மரக்காணம் சாதிக் கலவரங்களில் நிதானத்தை கடைபிடித்த
தமிழக காவல் துறை மேலப் பாளையம் முஸ்லிம்களை கைது செய்ய அவசரம் காட்டியது ஏன்? என நெல்லை செய்தியாளர் கள் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர்பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கேள்வி எழுப்பினார்.கைதான நால்வரின் குடும் பங்களுக்கு மனிதாபிமான உதவியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்டம் சார்பில் ரூ.40 ஆயிரம் உதவி வழங்குவதாகவும் அறிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத் தில் தன்னை சந்தித்து முறையிட்ட கிச்சான் புஹாரி, பீர் முகைதீன், பஷீர் மற்றும் சாலின் குடும்பங்களுக்கு மனிதா பிமான அடிப்படையில் ரூ.40 ஆயிரம் வழங்குவ தாக அறிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர்பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இன்று காலை திருநெல் வேலிக்கு வருகை புரிந்தார். அவரை அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள குடும்பங்களைச் சார்ந்த பெண்களும், ஆண்களும் சுமார் 100 பேர் சந்தித்து மனு அளித்து முறையீடு செய்தனர். நடந்த விஷயங்களை விவரமாக கேட் டறிந் தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கும் பேட்டி யளித்தார்.
அப்போது அவர் கூறியதா வது-
சென்னையில் தேசிய செயற்குழு
எதிர்வரும் மே 11-ம் தேதியன்று சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமான இ.அஹமது சாஹிப், பொருளா ளர் பி.கே. குஞ்ஞாலிகுட்டி உட்பட கேரள அமைச்சர்கள், அனைத்து மாநில தலைவர், செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்களுமாக 125 பேர் கலந்து கொள்கின்றனர். இக் கூட்டத்தில் மிக முக்கியப் பிரச்சினையாக சிறை வாசிகளாக அடைக்கப்பட் டுள்ள முஸ்லிம் நிரபராதிகள் விஷயத்தில் மேற்கொண்டு என்னசெய்வது? என்பது குறித்து முடிவெடுத்து அறி விக்க உள்ளோம்.
கடந்த டிசம்பர் மாதம் கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டத்தில் நாங்கள் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின்படி மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு தாக்கீது பிறப்பித்தது.
அதில், நீண்ட காலம் சிறை வாசிகளாக உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய் வதற்கும் அல்லது அவர்கள் மீதுள்ள வழக்குகள் குறித்து சொந்த ஜாமீனில் விடுவிப்ப தற்கும், 3 மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட நீதிபதியை கொண்டு ஆய்வு நடத்தி விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதனை நடைமுறைப்படுத் தாததால் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி யன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரணி, ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
ஏற்கனவே உள்ள விசா ரணை சிறைவாசிகளை விடுதலை செய்யுங்கள் என்று நாங்கள் கோரி வரும் நேரத்தில் தற்போது புதிதாக முஸ்லிம் இளைஞர்களை தமிழக காவல் துறை கைது செய்து கர்நாடக போலீசாரிடம் ஒப்படைத்துள் ளது.
தவறு செய்தவர்கள் கைது செய்யப்படக்கூடாது என்றோ, தப்பு செய்தவர்கள் தண்டிக்கப் படக்கூடாது என்றோ சொல்லக் கூடியவர்கள் அல்ல நாங்கள்.
ஆனால், பழிவாங்கும் உணர்வோடு சிறையிலிருந்து வெளிவந்தவர்களை கைது செய்வதும், அவர்களை குண்டு வெடிப்பில் இணைப்பதும் அவர் களுடைய தாயார், மனைவி, மக்கள்கூட அவர்களை சந்திக்க அனுமதி மறுப்பதும் என்ன நியாயம்?
கர்நாடகத் தேர்தலும் குண்டுவெடிப்புகளும்
கர்நாடகத்தில் பா.ஜ.க. கட்சி ஆளுகிறது. அம் மாநிலத்தில் மே மாதம் 5-ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் யாருக்கு சாதகம்? என்பது உங்களுக்கே தெரியும்.
