Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 18 மே, 2013

சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள், டிஸ்டெல்லரிகளில் பணியாற்ற உதவும் படிப்புகள்


மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும்,  கான்பூரில் உள்ள நேஷனல் சுகர் இன்ஸ்ட்டியூட் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்

பி.ஜி. டிப்ளமோ படிப்புகள்:

பி.ஜி. டிப்ளமோ இன் சுகர் டெக்னாலஜி, பி.ஜி. டிப்ளமோ இன் இன்ஜினியரிங், பி.ஜி. டிப்ளமோ இன் இண்டஸ்ட்ரியல் ஃபெர்மென்டேசன் அன்ட் ஆல்கஹால் டெக்னாலஜி.

சான்றிதழ் படிப்புகள்:
சுகர் பாய்லிங், சுகர் இன்ஜினியரிங், ப்ரி-ஹார்வெஸ்ட் கேன் மெச்சூரிட்டி சர்வே,

பெல்லோஷிப் ஆஃப் நேஷனல் சுகர் இன்ஸ்ட்டியூட் படிப்புகள்:

சுகர் டெக்னாலஜி, சுகர் இன்ஜினியரிங், ஃபெர்மென்டேஷன் டெக்னாலஜி.

தகுதி
பி.ஜி. படிப்புகளுக்கு இளநிலை படிப்புகளும், சான்றிதழ் படிப்புகளுக்கு உயர்நிலைப் பள்ளி படிப்பும், டிப்ளமோ படிப்புகளும் படித்திருக்க வேண்டும்.

சேர்க்கை முறை
மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நடைபெறும்.

விண்ணப்பப் படிவங்கள் ஆன்லைன் மற்றும் ஆப் லைன் முறையில் பெறலாம்.

ஆன் லைன் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 3 ஜூன் 2013.

டவுன்லோடு செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 14 ஜூன் 2013.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.nsi.gov.in என்ற இணையதளத்தை காணவும்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் நெல்லையில் 21ம் தேதி "நேர்முகத்தேர்வு"

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நெல்லையில் 21ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் அதிகபட்ச திட்ட மதிப்பீடு 5 லட்சம் வரை உற்பத்தி தொழில்களுக்கும், 3 லட்சம் வரை சேவை தொழில்களுக்கும், 1 லட்சம் வரை வியாபார தொழில்களுக்கும்15 சதவீத மானியத்துடன் பாங்குகள் மூலம் கடன் உதவி ழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன் பெற குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டிற்கு 1.50 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பயனாளிகள் 7 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான கட்டாய பயிற்சியை மேற்கொண்ட பின்பு பாங்குகள் மூலம் கடன் உதவி வழங்கப்படும்.

பொது பிரிவினர் 18-35 வயது வரையிலும், பங்கு தொகை 10 சதவீதமாக இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் 18-45 வயது வரையிலும், பங்கு தொகை 5 சதவீதமாகவும் இருக்க வேண்டும்.

நடப்பு நிதி ஆண்டுக்கான பயனாளிகள் தேர்வு மாவட்ட தொழில் மையத்தில் வரும் 21ம் தேதி நடக்கிறது. புதிய தொழில் முனைவோர் உரிய விண்ணப்பங்களை அணுகலாம். இதுசம்பந்தமாக மேலும் விபரங்களுக்கு நெல்லை மாவட்ட தொழில் மையத்தை (0462 - 2572384) அணுகலாம் என்று கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்தார்.

சென்னையில் கடும் துர்நாற்றத்துடன் குடிநீர் வினியோகம்


வியாசர்பாடி மற்றும் எம்.கே.பி.நகர் பகுதிகளில் கடுமையான துர்நாற்றத்துடன் குடிநீர் வினியோகிக்கப்படுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், "குளோரின்' மாத்திரைகள் தர வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக... வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்.நகர், தேபர் நகர், சத்தியமூர்த்தி நகர் மற்றும் உதயசூரியன் நகர் பகுதிகளிலும் எம்.கே.பி.நகரிலும் வினியோகிக்கப்படும் குடிநீர் பயங்கர துர்நாற்றத்துடன் கழிவுநீர் போல் உள்ளதாக பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து எம்.ஜி.ஆர்.நகர் பகுதிவாசிகள் கூறியதாவது: எங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே குடிநீர் கழிவுநீர் போல் வருகிறது. காலை 8:00 மணிக்குள் பிடிக்கப்படும் குடிநீர், குளோரின் நாற்றத்துடனும், அதற்கு மேல் பிடித்தால் பயங்கர துர்நாற்றத்துடனும் வருகிறது. நேற்று காலை பிடித்த தண்ணீர், இதுவரை அல்லாத அளவுக்கு படுமோசமான துர்நாற்றத்துடன் இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

