Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 5 ஜூலை, 2012

சீமானின் ஈழத் தமிழர் ஆதரவு போலித்தனமானது :திருமாவளவன்

ஆனந்த விகடன் கேள்விக்கு தொல்.திருமாவளவன் அளித்த பதில்

''பெரியார் குறித்தும் திராவிடம் குறித்தும் அண்மைக் காலமாக எழுந்துள்ள சர்ச்சைகளில் உங்கள் நிலைப்பாடு என்ன?''


''என்னைப் பொறுத்தவரை அம்பேத்கரை எப்படிப் பார்க்கிறேனோ, அப்படித்தான் பெரியாரையும் பார்க்கிறேன். பெரியார் வாழ்ந்த காலத்தின் நிலவியல், அரசியல் போன்றவற்றைப் புரிந்துகொள்ளாமல் எதுவும் பேசக் கூடாது. அப்போது ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியவற்றை உள்ளடக்கிய சென்னை மாகாணம் இருந்தது. தமிழ்நாடு அப்போது உருவாகவில்லை. அந்தச் சமயத்தில் திராவிடர் கழகத்தை உருவாக்கினார் பெரியார். திராவிடக் கருத்தியலைப் பேசினார். அது சரிதான். அதன் பின்னரே 1956-ல் மொழிவழி மாகாணங்கள் உருவாகி தமிழ்நாடு உருவானது. இன்றைக்கு தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பது சரியானதே. ஆனால், இன்றைக்கு தமிழ்த் தேசியம் பேசவே, அன்றைக்குப் பெரியார்தான் வித்திட்டார் என்பதை மறந்து, திராவிடத்தை முற்றிலுமாகப் புறந்தள்ளுவது நன்றியுணர்வு அற்ற செயல். பெரியாரிடம் கருத்து மாறுபட் டால் விமர்சனம் செய்யலாம். ஆனால், அவரையும் திராவிடக் கருத்தியலின் பங்களிப் பையும் கொச்சைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. அப்படிக் கொச்சைப்படுத்துபவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் எத்தகை யது? தமிழ்த் தேசியம் என்பது இந்துத்துவத் தேசியத்தை, இந்திய தேசியத்தை, இந்தி தேசியத்தை எதிர்ப்பதாக, சாதிகளை ஒழிப்பதாக இருக்க வேண்டும். வெறும் மொழி உணர்வு, இன உணர்வு என்கிற அடிப்படையில் எழும் தமிழ்த் தேசியம் சரியானது அல்ல. ஈழ மக்களை நான் ஆதரிக்கிறேன் என்றால், அங்கு வாழ்பவர்கள் தமிழர்கள் என்பதால் அல்ல; அங்கே அவர்கள் சிங்கள ஒடுக்குமுறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால்தான். ஆனால், ஈழத்தை ஆதரிக்கிறவர்கள் அங்கே வாழ்ப வர்கள் தமிழர்கள் என்கிற ஒரே காரணத்துக் காக ஆதரிக்கிறார்கள். இங்கே தமிழ்நாட்டில் பரமக்குடியில் உள்ள தலித் தமிழர்கள் கொல்லப்பட்டால் கேட்கத் துணிச்சல் இல்லாதவர்கள், ஈழத்தில் நடந்தால் மட்டும் கூக்குரல் இடுவேன் என்பது போலித்தன மானது!''


 
நன்றி : ஆனந்தவிகடன் 
11-ஜூலை -2012

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா யாத்திரை

பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாத்தின் மாண்பை காக்கவும், வலிமை படுத் தவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொள்ளும் மாநிலம் தழுவிய மஹல்லா யாத்திரையை ஜுலை-7 சனிக்கிழமை முதல் நெல்லை மாவட்டம் தென்காசியி லிருந்து தொடங்குவது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்டத்தில்
 முடி வெடுக்கப்பட்டுள்ளது.

