அண்மையில் அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த கலவ ரத்தின் போது பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிவாரண நிதி திரட்டுவது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லிக் தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டதற்கு ஏற்ப, நாடு முழுவ தும் திரட்டப்பட்ட நிதியுடன்; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது தலைமையில் முஸ்லிம் லீக் குழுவினர் வருகிற 23-ந் தேதி (வியா ழன்) அஸ்ஸாம் மாநிலம் சென்று அங்கு பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆறுதல் கூறி, அமைதிப்படுத்தி, நிவா ரண நிதியையும் வழங்குகி றார்கள்.
ஆகஸ்ட் முதல் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் அஸ் ஸாமில் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு மத்திய - மாநில அரசுகள் உடனடியாக நிவாரண உதவி கள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அமைதி திரும்ப போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.
மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அஸ்ஸாம் கலவர நிவாரணக்குழு அமைக்கப்பட்டு, அதற்கு சென்னை ஆயிரம் விளக்கு கிளையில் `ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா-வில் வங்கி கணக்கு துவக்கப்பட்டது.
ரமலானில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நிவாரண நிதி திரட்டப்பட்டது.
அஸ்ஸாமில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஈத் பெருநாள் தொழுகைக்குப் பிறகு நிதி திரட்ட வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லிக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டு கோள் விடுத்திருந்தார். இதற்கு அனைத்து ஜமாஅத்தினரும், ஜமாஅத்துல் உலமா சபையும் முழு ஒத்துழைப்பு தந்து உற் சாகம் அளித்தனர்.
எதிர்வரும் வெள்ளிக்கி ழமை 24-8-2012 அன்று ஜும்ஆ தொழுகை அன்றும் நிதி சேகரித்து அன்று வரை உள்ள நிதியை வங்கியில் செலுத்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையம் வேண்டு கோள் விடுத்துள்ளது.
அஸ்ஸாம் மக்களின் நிவாரணப் பணிகளை முறைப் படுத்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியச்செய லாளர் டெல்லி குர்ரம் அனீஸ் உமர் 20-8-2012 அன்று அஸ்ஸாம் தலைநகர் குவஹாத் திக்கு விரைந்துள்ளார். அங்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அஸ்ஸாம் மாநில அமைப்பாளர் திலிர்கான், அஸ்ஸாம் பார் பெட்டாவைச் சேர்ந்த முஸ்லிம் லீக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிராஜுல் ஹக், வழக்கறிஞர்கள் ஹாபிஜ் ரஷீத் அஹமது சவுத்ரி, நஜ்ருல் ஹக், ரபி அஹமது, லத்தீப்புல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகிகள் நிவாரணப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான இ.அஹமது, பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.டி. முஹம்மது பஷீர், எம். அப்துல் ரஹ்மான், முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர் பி.வி. அப்துல் வஹாப், கேரள மாநில பொதுச் செயலாளர் கே.பி.ஏ. மஜீத் ஆகியோர் 23-8-2012 அன்று அஸ்ஸாம் சென்று மக்களை நேரில் சந்தித்து அமைதிப் படுத்த இருப்பதோடு நாடெங் கிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் திரட்டப் பட்ட நிதியை பாதிக்கப்பட்ட வர்களுக்கு வழங்குகின்றனர்.
நிவாரண நிதி திரட்டும் பணி தொடர்ந்து நடைபெறுவதால் முஸ்லிம் லீக் குழு மீண்டும் அஸ்ஸாம் சென்று நிவாரணப் பணி மேற்கொள்ளும்.