Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 11 ஜூலை, 2012

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? ---- புவியியல் துறை


படிப்பதில் ஆர்வத்தை தூண்டும் துறைகளில் ஒன்று புவியியல். நிலம், நீர், காற்று, தட்பவெப்பம், மலை, காடு, கடல், இயற்கை இடர்ப்பாடுகள், நிலத்தின் தன்மை, புவியின் எதிர்காலம், பனிப்பிரதேசம் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது. இன்றைய தொழிற்புரட்சி யுகத்தில் புவியியல் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இத்துறை, இயற்பியல் ரீதியான புவியியல் மற்றும் மனித சம்பந்தப்பட்ட புவியியல் என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் புவியியல் படிப்பு பி.ஏ, பி.எஸ்.சி நிலைகளில் வழங்கப்படுகிறது. புவியியல் படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் ஆராய்ச்சி படிப்புகளுக்கு செல்லலாம். ஆசிரியர் பணியிலும் ஈடுபடலாம்.
நகர்மயமாக்கல் படிப்பில் முதுநிலை டிப்ளமோ முடித்தால் பரவலான வேலைவாய்ப்பு, நல்ல சம்பளம் நிச்சயம். இப்படிப்புக்கு முதுநிலையில் குறைந்தது 55 மதிப்பெண்கள் வேண்டும். நுழைவு, நேர்முக தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். சுற்றுச்சூழலியல் மற்றும் வன மேலாண்மை துறை சார்ந்த நிறுவனங்களும் புவியியல் பட்டதாரிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கின்றன. அரசு, ஆராய்ச்சி அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் வியாபார ஆலோசனை மய்யங்களில் வேலைகள் காத்திருக்கின்றன.
டில்லி பல்கலையின் புவியியல் பாடத்திட்டத்தில், பேரிடர் மேலாண்மை படிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. முதுநிலை புவியியல் படிப்புடன், பேரிடர் மேலாண்மையில் டிப்ளமோ படித்தால் சிறப்பான வேலைவாய்ப்பு உண்டு. இக்னோ மற்றும் டில்லி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் ஆகியவை இப்படிப்பை வழங்குகின்றன. முதுநிலை புவியியல் முடித்த பிறகு ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் படிக்கலாம். இதுதொடர்பான படிப்புகளை டேராடூனில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனத்தில் மேற்கொள்ளலாம்.
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் இப்படிப்புகளை வழங்குகின்றன. இதை முடிப்பவர்களுக்கு, இஸ்ரோ, தேசிய ரிமோட் சென்சிங் ஏஜென்சி, தேசிய தகவல்தொடர்பு மய்யம், வானிலை பயன்பாட்டு நிலையம் ஆகியவற்றில் பணி கிடைக்கும். அரசுத்துறைகளை பொருத்தவரை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம், சர்வே ஆப் இந்தியா, விண்வெளி பயன்பாட்டு மையம், நகர மற்றும் கிராம மேம்பாட்டுத் துறைகள், மாநகர மேம்பாட்டு ஆணையம், உள்ளிட்டவற்றில் பணிகள் கிடைக்கும். நகர்ப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பு திட்டமிடல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டிருக்கும் தனியார் நிறுவனங்களும் வேலைவாய்ப்புகளை அளிக்கின்றன.

மியான்மாரில் ஜனநாயகம் மலர்ந்துவிட்டதா? சந்தேகத்தை கிளப்பும் அரசு அறிவிப்பும் ,கலவரமும் ..........

