங்களே காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் நிலைக்கு சமுதாயம் சீரழிந்து விட்ட நிலையில் வேறு ஏதாவது நேர்மையான தொழில் செய்து பிழைக்கலாமே என்று அவர் கேட்ட கேள்வி, சவுக்கை சிந்திக்க வைத்தது.

இருபது ஆண்டுகளாக இந்திய ஜனநாயகம் பின்னோக்கித் தானே செல்கிறது ? இருபது ஆண்டுகளுக்கு முன்பு, உண்ணாவிரதம் இருக்கவும், ஊர்வலம் செல்லவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும் இருந்த உரிமைகள் கூட இன்று இல்லையே ?

ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது எழுந்த முந்த்ரா ஊழலால், டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவி விலக நேரிட்டதே. ஒரே ஒரு ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினாரே.. …. ?

25 ஆண்டுகளுக்கு முன்பு கூட, சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக் கேட்கப் படுகிறது என்ற குற்றச் சாட்டுக்காக ராமகிருஷ்ண ஹெக்டே பதவி விலகினாரே ?

இன்று என்ன நிலை ? சட்ட விரோதமாக எதிர்க்கட்சியினர், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் படுகின்றன என்று தொடர்ந்து குற்றச் சாட்டுகள் வந்த போதும் குறைந்த பட்சம் குற்றம் சாட்டப் பட்ட நபரை அந்தப் பதவியை விட்டு மாற்றுவதற்கு கூட கருணாநிதி தயாராக இல்லை. மாற்றுவதற்கு தயாராக இல்லாததால், இந்த சட்ட விரோத ஒட்டுக் கேட்பின் பின்னணியில் உள்ளது கருணாநிதி தானோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ஊழலை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் ஊழல் பரவிக் கிடக்கிறது. ஊழல் புற்று நோயைப் போல, அனைத்து இடங்களிலும் புரையோடிப் போய் இருக்கிறது. ஆனால் இந்த ஊழலோடு சமரசம் செய்து கொண்டு, இந்த ஊழலில் நாம் எப்படி பங்கு பெறுவது என்ற ஆர்வத்தோடு உள்ளது நமது சமூகம். இப்படிப் பட்ட சமூகத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வர முடியும் ?

காந்தி படத்தில் ஒரு காட்சி வரும். தென் ஆப்பிரிக்காவில் காந்தி, வெள்ளையர் அல்லாதவர்களுக்காக வழங்கப் பட்ட அடையாள அட்டையை கொளுத்தும் போராட்டத்தை நடத்துவார். அந்த போராட்டத்தில் காந்தி கடுமையாக தாக்கப் படுவார். அதையொட்டி கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் படுவார்.

காந்தி தாக்கப் பட்டதையும், கைது செய்யப் பட்டதையும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை பெரிய அளவில் செய்தியாக வெளியிடும். இதைக் கண்ட தென்ஆப்பிரிக்க ஆங்கிலேய அரசாங்கம், உடனடியாக காந்தியையும் மற்றவர்களையும் விடுதலை செய்து உத்தரவிடும்.

இன்று ஊடகங்கள் இருக்கும் சூழலை எண்ணிப் பாருங்கள். எண்பது விழுக்காடு பத்திரிக்கைகள் முதல்வரின்  கட்டுப் பாட்டில் உள்ளன. இந்தச் சூழலில் கருணாநிதியை மீறி ஊடகங்களில் செய்தி எப்படி வெளி வரும் ? மீதம் உள்ள இருபது விழுக்காடு ஊடகங்கள் எதிர்க்கட்சி ஊடகங்களாக இருப்பதால் அதற்கான நம்பகத் தன்மை குறைவாக உள்ளது.

அதையும் மீறி ஏதாவது ஊடகத்தில் அரசுக்கு எதிரான செய்திகள் வருமானால், அதை எழுதிய செய்தியாளரைப் பற்றியும், அவர் சாதியைப் பற்றியும், விலாவரியாக ஆராய்ந்து, அவர்களுடைய நாளிதழிலேயே , படிக்கக் கூசும் அளவுக்கு, சிலந்தி, காராபூந்தி என்று ஏதாவது ஒரு பெயரில் எழுதுவது.

