Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 3 ஜூலை, 2013

செங்கல் சேம்பரில் கொத்தடிமைகளை மீட்க 9 குடும்பத்தினர் மனு


திருப்புத்தூரில் செங்கல் சேம்பரில், கொத்தடிமைகளாக உள்ள 29 பேரை மீட்க கோரி, கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர்.
திருப்புத்தூரில்,காரைக்குடி ரோட்டில் செங்கல் சேம்பர் செயல்படுகிறது. இங்கு, 16 குடும்பங்களை சேர்ந்த 52 பேர் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்தனர். இவர்களை மீட்ககோரி, தேவகோட்டை ஆர்.டி.ஓ., கணேசனிடம் புகார் மனு அளித்தனர்.

நேற்று முன்தினம்,சேம்பரில் ஆய்வு செய்த, ஆர்.டி.ஓ., கணேசன், தாசில்தார் அமிர்தலிங்கம் ஆகியோர், கொத்தடிமைகளாக இருந்த, 7 குடும்பத்தை சேர்ந்த 23 பேரை மீட்டு, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பினர்.

நேற்று மறவமங்கலம் அருகே கழுகாடியை சேர்ந்த 9 குடும்பங்களை சேர்ந்த 29 பேர், கிருஷ்ணன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் வந்தனர். திருப்புத்தூரில் உள்ள சேம்பரில் தாங்களும், கொத்தடிமையாக வைக்கப்பட்டுள்ளதால், எங்களையும் மீட்க கோரி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்புவிடம் மனு செய்தனர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, திரும்பி சென்றனர். இவர்கள், எஸ்.பி., அஸ்வின் கோட்னீசிடமும் மனு அளித்தனர்.

தலாக் சான்றிதழ் வழங்கும் விசயமாக அதிமுக கட்சியை சார்ந்த பதர் சயீத் தொடர்ந்த வழக்கில் தன்னையும் எதிர் மனுதாரராக சேர்க்க பேராசிரியர் கே.எம்.கே. சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்


தலாக் சான்றிதழ் வழங்க காஜிகளுக்கு அதிகாரம் இல்லை என அறிவிக்கக் கோரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் வஃக்பு வாரியத் தலைவரும், முன்னாள் சிறு பான்மை குழு தலைவரு மான பதர் சயீத் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந் திருக்கும் பொதுநல வழக்கில், தன்னையும் எதிர் மனு தாரராக இணைக்க அனுமதிகோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு மாநில தலைவரும்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரு மான பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பதர் சயீத் தொடர்ந் திருக்கும் அந்த வழக்கு டபிள்யூ-பி 135339/2013 ஆக பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் இஸ்லாத்தைச் சேர்ந்த பெண்களுக்கு விவாகரத்து போன்ற பிரச்சினைகளில் தங்களை பாதுகாக்க சட்ட பூர்வமான உரிமைகள் இல்லை என்றும், முஸ்லிம் தம்பதி களுக்கு விவாகரத்து அளித்து மணமுறிவு சான்றிதழ் வழங்கு வதற்கு அவர்களின் பிரச் சினைகளுக்கு சமரச தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நடை முறையில் இதுபோல் நடப்ப தில்லை என்றும், சில நேரங்களில் மனைவிக்கு தெரியாமலேயே கணவன் தலாக் கூறி காஜிகளிடம் திருமண முறிவுக் கான சான்றிதழ் பெற்றுவிடு கிறார் என்றும் 1880ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட காஜிகள் சட்டப்படி காஜிகளுக்கு முஸ்லிம் பெண்களின் மண முறிவுக்கான சான்றிதழ் வழங்க அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும், அதன் காரணமாக மணமுறிவு சான்றிதழ் வழங்க காஜிகளுக்கு அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும் பதர் சயீத் கோரியுள்ளார்.

3 எதிர் மனு தாரர்கள்
அந்த வழக்கில் மத்திய அரசு சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளரை முதல் எதிர் மனு தாரராகவும், தமிழக அரசு பிற்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை செயலாளரை 2வது எதிர் மனுதாரராகவும், தமிழக அரசு தலைமை காஜியை 3வது எதிர் மனு தாரராகவும் பதர் சயீத் சேர்த்திருந்தார்.

இ.யூ. முஸ்லிம் லீக் கண்டனம்
இந்த வழக்கிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டனம் தெரி வித்து அறிக்கை வெளி யிட்டார். அது மணிச்சுடர் நாளிதழில் 06.06.2013 அன்று வெளியிடப் பட்டுள்ளது.

அந்த கண்டன அறிக்கையில் பதர் சயீத் தொடர்ந்த வழக்கின் உள்நோக் கம் என்ன என்றும், ஷரியத் சட்டத்திற்கு திருத்தம் கொண்டு வர முயற்சியா எனவும் கேட்டிருந்த தலைவர் பேராசிரியர், அந்த வழக்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் தன்னை ஒரு தரப்பினராக இணைத்துக் கொண்டு இந்த வழக்கை சந்திக்கும் என்றும் அறிவித்திருந்தார்.

பிரமாணப் பத்திரம் தாக்கல்
அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தன்னை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயலாளர் மற்றும் தமிழக தலைவர் என்ற ரீதியில் பதர் சயீத் வழக்கில் தன்னை 4வது எதிர் மனு தாரராக சேர்க்க சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதி யை கோரி பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நேற்று உயர் நீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திர மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்ப தாவது; இ.யூ. முஸ்லிம் லீக் 72 வயதாகும் நான் அரசியல் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளராகவும், தமிழக தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேர்தல் ஆணையத்திடம் தன்னை பதிவு செய்திருக்கிறது.