 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் 04-07-2012 புதன் கிழமை காலை 11 மணிக்கு சென்னை - 1 மரைக்காயர் லெப்பை தெருவில் உள்ள இலக்கம் 36, காயிதெ மில்லத் மன்ஸிலில் தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில்  நடைபெற்றது.
 மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

 கூட்டத்தின் நோக்கம் குறித்து தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விளக் கினார். இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
 பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத் தின் மாண்பை காக்கவும் அதனை வலிமைப்படுத்தும் வகையில் ஷரீஅத் பஞ்சாயத், பைத்துல்மால், மதரஸாக்கள் ஓராசிரியர் பள்ளி உள்ளிட்ட வைகளை உருவாக்கவும் வலி யுறுத்தும் வகையில் மஹல்லாக் கள் தோறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் யாத்திரை செல்வதென்று 2012 ஏப்ரல் 14ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு எடுத்த முடி வின் படி எதிர் வரும் ஜுலை 7ம் தேதி முதல் நெல்லை மாவட்டம் தென்காசியிலிருந்து இந்த மஹல்லா யாத்திரையை தொடங்குவதெனவும்,இக்கூட்டம் முடிவு செய்கிறது.

 இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சேவை திட்டங்களில் ஒன் றான புனித ரமளான் மாதத்தில் கடந்த காலங்களில் செய்த பணிகளை குறிப்பாக ஏழை களுக்கு உணவுப்பொருட்கள், புத்தாடைகள், வழங்குதல் சகோதரதுவத்தை வலியுறுத் தும் இப்தார் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்டவை களை இன்னும் சிறப்பாக செய்ய பிரைமரி அமைப்புகளை இக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

ரமளான் மாதத்திற்கு பள்ளி வாசல் நிர்வாகங்களுக்கு உத வும் வகையிலும், பள்ளிவாசல் களை தூய்மைப் படுத்தும் வகையிலும், பணியாற்ற முஸ் லிம் மாணவர் பேரவை மற்றும் முஸ்லிம் யூத் லீக் செயல்வீரர் களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

 இந்த ஆண்டு ரமளான் மாத நோன்பு ஜுலை 21ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. ரமளான் மாதத்தில் நோன்பு கஞ்சி நோன்பாளிகளுக்கும் அப்பகுதி யில் வாழும் சகோதர சமுதாய ஏழை எளிய மக்களுக்கும் வழங்கப்படுகிறது.

பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சிக்கான பச்சரிசி அல்லது பச்சரிசி குருணையை தமிழக அரசு மானிய விலையில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு அதிகாரிகள் வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப் படாத பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க முடியாது எனக் கூறி விண்ணப்பங்களை நிரா கரித்துள்ளனர்.

நோன்பாளிகளுக்கு உதவும் வகையில் அரிசி வழங்கப்படு கிறதேயன்றி பள்ளிவாசல் நிர் வாகங்களுக்கு அரிசி வழங்கப்படுவதில்லை. இந்த அடிப்படை அம்சத்தை கவனத் தில் கொண்டு வக்ஃப் வாரியத் தில் பதிவு பெற்ற பள்ளி பதிவு பெறாத பள்ளி என பாகுபாடு காட்டாமல் அனைத்து பள்ளி களுக்கும் நோன்பு கஞ்சி அரி சியை வழங்கவும், அதனை நோன்பு துவங்கும் ஜுலை 21ம் தேதிக்கு முன்னதாகவே வழங் கிட சம்மந்தப்பட்ட அதிகாரி களுக்கு உத்தரவு பிறப்பிக்கவும் தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

புதன், 4 ஜூலை, 2012

டெங்குவை தொடர்ந்து பீதி கிளப்பும் பேதி .............


நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம், ரகுமானியபுரம், முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு தீடீரென வாந்தி பேதி ஏற்பட்டது. இதனால் பலர் தென்காசி மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  70க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது கடையநல்லுலூர் மக்களிடையே மேலும் பீதீயை ஏற்படுத்தியுள்ளது. வாந்தி பேதி காரணமாக கடையநல்லூர் பகுதியில் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

செவ்வாய், 3 ஜூலை, 2012

நேர்மை ஜெயாவிற்கு தமிழில் பிடிக்காத வார்த்தையோ ?


அங்கன்வாடி, சத்துணவு காலிப் பணியிடங்களை எந்தவித பரிந்துரைக்கும், கையூட்டுக்கும் இடமின்றி நிரப்புவதற்கு விரைவான நடவடிக்கை எடுத்த, விருதுநகர் கலெக்டர் பாலாஜி என்பவரை மாறுதல் செய்து வேறு பணியிடம் எதுவும் கொடுக்காமல், காத்திருப்போர் பட்டியலில் தமிழக  அரசு வைத்திருக்கிறது.