இதுதானே இன்றைய சூழல் ? இன்று சவுக்கு தளத்தில் வெளிவரும் குற்றச் சாட்டுகளை வெகுஜன ஊடகங்கள் வெளியிடத் தயாராக இருக்குமேயானால் சவுக்கு என்ற தளம் எதற்கு ?

அரசியல் சீரழிந்து விட்டது. ஊடகங்கள் தரம் தாழ்ந்து தங்களது சுதந்திர மன நிலையை இழந்து விட்டன. நம்பகத் தன்மையை இழந்து விட்டன. சரி நீதிமன்றத்திலாவது நியாயம் கிடைக்குமா என்றால், இது எல்லாவற்றையும் விட, மோசமான சூழலில் தான் நீதிமன்றம் இருக்கிறது.

தமிழில் பெயர் வைத்தால், வரி விலக்கு அளித்ததால் அரசுக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளது, இதனால் மொழி வளரவில்லை என ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசு எப்படி வேண்டுமானாலும் வரி விலக்கு வழங்கலாம் என்று தீர்ப்பு.

போலி என்கவுண்டரில் தொடர்ந்து படு கொலைகள் நடந்து வருகின்றன என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், வழக்கு நிலுவையில் இருக்கும் போதே தொடர்ந்து என்கவுண்டர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஐபிஎல் மார்ச் மாதத்தில் நடத்துவதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், இது குறித்து மத்திய அரசுக்கு புகார் அனுப்பவும் என்று தீர்ப்பு.
காவல் நிலையத்தில் காவல்துறையினரால் ஒரு நபர் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசு நியமித்துள்ள ஆர்.டி.ஓ விசாரணையை நம்பி, பொது நல வழக்கை தள்ளுபடி செய்யும் உயர்நீதிமன்றம்.

அணு உலை நஷ்ட ஈடு மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப் படுத்துவதற்கு முன் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசுக்கு நோட்டீஸ் கூட வழங்காமல் வழக்கை தள்ளுபடி செய்யும் சென்னை உயர்நீதிமன்றம்.

நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா இந்தியாவில் இருக்கும் போது அவனை கைது செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், பத்திரமாக டக்ளஸ் இலங்கைக்கு திரும்பிச் செல்லும் வரை, வழக்கை தள்ளி வைத்து விட்டு, இலங்கை சென்றவுடன், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் ஒரு தலைமை நீதிபதி.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு  வண்டி தள்ளுபவர்கள் திடீரென்று ஒரே நாளில் 75 லட்ச ரூபாய் கட்டுகிறார்கள். அது ஊழல் செய்து சம்பாதித்த சொத்தாக இருக்கும் அதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தால் விசாரணை இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், அவர்கள் மூன்று பேரும் அந்த மனையை “கை மாற்றி“ விட்டு விட்டதால் அவர்கள் மீது விசாரணை நடத்த எவ்வித முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பு கூறும் ஒரு நீதிபதி.

பள்ளிக் கட்டணத்தை சீரைமைக்க அமைக்கப் பட்ட கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்க தடை விதிக்கக் கோரி மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகங்கள் நீதிமன்றத்தை அணுகிய வழக்கில், மாணவர்கள் சார்பில் ஒரு பொது நல விரும்பி, அந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டி அணுகிய போது, கோவிந்தராஜன் கமிட்டி வருவதற்கு முன்பு எப்படி பீஸ் கட்டினீர்கள் என்று கேட்கும் ஒரு பொறுப்பற்ற நீதிபதி.

இந்தச் சூழலில் தான் நாம் இருக்கிறோம். நமக்கு முன்னே இப்போது இருப்பது ஒரு சில வழிகள் தான்.

ஒன்று எது நடந்தாலும் கவலைப் படாமல் அமைதியாக நமது வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்பது

இரண்டு, கொள்ளையடிப்பவர்களோடு சேர்ந்து கொண்டு நாமும் நமது பங்குக்கு கொள்ளையடிப்பது.

