Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

பாலுக்கு தவிக்கும் பச்சிளம் குழந்தைகள்- பள்ளிக்கு ஏங்கும் சிறுவர்கள்; நெருப்பைத் தேடும் பயங்கரவாத ஜென்மங்கள் ! - அதிர்ச்சி ரிப்போர்ட்


நள்ளிரவு 1.17 மணி (இன்று அதிகாலை) தொலைபேசியில் என்னை அழைத்தது அஸ்ஸாமில் இருந்து போனில் அழைத்தவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணியின் தமிழ்நாடு மாநில இணைச்செயலாளர் ஈரோடு முஹம்மது ஆரிப்! நான் என்ன ஏது என்று கேட்டபோது, இப்போதுதான் துப்ரி அகதி முகாமிலிருந்து நிவாரண உதவிகளை கொடுத்து விட்டு இருப்பிடம் திரும்பிக்கொண்டிருக்கிறோம் என்றார்.

பதற்றம் நிறைந்த பாது காப்பற்ற ஒரு பகுதியில் அதுவும் இந்த நேரத்திலா என ஆச்சரியத்தோடு நான் கேட்டபோது, """"அகதி முகாம்களில் கதறி துடிப்பவர்களை பார்த்த எங்களுக்கு உயிர் மேல் அக்கறையே இல்லாமல் போய்விட்டது"" என்றார்.

அஸ்ஸாம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 4 லட்சம் முஸ்லிம்கள் 270 அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிவாரண உதவிகளை செய்து வருகிறது.

இந்த உதவிகளை நேரில் செய்வதற்காகத்தான் தமிழ்நாட்டிலிருந்து முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் அய்யம்பேட்டை மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில், முஸ்லிம் லீக் இளைஞரணியின் மாநில செயலாளர் பள்ளப்பட்டி எம்.கே. முஹம்மது யூனுஸ், மாநில இணைச்செயலாளர் ஈரோடு முஹம்மது ஆரிப் ஆகியோர் சென்றுள்ளனர்.


நிவாரணப் பணிகள் குறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

நாங்கள் செல்வதற்கு ஒரு நாள் முன்பதாக அகதி முகாமில் நிவாரண உதவி செய்த போது அதைப் பெற வந்த 6 பேர் போடோ தீவிர வாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

இதை அறிந்தும் அல்லாஹ்வின் மீது தவக்கல் வைத்து நாங்கள் அந்த புனித காரியத்தில் இறங்கினோம். வேறு எந்த அமைப்புக்களாலும் இவ்வளவு இலகுவாகவும் , துணிச்சலாகவும் இறங்கி நிவாரண உதவி செய்ய முடிய வில்லை.

நாங்கள் நாற்பது பேர் கொண்ட குழுவாக செயல்பட்டோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் டெல்லி குர்ரம் அனீஸ் உமர், தேசிய பொருளாளர் கர்நாடகத்தின் தஸ்தகீர் இப்ராஹீம் ஆகா, உத்திர பிரதேச மாநில பொதுச்செயலாளர் டாக்டர் மத்தீன், கேரள முஸ்லிம் யூத் லீக் தலைவர் சாதிக் அலி, ஜுபைர் குழுவினர் அஸ்ஸாம் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் என தாய்ச்சபையினர் இதில் முழுமையாக ஈடுபாடு கொண்டனர்.

இந்த அகதி முகாம்களில் பெரும்பாலனவை துப்ரி மாவட்டத்திலேயே அமைந்துள்ளன. அதில் 35 முகாம்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தத்து எடுத்துக் கொண்டது.

அஸ்ஸாமிலேயே மிகப் பெரிய முகாம் தமாரா ஹத் பகுதியில் உள்ள ஹாத்திதூரா கல்லூரியில் அமைந்ததுதான் துப்ரியிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த முகாமில் முப்பதாயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்துக்களும் அடங்குவர்.

முகாம்களை எல்லாம் பார்வையிட்டு அங்கு தங்கியுள்ளவர்களிடம் முதலில் தேவைகளை கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டோம். அகதிகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகளும், சிறுவர்களுமே அவர்கள் எங்களிடம் கேட்டது சமைப்பதற்கு பாத்திரங்கள் பால் பவுடர் , பிஸ்கட், சோப்பு, துணி, மணிகள், இவைகள் தான்.

அவர்கள் கேட்டதை கவுகாத்தியில் நேரடியாக கொள்முதல் செய்து, நேரடியாகவே, கொண்டு வந்து, நேரடியாகவே விணியோகித்தோம். �நேரடி� என்று நாங்கள் அழுத்தி சொல்வதற்கு காரணம் தாய்ச்சபையின் மீது எந்த நம்பிக்கை வைத்து இந்த நிவராண உதவிக்கு சமுதாயம் வாரி வழங்கியதோ அந்தத் தொகையில் ஒரு பகுதி கூட வீனாகக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறோம் என்ற மன நிறைவு ஒரு புறம் இருந்தாலும் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளில் இந்த நிவாரண உதவி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து தரப்படிகிறது என சொல்லிக் கொண்டே இருந்தது மன நிறைவை அதிகப் படுத்தியது.