மியான்மரில் ரகின் மாகாணத்தில் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டுள்ளதால், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மியான்மரில் சமீபகாலமாக ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. வீட்டுக் காவலில் பல ஆண்டு காலம் அடைக்கப்பட்டிருந்த ஜனநாயக தலைவர் ஆங் சாங் சூகி தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகி உள்ளார்.
இதையடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை அகற்ற, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன்வந்துள்ளன.
இந்நிலையில் வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள ராகின் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டுள்ளது.
ராகின் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் 8 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்கள் மியான்மரில் குடியுரிமை கேட்டு போராடி வருகின்றனர்.
குடியுரிமை அளிக்க மியான்மர் அரசு மறுத்து விட்டது. இதற்கிடையே முஸ்லிம்களின் குடிசைகளை தீ வைத்து கொளுத்தி விட்டதாக கூறி, கடந்த வாரம் பெரிய அளவில் கலவரம் மூண்டது. இதில் 50 பேர் பலியாயினர்.
இதையடுத்து மவுங்தா பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, காலை முதல் இரவு வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதட்டமான சூழல் இங்கு நிலவுவதால், ஐ.நா அமைப்பின் ஊழியர்கள் 44 பேர் பாதுகாப்பு கருதி மவுங்தா பகுதியிலிருந்து நேற்று வெளியேறி யாங்கூன் நகருக்கு சென்று விட்டனர்.
மியான்மாரில் ஜனநாயகம் மலர்ந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை கிளப்பும் வகையில் அரசு அறிவிப்பும் ,அங்கு நடைபெறும் கலவரமும் அமைந்துள்ளது .உண்மையான ஜனநாயகம் எப்போது மலரும் ? என்பதுதான் நடுநிலையாளர்களின் கேள்வியாக உள்ளது .

தியாகப் பணிக்கு படிக்க மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துவிட்டதோ ?

ஆசிரியர் பயிற்சி படிப்பிற்குஇந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், திருச்சியில், 5ம் தேதி முதல், 8ம் தேதி வரை நடந்தது.மாநிலம் முழுவதும் இருந்து, 3,864 பேர் விண்ணப்பித்தனர். தகுதி வாய்ந்த 3,843 மாணவருக்கு, கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆனாலும், 2,000த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், கவுன்சிலிங்கிற்கு வந்தும், 1,998 மாணவர் மட்டுமே, பயிற்சியில் சேர உத்தரவு பெற்றனர்.இவர்களில், மாணவர் எண்ணிக்கை, வெறும் 200 பேர் தான். மீதமுள்ள அனைவரும், மாணவியர். ஆசிரியர் பயிற்சி முடித்தால், எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையும், இந்த பயிற்சியை முடிக்கும் பெண்களுக்கு, எளிதில் திருமண வாய்ப்பு கை கூடுவதும் தான், மாணவியர் அதிகளவில் இப்பயிற்சியை பெறக் காரணம் என, துறைவட்டாரங்கள் தெரிவித்தன.

ஆய்வு மேற்கொள்வோம்:

அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளிலேயே, 2,720 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் கூட நிரம்பாதது, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தை, கவலை அடையச் செய்துள்ளது. இதுகுறித்து, துறை வட்டாரங்கள் கூறியதாவது: இந்த பயிற்சிக்கு வரவேற்பு குறைந்து, வேலை வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டதன் காரணமாக, எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில், ஆசிரியர் பயிற்சி படிப்பு, சில ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதே போன்ற ஒரு   நிலை, வரும் காலங்களில் ஏற்படும் என தெரிகிறது17 ஆயிரம் இடங்கள் கவுன்சிலிங்கில் இருந்தும், 11.75 சதவீத இடங்கள் தான் நிரம்பியுள்ளன. தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில், 50 பள்ளிகள் மூடப்பட்டன. இது, வரும் காலங்களில் தொடரலாம். இந்தப் பள்ளிகளில், பி.எட்., கல்லூரி உள்ளிட்ட, வேறு கல்வி நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கு, தனியார் ஆர்வம் காட்டுகின்றனர். ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு, மவுசு குறைந்து வருவதால், இதுகுறித்து ஆய்வு மேற்கொள்வோம்.இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


20 ஆண்டுகளாக போராடியவருக்கு பேஸ்புக் மூலம் வெற்றி


மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் மணி. இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற தோட்டத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர். இந்தோ - ஸ்ரீலங்கா ஒப்பந்தப்படி, வீட்டுமனை, வேலை வழங்கப்படும் எனக்கூறி, பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு 125 பேருடன் அனுப்பப்பட்டார். மதுரையில் அவர் பணியாற்றிய மில் மூடப்பட்டதால், பணபலன் கிடைக்காமல் வறுமையில் வாடினார். 1983 முதல் வீட்டுமனை கேட்டு, தாசில்தார், கலெக்டர் என விண்ணப்பம் மேல் விண்ணப்பம் அனுப்பினார். பலனில்லை.