கேரளாவில் அது அங்கீகரிக் கப்பட்ட கட்சி. சுதந்திர இந்தியா வில் நடைபெற்ற 15 மக்களவை தேர்தல்களில் 2வது மக்களவை தவிர அனைத்து மக்களவை களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரதிநிதித்துவம் பெற்று தனது தனித்தன்மையை காட்டியிருக்கிறது. தற்போது கேரள மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆளும் கூட்டணி கட்சியாகும். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர், மாண்புமிகு இ. அஹமது அவர்கள் மத்திய அமைச்சரவையில் ஒரு அமைச்சராக உள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்தியாவிலுள்ள பழமை யான கட்சிகளில் ஒன்று. அதற்கு சிறப்பான வரலாறு உள்ளது. அது இந்தியா முழுவதும் கிட்டதட்ட எல்லா மாநிலங்களிலும் ஜனநாயக இந்தியாவின் தேர்தல் நடை முறையில் துடிப்புடன் பங் கேற்றுள்ளது.

இந்தியாவில் முஸ்லிம் களின் உண்மையான மதசார் பற்ற அரசியல் பிரதிநிதியாக அது அங்கீகரிக்கப்பட்டிருக் கிறது. இந்திய முஸ்லிம்கள், பிற சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தினரின் கவுரவம் மற்றும் மதக் கலாச்சார அடையாளங்களை பாது காப்பதிலும் மேம்படுத் துவதிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது தலைமை யான குறிக்கோள்களில் ஒன்றாக பணியாற்றுகிறது.

நான் ஒரு முஸ்லிம்
நான் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பேராசிரியராகவும், வரலாற்றுத் துறை தலைவராகவும் பணி யாற்றி இருக்கிறேன்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் நான் என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன். 14 வது பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேலூர் பாராளு மன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மக்க ளவை உறுப்பினராக 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக் கிறேன்.

நான் இஸ்லாமிய மார்க் கத்தை அனுஷ்டிக்கும் முஸ்லிம். பதர் சயீத் அம்மையார் தொடர்ந்திருக்கும் பொது நல வழக்கான ரிட் மனு குறித்து ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன்.

தமிழக முஸ்லிம் பெண் களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அந்த வழக்கில் இந்தியாவில் குறிப் பாக தமிழகத்திலுள்ள காஜி களுக்கு தலாக் மணமுறிவு சான்றிதழ் வழங்க அதிகாரம் இல்லை என்றும், எனவே தலாக் தொடர்பாக சான்றிதழ்களையும் மற்றும் ஆவணங்களை வழங்கு வதற்கும் எதிராக காஜிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த வழக்கில் கூறப்பட்டிருக்கிறது. மேலே சொன்ன எனது சமூக நிலைபாடு காரணமாகவும் மத சிறுபான்மையினர் குறித்த பல்வேறு பிரச்சினைகளில் எனக்குள்ள ஈடுபாடு காரண மாகவும் தற்போதைய ரிட் மனுவில் எனக்கு ஈடுபாடு உள்ளது.

ஷரீயத் சட்டப்படிதான் காஜிகள் நிகழ்வுகளை பதிவு செய்கிறார்கள் என்று நான் கண்ணியத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஷரீஅத் அனைத்து முஸ்லிம் களையும் முழுமையாக கட்டுப் படுத்தக்கூடியது.

தனியார் சட்டங்கள் அத்தியாவசிய தேவை என்ப தோடு, அவை எல்லா வித மதிப்புடனும் பாதுகாத்து பேணப் படுகின்றன.

விரிவான எதிர் மனு
இப்பேர்பட்ட சூழ்நிலையில் மேதகு உயர் நீதிமன்றத்தின் தன்னுரிமை அதிகாரப்படி என்னை ஒரு எதிர் மனு தாரராக இணைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் ஒரு விரிவான எதிர் பிரமாண பத்திரத்தை, அதற் கான ஆதரவான ஆவணங்களு டன் தாக்கல் செய்ய உரிமை அளிக்கப்பட வேண்டுகிறேன்.

இதுகாரும் நான் கூறியபடி பதர் சயீத் அம்மையார் தொடர்ந்திருக்கும் வழக்கில் என்னை ஒரு பார்டியாக இணைப்பதற்கு அவசியமான வன் மற்றும் பொருத்தமானவன். எனவே அந்த வழக்கில் என்னை 4வது எதிர் மனு தாரராக இணைக்க கோரு கிறேன். எனது கோரிக்கை நிறை வேற்றப்படும் பட்சத்தில் அதனால் யாருக்கும் குறிப்பாக ரிட் மனு தாரர் அல்லது 3 எதிர் மனுதாரார்களுக்கு எந்த விதமான பாதிப்போ சிரமமோ ஏற்படாது.மாறாக எனது இந்த பிரமாண பத்திர கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் சிறுபான்மையின சமூகத்தின ரின் தனியார் சட்டம் குறித்த மிக முக்கியமான மற்றும் உணர்வு பூர்வமான விஷயத்தை தொடக்கூடிய அந்த ரிட் மனுவின் மீது முடிவெடுக்க என்னால் உதவ முடியும். எனவே என்னை 4வது எதிர் மனு தாரராக இணைக்க கோரி நீதியை நிலைநாட்ட விழை கிறேன்.

மேற்கண்டவாறு பேராசிரி யர் கே.எம் காதர் மொகிதீன் தனது பிரமாண பத்திரத்தில் கூறியிருக்கிறார்.

வழக்கறிஞர்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சார்பில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கே. அசோக்குமார் மற்றும் கே. கணேசன் ஆகியோர் பிரதிநிதித் துவம் செய்கிறார்கள்.

இந்த வழக்கு தெடர்பான அனைத்து பணிகளையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் கவனித்து வருகிறார்.

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் முடிவெடுக்கும் என தெரிகிறது.