           பொதுமக்களுக்கு நன்மைகள் பல சட்டப்படி கிடைக்கசெய்தார் பாலாஜி .ஆக்கிரமிப்புகள் அகற்றம் ,அரசு அதிகாரிகள் நேர்மையுடன் செயல் பட உத்தரவு ,அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்த்தல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி நேர்மையாக செயலாற்றி வந்த கலெக்டர் என்று மக்கள் பாராட்டும் ஆட்சியர் திரு .பாலாஜி .

        அங்கன்வாடி, சத்துணவு காலிப் பணியிடங்களை எந்தவித பரிந்துரைக்கும், கையூட்டுக்கும் இடமின்றி நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டதால் காத்திருப்போர் பட்டியலில் ஜெயா அரசால் வைக்கப்பட்டுள்ளார் ."நேர்மை" என்ற வார்த்தை தமிழில் ஜெயா விற்கு பிடிக்காத வார்த்தையோ என்று விருதுநகர் மாவட்ட மக்கள் பேசிக்கொள்கின்றனர் .
     

திங்கள், 2 ஜூலை, 2012

கேரளமாநில IUML பொதுச்செயலாளராக ஊழியர் திலகம் கே.பி.அப்துல் மஜீத் தேர்வு

இந்திய இஸ்லாமிய சமுதாயத்தின் தாயகமாம்  கேரளாவில் மிக வலிவோடும் ,பொலிவோடும் இந்திய இஸ்லாமிய மக்களின் அரசியல் பிரதிநிதித்துவ சபையான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாற்றி வருகின்றது .

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில நிர்வாகி கள் தேர்தல் தேசிய தலைவர் இ.அஹமது சாஹிப் தலைமை யில் நேற்று மாநில தலைமையக மான கோழிக்கோடு லீக் ஹவுஸ் சி.ஹெச். முஹம்மது கோயா அரங்கில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், கேரள அமைச் சர்கள் குஞ்ஞாலி குட்டி, எம்.கே. முனீர், இப்ராஹீம் குஞ்சு, மஞ்ஞனம்குழி அலி, அப்துர் ரப் மற்றும் 15 சட்டமன்ற உறுப்பினர் கள், மாநில பொதுக்குழு உறுப் பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கேரளா மாநிலத்தலைவராக பானக்காடு ஹைதர் அலி சிஹாப் தங்கள் அவர்களும் ,பொதுச்செயலாளராக ஊழியர் திலகம் கே.பி.அப்துல் மஜீத் சாஹிப் அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள் .


மேலும் ,கீழ்க்கண்டவர்களும் கீழ்க்கண்ட பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர் 
பொருளாளர்: பி.கே.கே. பாவா (முன்னாள் அமைச்சர்)

துணைத்தலைவர்கள்

சி.டி. அஹ்மது அலி, (முன்னாள் அமைச்சர்)

எம்.ஐ. தங்ஙள் (பேச்சாளர், எழுத்தாளர்)

வி.கே. அப்துல் காதர் மௌலவி

பி.ஹெச். அப்துஸ் ஸலாம் ஹாஜி

கே. குட்டி அஹ்மது குட்டி (முன்னாள் அமைச்சர்)

மாநில செயலாளர்கள்

பி.வி. அப்துல் வஹாப் (முன்னாள் எம்.பி.)

டி.பி.எம். ஷாஹிர் (கோழிக் கோடு முன்னாள் மாவட்ட செயலாளர்)

பி.எம்.ஏ. சலாம் (கலைக் கப்பட்ட இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர்)

எம்.சி. மாயின் ஹாஜி (கோழிக்கோடு மாவட்ட முன்னாள் தலைவர்) டி.எம். சலீம் (இடுக்கி ஜில்லா தலைவர்)

உயர் நிலை அரசியல் ஆலோசனைக் குழு

ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள், இ.அஹமது, பி.கே. குஞ்ஞாலி குட்டி, இ.டி. முஹம்மது பஷீர், கே.பி.ஏ. மஜீது,

விசேஷ அழைப்பாளர் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள்.