ஒரு ஆண்டாக லேடி டோக் கல்லூரியில், குறைந்த சம்பளத்தில் தோட்டக்காரராக பணியாற்றும் மணிக்கு, பேராசிரியை கிறிஸ்டியானா உதவ முன்வந்தார். இவர் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் மனு வழங்கினார். எனினும், பலன் இல்லை. பின் கலெக்டர் அன்சுல்மிஸ்ரா சமீபத்தில் உருவாக்கிய, கலெக்டர் அலுவலக "பேஸ் புக்'கில் தொடர்பு கொண்டு மனு அளிக்க பேராசிரியை கிறிஸ்டியானா உதவினார். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் அன்சுல்மிஸ்ரா அதில் பதிலளித்தார்.

இதுவரை என்னென்ன நடந்துள்ளது என விபரம் கேட்டார். அப்போதுதான் மணிக்கு பூரண நம்பிக்கை பிறந்தது. விபரங்களை தெரிவித்ததும், கலெக்டர் விசாரணை நடத்தி, மணிக்கு ஏற்கனவே இடம் ஒதுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். ""உடனே உத்தரவு வழங்கப்படும்; பெற்றுச் செல்லுங்கள்,'' என்று தெரிவித்தார். இதையடுத்து மணிக்கு கருப்பாயூரணி அருகே 2 சென்ட் அளவில் இலவச வீட்டுமனை ஒதுக்கப்பட்டுள்ளது. 29 ஆண்டுகளில் 28க்கும் மேற்பட்ட கலெக்டர்களால் முடியாத பிரச்னைக்கு, அன்சுல்மிஸ்ராவின் புதுமுயற்சியான "பேஸ்புக்' மூலம் தீர்வு கிடைத்தது.

செவ்வாய், 10 ஜூலை, 2012

இ-டாய்லெட் குற்றாலத்தில் .......

 "குற்றாலத்தில் "இ டாய்லெட்' வசதி வரும் 26ம் தேதி துவக்கப்படுகிறது' என தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் கூறினார். குற்றாலத்தில் சீசன் களை கட்டி வருகிறது. இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் மெயின் அருவி, பழையகுற்றாலம் பகுதியை எம்.எல்.ஏ.,சரத்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


மெயின் அருவி பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க டவுன் பஞ்.,நிர்வாக அதிகாரியிடம் எம்.எல்.ஏ.,கூறினார். மேலும் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதை எம்.எல்.ஏ., பார்வையிட்டார். உண்மையிலேயே தூய்மையான குடிநீர் வழங்கப்படுகிறதா என குடிநீரை குடித்து பார்த்து சரத்குமார் ஆய்வு செய்தார்.


 பழைய குற்றால அருவிக்கு சென்று ஆய்வு நடத்திய எம்.எல்.ஏ.,விடம் அங்கு அடிப்படை வசதிகள் மேன்மைபடுத்தப்பட வேண்டும் என்பதை பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதன் பின்னர் எம்.எல்.ஏ.,சரத்குமார் நிருபர்களிடம் கூறும் போது, ""குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் செய்து கொடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 26ம் தேதி "இ டாய்லெட்' வசதி குற்றாலத்தில் துவக்கப்படுகிறது. மெயின் அருவி அருகில் பெண்கள் துணிகளை துவைப்பதால் தண்ணீர் மாசுபடுகிறது. மேலும் பழைய துணிகள் ஆற்றில் விடப்படுகிறது. 

திங்கள், 9 ஜூலை, 2012

திமுக எம்.பிக்கு அதிமுக அரசு பதவி :கலைஞர் ராஜினாமா செய்யச்சொல்வாரா ?