இந்த அநியாயங்களை காணச் சகியாமல், அஷோக் குமார் போல தற்கொலை செய்து கொள்வது.

அல்லது, எது வந்தாலும் சரி. நான் கொண்ட கொள்கையில் இருந்து பின் வாங்க மாட்டேன். அநியாயங்களை எதிர்த்து தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன் என்று போராடுவது.

இதில் எது வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

இன்றைய தாராளமய பொருளாதார சூழலில், எந்த வழியிலாவது உடனடியாக பணக்காரனாக வேண்டும், ஊரை அடித்து உலையில் போட்டாவது நான் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏறத்தாழ 98 சதவிகித மக்களின் மனநிலை உள்ள சூழலில் எழுதுவதையும், நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, தொடர்ந்து போராடுவதையும் தவிர வேறு என்னதான் செய்வது என்று சவுக்குக்கு தெரியவில்லை. சவுக்கின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லையா என்றும் தெரியவில்லை. நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
 
---சேயன்னா மூனா 

பி.எட். படிப்பில் சேர 11-ந் தேதி(நாளை) முதல் விண்ணப்பம்


தமிழ்நாட்டில் 2 கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்பட 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும், 650-க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் இருக்கின்றன. அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் 2095 பி.எட். இடங்களும், தனியார் கல்லூரிகளில் ஏறத்தாழ 65 ஆயிரம் சீட்டுகளும் உள்ளன.
அரசு மற்றும் உதவி கல்லூரிகளில் உள்ள இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படும். தனியார் கல்லூரிகள் விருப்பப்பட்டு ஒப்படைக்கும் இடங்களையும் கவுன் சிலிங் மூலமாகவே நிரப்புகிறார்கள். வழக்கமாக பி.எட். மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு ஜுலை மாதம் வெளியிடப்பட்டு உடனடியாக விண்ணப்ப படிவங்களும் கொடுக்கப்பட்டுவிடும்.

ஆனால், இந்த ஆண்டு அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரும் பி.எட். படிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், பி.எட். மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது.

இதற்கான விண்ணப்ப படிவம் 11-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 18-ந்தேதி வரை ஒரு வார காலம் வழங்கப்பட உள்ளது.
சென்னையில் திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும், சைதாப்பேட்டையில் உள்ள கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

மேலும், ஒரத்தநாடு, குமாரப்பாளையம், புதுக்கோட்டை, கோவை, வேலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், உதவி பெறும் கல்லூரிகளான சேலம் பேர்லேண்ட்ஸ் ஸ்ரீ சாரதா, காந்திகிராமம் லட்சுமி, மதுரை தியாகராஜர், தூத்துக்குடி வ.உ.சி., பாளையங்கோட்டை இக்னேஷியஸ், திருவட்டாறு என்.வி.கே.எஸ்.டி. ஆகிய கல்வியியல் கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம் ரூ.300. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.175 மட்டும். விண்ணப்ப கட்டணத்தை பணமாகவோ, டிமாண்ட் டிராப்டாகவோ (செயலாளர், தமிழ்நாடு பி.எட். அட்மிஷன், சென்னை-5 என்ற பெயரில்) மேற்கண்ட கல்லூரிகளில் சமர்ப்பித்து விண்ணப்பத்தை வாங்கலாம்.
எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் விண்ணப்பம் வாங்கச்செல்லும்போது தங்கள் அட்டஸ்டேஷன் செய்யப்பட்ட சாதி சான்றிதழ் நகலை எடுத்துச்செல்ல வேண்டும். சுதந்திர தினநாள் நீங்கலாக மற்ற அனைத்து நாட்களிலும் (சனி, ஞாயிறு உட்பட) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 18-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு முதல்முறையாக தனியார் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டி இந்த கட்டணத்தை நிர்ணயம் செய்தது. அதன்படி, தனியார் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு கல்விக்கட்டணமாக ரூ.41,500-ம், தர அங்கீகாரம் பெற்றிருந்தால் ரூ.46,500-ம் வசூலித்துக்கொள்ளலாம்.