ஆனால் என்னதான் உதவினாலும் அவர்கள் அத்தனை பேருமே கேட்டது, """"எங்களை எப்போது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்புவார்கள்�� என்ற கேள்விதான் அதை விட எங்களுக்கு பரிதாபமாக இருந்தது. சிறுவர்கள் எங்களிடம், """" பள்ளிக்கூடங்கள் திறக்காதா எதிக்கப்பட்ட புத்தகங்களுக்கு பதில் புதிதாக புத்தகங்கள் எல்லாம் தருவார்களா?"" என்ற அப்பாவித்தனமான கேள்விகள்தான். அதைவிட எங்கள் நெஞ்சை உருக வைத்தது, பேசத் தெரியாத பச்சிளம் குழந்தைகள் எங்களை வெறித்துப் பார்த்தது, அவர்கள் ஒட்டிய வயிறு பசியை சுட்டிக்காட்டியது கல்லையும் கரைய வைக்கும் காட்சிகள். பாலுக்கு ஏங்கும் அவர்களுக்கு பால் பவுடரும், அதை காய்ச்சி கொடுப்பதற்கு பாத்திரங்கள் வாங்குவதையுமே முதல கடமையாக கொண்டோம்

அரசாங்கம் எதையுமே செய்ய வில்லையா? எனக் கேட்கலாம் அரசு சார்பில் அரிசி,பருப்பு, எண்ணெய் வழங்கப்படுகிறது ஆனால் சமைத்து சாப்பிட பாத்திரங்களோ அடுப்பெரிக்க விறகோ இல்லை.

இவர்கள் வசித்த வீடுகள் எல்லாம் படு பாவிகளால் தீயில் கொடூரமாக எரிக்கப்பட்டன. ஆனால் சமைப்பதற்கு இவர்கள் நெருப்பைத் தேடி ஆலாய் பறப்பது வேதனையை வரவழைத்தது. 

யார் என்னதான் உதவி செய்தாலும் இந்த மக்கள் சொந்த இருப்பிடங்களுக்கு விரைந்து அனுப்பப்பட வேண்டும் அவர்கள் வாழ்வதற்கு ஆயுதப் பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும்.

அஸ்ஸாம் அகதி முகாம்களில் உள்ளவர்கள் கோரிக்கை எல்லாம் போடோலாந்து தேசிய கவுன்சிலை கலைக்க வேண்டும் போடோ தீவிரவாதிகளிடம் இருக்கும் ஆயுதங்களை பறிக்க வேண்டும் என்hதுதான்.

போடோ தீவிரவாதிகள் முஸ்லிம்களை துரத்தி அடித்ததோடு அவர்கள் வாழ்ந்த வீடுகள் அனைத்தையும் எரித்து விட்டனர். அந்த இடங்களையெல்லாம் புல்டோஸர் மூலம் தகர்த்திதுவிட்டனர். இதனால் அவர்கள் குடியுரிமை பெற்றதற்கான ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி என அனைத்து ஆவணங்களும் எரிந்து விட்டன.

இதை அவர்கள் மீண்டும் கேட்டால் வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் என மறுப்பார்கள் 60 ஆண்டுகாலம் அஸ்ஸாமில் நடப்பது இதுதான். அஸ்ஸாம் முஸ்லிம்களில் பெரும்பாலனவர்கள் மீன்பிடி தொழில் செய்பவர்கள், ஆற்றோரத்திலுள்ள செங்கள் சூழைகளில் கூலிகளாக வேலை செய்பவர்கள்.

பிரமாண்டமான பிர்ம்மபுத்திரா நதியில் அடிக்கடி பெருக்கெடுக்கும் வெள்ளத்தால் இவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படும்போதெல்லாம் அவர்களின் ஆவணங்களும் அழிந்து போய்விடுகின்றன. திருப்பிக்கேட்கும்போது வங்க தேசத்திலிருந்து வந்தவர்கள் என வழக்கமான குற்றமே இவர்கள் மீது சுமத்தப்படும்.

அஸ்ஸாம் முஸ்லிம்கள் அவரவர் இருப்பிடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டாலும் அவர்களுக்கு வீடு உள்ளிட்ட வசிப்பிடங்கள் செய்து கொடுக்கப்படவேண்டும். கல்வி, மார்க்க அறிவு, அவர்களுக்கு அத்தியாவசிய தேவை எனவே ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் கருணைப் பார்வை அஸ்ஸாம் முஸ்லிம்கள் மீது திரும்ப வேண்டுமென்பதே எங்கள் பயணத்தில் நாங்கள் தெரிந்து கொண்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும் மத்திய மனித வள மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ.அஹமது சாஹிப், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். அப்துர் ரஹ்மான் , இ.டி.முஹம்மது பஷிர் உள்ளிட்டோர் அடங்கிய குழு இந்த அகதி முகாம்களில் பார்வையிட்டு பணி தொடங்கி வைத்து முதல்வர் தருன் கோகாயைச் சந்தித்து பேசியதன் பலனாகவே நாங்கள் இந்த அளவிற்கு நிவராண பணி செய்ய முடிந்தது.

மாவட்ட நிர்வாகமும் வருவாய் அதிகாரிகளும் காவல் துறையும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர் நாங்கள் ஒரு காரில் மூவர் பயணம் செய்கிறோம் என்றால், எங்கள் காருக்கு முன்பும் பின்பும் ஏ.கே.47 ஏந்திய 12 காவலர்கள் பாதுகாப்புக்கு எப்போதும் உடன் வந்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீது அரசும், காவல்துறையும், உளவு அமைப்புக்களும், கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக இத்தனை நாட்களாக நிவாரண பணி செய்ய முடிந்தது.

அஸ்ஸாம் முஸ்லிம்கள் சொந்த இருப்பிடம் திரும்பி நிம்மதியாக வாழ்கிறார்கள் என்ற செய்தி கிடைக்கும் வரை எங்கள் மனதில், அகதி முகாம்களில் அவர்கள் படும் அவலங்களே நிழலாடும்.

நேர்காணல் - காயல் மகபூப்