  கடந்த 15 /06 /2012 அன்று தமிழக வக்ப் வாரிய உறுப்பினர்களாக தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகம்மது ஜான், எம்.எல்.ஏ. அப்துல்ரகீம், காங்கிரஸ் எம்.பி.  ஹாரூன், திமுக எம்.பி. ஜின்னா மற்றும் தமிழ்மகன் உசேன், பாரூக், தலைமை ஹாஜி (சன்னி) சலாஹுதீன் அய்யூப், தலைமை ஹாஜி மெஹ்திகான் ஆகிய 8 பேரை நியமித்து  தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

      அதிமுக அரசு திமுக காரர்களை பழி வாங்கி வருகிறது ,பொய் வழக்கு போடுகிறது என்றும் ,மக்களுக்கு நல்லாட்சி தரவில்லை என்றும் தினசரி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு வருகிறார் .சமீபத்தில் அதிமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டமும் திமுக நடத்தியது .திமுக வை குறை கூறிய மார்க்சிஸ்ட் செயலாளர் ராமகிருஷ்ணனுக்கு  அதிமுக வினரின் குறை கண்ணுக்குத் தெரியவில்லையா? என்று கேள்வி கேட்டுக்கூட கலைஞர் அறிக்கை வெளியிட்டுள்ளார் .
        இந்த சூழலில் ,திமுக வின் எதிரியாக திமுக வினரால் கருதப்படும் அதிமுக அரசு திமுக வின் மாநிலங்களவை உறுப்பினர் ஜின்னாவை   தமிழக அரசு வக்ப் வாரிய உறுப்பினராக நியமித்துள்ளது .அதிமுக வை ,அதன் ஆட்சியை சரமாரியாக எதிர்த்து வரும் திமுக தலைவர் கலைஞர் ஜின்னாவை அந்தபதவியை ஏற்க மறுக்கச்சொல்வாரா ?  என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் .

ஒரு ரூபாய்க்கு ஒரு பச்சைமிளகாய் :ஜெயா அரசு கவனம் செலுத்துமா ?

ஊட்டியில், மலைக் காய்கறிகளின் விலை, வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது; ஒரு பச்சை மிளகாய், ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஊட்டியில் உருளைக் கிழங்கு, பீட்ரூட், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், ஊட்டி அவரை, பச்சை மிளகாய் உட்பட காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. தும்மனட்டி, கூக்கல் தொரை, முத்தொரை பாலாடா, ஓல்டு ஊட்டி, பொரையரட்டி, நஞ்சநாடு, மணியட்டி உள்ளிட்ட கிராமங்களில், காய்கறி விவசாயம் நடக்கிறது.

உள்ளூர் மக்களின் தேவைக்கு மட்டுமின்றி,காய்கறிகள் மேட்டுப்பாளையம் சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அனுப் பப்படுகின்றன.

ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெய்யும் கோடை மழை, இந்தாண்டு போதுமானதாக இல்லை; மேலும், கடந்த ஏப்ரல் மாதம், சில கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால், பல ஏக்கர் விவசாயப் பயிர்கள் நாசமாகின. இதனால், மகசூல் குறைந்து, கடந்தாண்டை விட, தற்போது 20 முதல் 40 சதவீதம் வரை, மலைக் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
ஊட்டியைச் சேர்ந்த மொத்த காய்கறி வியாபாரி ரியாஸ் கூறுகையில், ""ஊட்டியில், இம்முறை போதிய மழை பெய்யவில்லை; அதிகளவு நீர் தேவைப்படும் பச்சை மிளகாய், அவரை போன்றவற்றின் மகசூல், தண்ணீர் இல்லாததால் குறைந்துவிட்டது.

பச்சை மிளகாய் விலை, இதுவரை இல்லாதவாறு, கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது; ஒரு பச்சை மிளகாய் ஒரு ரூபாய் என்ற அளவில் விற்க வேண்டியுள்ளது. என்றார்.


 "நூறாண்டு சாதனை ஓராண்டில் "என்று மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து விளம்பரம் செய்யும் ஜெயா அரசு ,மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமா ? என்பது தான் தமிழக மக்களின் கேள்வியாகும் .