மாநில கட்சி விவகாரங் களுக்கு பி.கே. குஞ்ஞாலி குட்டியும், அறக்கட்டளை மற்றும் ஊடகத் துறையின் செய்தி தொடர்பாளராக இ.டி. முஹம் மது பஷீரும் தேர்வு செய்யப்பட்ட னர்.

தென்பொதிகை சாரல் : மீண்டும் களை கட்டிய குற்றாலம்


குற்றாலத்தில் குளு,குளு சீசன் நிலவுகிறது. அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை 3 மாதங்கள் சீசன் காலம் ஆகும். சீசன் காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்து அருவிகளில் குளித்து மகிழ்வர்.
கடந்த ஆண்டு சீசன் சரியான நேரத்தில் அதாவது ஜுன் 1-ந்தேதி அதிரடியாக துவங்கியது. தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருமளவு கொட்டியது. ஆனால் இந்தாண்டோ நிலைமை தலைகீழாக உள்ளது. கடந்த 7-ந்தேதி மெயினருவியில் தண்ணீர் விழத்தொடங்கியது. ஒரு வார காலம் மட்டுமே தண்ணீர் விழுந்த நிலையில், அதன் பிறகு குற்றாலம் பகுதியில் சாரல் இல்லாததால் அருவிகளில் நீர்வரத்து பெருமளவு குறைந்துவிட்டது.
மெயினருவி மற்றும் ஐந்தருவியில் மட்டும் குறைந்த அளவில் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் விழவில்லை. இதனால் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்து ஏலம் எடுத்த வியாபாரிகளும் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்தனர்.
சீசன் காலத்தில் மூன்றில் ஒரு பங்கு காலம் நிறைவு பெற்ற நிலையில், குற்றாலம் பகுதியில் கடந்த 2 தினங்களாக லேசான சாரல் இருந்து வந்தது. குளு, குளுவென தென்றல் காற்று வீசி வந்தது. வெயிலே தெரியாத அளவிற்கு மேகக்கூட்டங்கள் திரண்டிருந்தது. இதனால் நேற்று ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த மழை காரணம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை மெயினருவில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டுகிறது.
ஐந்தருவியில் அனைத்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. குளு, குளு சீசன் நிலவுவதாலும், அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உயர் நீதிமன்றம் குட்டு : நீதியை நிலை நிறுத்துவாரா ஜெயா ?

சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. இதை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. 

இதை எதிர்த்து வக்கீல்கள் வீரமணி, பாஸ்கர் உள்ளிட்டோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்ற தடைவிதித்தனர். மேலும் நூலகம் செயல்படுவதற்கு தேவையான வசதிகளை குறைக்ககூடாது என்றும் உத்தரவிட்டனர். 

இந்த நிலையில் இன்று தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் டிவிசன் பெஞ்ச் முன்பு, மூத்த வக்கீல் டி.வில்சன் ஆஜராகி, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்ததாக ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியாகி இருப்பதாக முறையிட்டார். 


அப்போது நீதிபதிகள் அரசு வக்கீல் வெங்கடேசனிடம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் திருமணம் நடத்த எப்படி அனுமதித்தீர்கள்? என்று கேட்டார். 

அப்போது வக்கீல் வில்சன் கூறும்போது, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் திருமணம் நடத்த அனுமதி கிடையாது. 2 நாட்களுக்கு முன்பு அங்கு நடந்த திருமண நிகழ்ச்சியின்போது நூலகத்திற்கு வந்த வாசகர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அந்த நூலகத்தின் வசதிகளை குறைக்ககூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை அரசு மீறி உள்ளது என்றார். 

அதற்கு அரசு வக்கீல் வெங்கடேசன் பதில் அளித்து பேசும்போது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இனி இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கமாட்டோம். நூலக வசதிகள் எதுவும் குறைக்கப்படவில்லை. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது நூலகத்திற்கு வந்த வாசகர்கள் தடுக்கவில்லை. இனிமேல் இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி தர மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார். 

இதையடுத்து நீதிபதிகள் கூறும்போது, இனிமேல் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது. நடந்த சம்பவம் குறித்து அரசு மனுதாக்கல் செய்ய வேண்டும் அதன்மீது நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்றார்.