ஆனால், இந்த குண்டு வெடிப்பு வழக்கில் மேலப் பாளையம் முஸ்லிம் இளைஞர் கள் கைது செய்யப்பட்டுள்ளது புரியாத புதிராக உள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதி கள் என ஒட்டு மொத்த மேலப் பாளையம் ஊரே சொல்கிறது. அங்கு 30-க்கும் மேற்பட்ட ஜமாஅத்துகள் உள்ளன. குண்டுவெடிப்பு வழக்கை தவிர நாகர்கோவில் ஆர்.எஸ் .எஸ். பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட் டுள்ள வாலிபர் மேலப்பாளையம் பள்ளியில் தொழுது கொண்டி ருந் ததை ஜமாஅத்தார் அனைவ ருமே பார்த்துள்ளனர். அப்படியானால், அதேநேரத் தில் அந்த நபர் அந்த தாக்குதல் சம்பவத்தில் எப்படி ஈடுபட்டி ருக்க முடியும்? அவர் போலீசில் வாக்கு மூலம் கொடுத்ததாக சொல்கிறார்கள். மிரட்டி துன் புறுத்தப்பட்டு காவல் நிலை யத்தில் பெறப்படும் வாக்கு மூலங்களை நீதிமன்றங்களே ஏற்றுக் கொள்வதில்லை.
மரக்காணம் கலவரத்தில் நிதானம்!
இப்போது நான் கேட்ப தெல்லாம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மரக்காணத் தில் சாதி மோதல் நடைபெற் றுள்ளது. இதில் மிகுந்த நிதா னத்தை கடைபிடித்த தமிழக காவல் துறை மேலப் பாளையம் முஸ்லிம்களை கைது செய்வ தில் இவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன?
இதுபோன்ற வழக்குகளில் காவல் துறையினர் தன்னிச் சையாக செயல்படாமல், கைது செய்யப்படுபவர்கள் உண்மை யிலேயே இக் குற்றத்தை செய்திருப்பார்களா? என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்து அந்த ஆய்வுக்குப் பின்னர் இன்னொரு மாநிலத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
ஏனெனில் கர்நாடகத்தை ஆளும் பி.ஜே.பி. முஸ்லிம்கள் விஷயத்தில் எத்தகைய மனப்பான்மை கொண்ட வர்கள்? என்பது நாடறிந்த விஷயம்.
பீகார், மராட்டியம், ஒடிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்துத்துவ அமைப்புகளின் அலுவலகங் களில் பல முறை குண்டுகள் வெடித்திருக்கின்றன. பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இதுபோன்ற குண்டு வெடிப்பு களில் எந்த முஸ்லிம் அமைப்பு களின் அலுவலகங்களிலும் வெடித்தது இல்லை.
எனவே, குண்டுகளை யார் கையாளுகிறார்கள் - அவைகள் எங்கே பதுக்கப்படுகின்றன என்பதை அறிந்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டு வெடிப்பு நடந்த போதெல்லாம் முஸ்லிம்கள் மீது இப்படித்தான் குற்றம் சுமத் தப்பட்டது.
பாட்லா குண்டுவெடிப்பு, டெல்லி போலி என்கவுண்ட்டர் சம்பவங்களை தொடர்ந்து நானும், இ.அஹமது சாஹிபும், சோனியாகாந்தியையும், பிரதமரையும், அன்றைய உள்துறை அமைச்சரையும் சந்தித்துப் பேசினோம். அதன் பலனாகவே, மாலேகான் சம்ஜவுதா, அஜ்மீர், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு களில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இந்துத்துவ அமைப்புகளை சார்ந்தவர்களும், இந்து துறவிகளும் அதில் ஈடுபட்டிருந்தது வெட்ட வெளிச் சத்திற்கு வந்துள்ளது. எனவே, நேர்மையாக விசாரித்தால் நீதி கிடைக்கும்.
நிருபர்களாகிய உங்கள் முன்னேதான், கைதானவர் களின் குடும்பங்களைச் சேர்ந் தவர்கள் இத்தனை பெண்க ளும் எங்களிடத்தில் கண்ணீ ருடன் முறையிட்டிருந்ததை நீங்கள் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்தீர் கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று உறுதிபடக் கூறினார்கள்.
எனவே, கைதானவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களை அவர் களின்குடும்பத்தார்கள் உடனடியாக சந்திப்பதற்கு அரசு உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கைதான நால்வரின் குடும் பங்களுக்கு மனிதாபிமான உதவியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்டம் சார்பில் ரூ.40 ஆயிரம் உதவி வழங்குவதாகவும் அறிவித்தார்.