என்ன காரணம்?
எம்.கே.பி.நகரை சேர்ந்த ஆர்டிசான் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் தெய்வமணி கூறுகையில்,""எங்கள் பகுதியில் காலை 5:30 மணி முதல் 8:30 மணி வரையில் வினியோகிக்கப்படும் தண்ணீரை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம். அந்த நேரத்தில் தண்ணீர் மோசமாக இருந்தால் புகார் தெரிவிக்கவும் கூறிஉள்ளோம்,'' என்றார்.

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால், காலை 8:30 மணிக்கு மேல் வினியோகம் நிறுத்தப்பட்டு விடுகிறது. தவிர, குடிநீர் குழாய்கள் பல, மிகவும் பழையவை. காலையில் அதிக அழுத்தத்துடன் தண்ணீர் வினியோகமாகும் போது துர்நாற்றம் தெரிவதில்லை. 8:30 மணிக்கு மேல், அழுத்தம் குறைந்து, குழாயில் உள்ள விரிசல் வழியாக கழிவுநீர் கலக்கிறது. எனவே, வியாசர்பாடி பகுதிவாசிகள், மாநகராட்சி சுகாதார துறை மூலம் தரப்படும் "குளோரின்' மாத்திரைகளை வீடு வீடாக வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

துர்நாற்றத்துடன் கூடிய தண்ணீர் வினியோகத்தால், எம்.கே.பி.நகர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிவாசிகள் பலர், லாரி மற்றும் தனியார் மூலம் விற்கப்படும் தண்ணீரையே குடிக்க பயன்படுத்துகின்றனர்.

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டை அதிக விற்பனை


பி.இ. சேர்க்கைக்காக மொத்தம் 2.33 லட்சம் விண்ணப்பங்கள் நேற்று விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.

கடந்த ஆண்டு மொத்தம் 2.28 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகின. இந்த ஆண்டு விண்ணப்ப விற்பனைக்கு மேலும் 3 நாள்கள் உள்ள நிலையில் கடந்த ஆண்டைவிட கூடுதலாக 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.

விண்ணப்ப விற்பனை மே 4-ம் தேதி தொடங்கியது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதற்குப் பிறகு நாளொன்றுக்கு சராசரியாக 5 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்பனையாகி வருகின்றன.

இந்த ஆண்டும் விண்ணப்ப விற்பனை அதிகரித்துள்ளது மாணவர்கள், பெற்றோர்களிடையே பி.இ. மோகம் இன்னும் குறையவில்லை என்பதையே காட்டுவதாக பொறியியல் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

2.71 லட்சம் இடங்கள்:
தமிழகத்தில் இப்போது 520 பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 2.68 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு 11 புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுளளது. ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா 300 இடங்கள் வீதம் 3,300 கூடுதல் இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மொத்த இடங்களின எண்ணிக்கை 2.71 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த இடங்களில் ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்காக சுமார் 2 லட்சம் இடங்கள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கலந்தாய்வில் 55 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பவில்லை. இந்த ஆண்டு காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

மெட்ரோ ரயில் தொழிலாளர்களுக்கு தாமதமாகும் ஊதியம்


சென்னையில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும் கம்மோன் இந்தியா நிறுவன தொழிலாளர்களுக்கு ஊதியம் வெகு தாமதமாக அளிக்கப்படுகிறது.

தங்களுக்கு உரிய ஊதியத்தை உரிய நேரத்தில் வழங்கக் கோரி அவர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும், மே 7ம் தேதி வழங்கப்பட வேண்டிய ஏப்ரல் மாத ஊதியம் இதுவரை அவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஏற்கனவே, இதே காரணத்தைக் கண்டித்து அவர்கள் பணிக்கு வரமாட்டோம் என்று கூறினர்.

ஆனால், கம்மோன் இந்தியா (Come on India) ஊழியர்கள் அவர்களை சமாதானம் செய்து வேலைக்கு வரச் செய்தனர். இந்நிலையில், தாங்கள் அளிக்கும் பில்களை சென்னை மெட்ரோ ரயில் லிமிடட் நிறுவனம் உரிய நேரத்தில் ஒப்புதல் அளித்து பணத்தை தருவதில் தாமதம் செய்கின்றனர். எனவேதான் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் அளிக்க முடியவில்லை என்கிறார்கள் கம்மோன் நிறுவனத்தினர்.