Flash News
கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணிசெவ்வாய், 19 ஜூன், 2012
என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ?
வனம் மற்றும் வன விலங்கு படிப்புகள் (Forestry )
அனைத்து நாடுகளிலும், இயற்கை வளங்களை அளிப்பதில் காடுகளின் பங்கு முக்கியமாக உள்ளது.
மருத்துவ குணங்கள் நிறைந்த எண்ணற்ற மூலிகைகள், ஒப்பனைப்பொருட்கள் மற்றும் பல மதிப்புள்ள விளைபொருட்கள் ஆகியவற்றையும் காடுகள் அளிக்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், காடுகளின் பங்கு கணிசமான அளவில் உள்ளது.
ஒவ்வொரு காடுகளிலும், காட்டுயிர்களின் எண்ணிக்கை முழுமையாக இருக்கிறது. "பாரஸ்டிரி மற்றும் வைல்டு லைப்' உள்ளிட்ட படிப்புகள், இவற்றை திறம்பட கையாள உதவுகிறது. நாம் பயன்படுத்தும் காட்டு வளங்களின் சூழ்நிலையை சமநிலையாக வைத்திருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். இந்த பணியைச் முழுமையாக செய்வதற்கு, சிறந்த பயிற்சி பெற்ற வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர். வனவியல் வல்லுனர்களுக்கு, ஆய்வுக் கூடங்கள், அலுவலகங்கள் மற்றும் வெளிப்புறங்களிலும் வேலை பார்க்கும் சூழ்நிலைகள் ஏற்படும்.
காடுகளின் வளத்தை தவறாக பயன்படுத்துவதால் தான், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி உள்ளிட்ட இயற்கை பேராபத்துக்கள் ஏற்படுகின்றன. தற்போது இவற்றை தடுக்கவும், காட்டு விலங்குகளை பாதுகாக்கவும் வனத்துறை சார்ந்த படிப்புகள் உதவுகின்றன. இந்தியாவில் பயிற்றுவிக்கப்படும் வனத்துறை சார்ந்த படிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இளநிலை படிப்பு:
பி.எஸ்சி., பாரஸ்டிரி (வனம்)
பி.எஸ்சி., வைல்டு லைப் (வனவிலங்கு)
தகுதிகள்: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அல்லது வேளாண்மை பாடங்களை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்.
கால அளவு 3 வருடம்.
முதுநிலை படிப்பு:
எம்.எஸ்சி., பாரஸ்டிரி
எம்.எஸ்சி., வைல்டு லைப்
எம்.எஸ்சி., உட் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி
தகுதிகள்: இளநிலை படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல்,கணிதம் மற்றும் நிலவியல் உள்ளிடவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும் அல்லது இளநிலை வேளாண்மை அல்லது இளநிலை பாரஸ்டிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். கால அளவு 2 வருடம். இந்தியாவில், இள நிலை மற்றும் முதுநிலைக்கான "பாராஸ்டிரி மற்றும் வைல்டு லைப் படிப்புகள்' கீழ்க்கண்ட நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்படுகின்றன.
1. இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் ஜெனிட்டிக்ஸ் அண்டு டிரீ பிரீடிங்,
(Forest Genetics and Tree Breeding) கோவை.
2.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் , கோவை - 3
3.வனக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையம், மேட்டுபாளையம் – 641 301
4.பாரதியார் பல்கலைக்கழகம் ,கோவை
5. இன்ஸ்டிடியூட் ஆப் உட் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, பெங்களூரு.
6. பாரஸ்ட் ரிசர்ச் சென்டர்,ஹைதராபாத் .
7. பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், டேராடூன்.
8. பிர்ஸா அக்ரிகல்ச்சர் யுனிவர்சிட்டி, ராஞ்சி.
9. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் மேனேஜ்மென்ட், நேரு நகர், போபால்.
10.ஒரிசா யுனிவர்சிட்டி ஆப் அக்ரிகல்ச்சர் அண்டு டெக்னாலஜி, புவனேஷ்வர்.
11.வைல்டு லைப்(WILDLIFE) இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, டேராடூன்.
12.மணிப்பூர் யுனிவர்சிட்டி,இம்பால்.
13. இமாலயன் பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், சிம்லா.
வேலைவாய்ப்பு:
வனத்துறைச் சார்ந்த படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு இந்திய அரசு, வனக்காவலர்,மர ஆய்வாளர், பூச்சிகளை ஆய்வு செய்பவர், விலங்குகளின் நடத்தையை ஆய்வு செய்பவர், மரங்களை வளர்த்து பாதுகாப்பவர், வனச்சரக அலுவலர் மற்றும் மிருகங்களை பாதுகாப்பவர் உள்ளிட்ட பிரிவுகளில் பணி வாய்ப்பை வழங்குகிறது.
இந்தியாவில் உள்ள அரசு நிறுவனங்களில் போதிய அளவில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன. இது தவிர வெளிநாடுகளிலும் குறிப்பாக கம்போடியா, வியட்நாம், தென்ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில், அதிக அளவு இந்தியர்களை வேலைக்கு தேர்வு செய்கின்றனர்.

சமூக நல்லிணக்கம் கட்டிக்காக்கும் இந்திய யூனியன் முஸ்லிம்லீக்
தென்காசி அருகே பாலமார்த்தாண்டபுரத்தை சேர்ந்தவர் அல்போன்ஸ் (48). டிரைவர். இவரது மனைவி ஐயம்மாள் (40). இவர்களுக்கு பிரபாகரன் (18) என்ற மகனும், விஜயசாந்தி (16) என்ற மகளும் உள்ளனர். அல்போன்ஸ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சவுதி அரேபியாவிற்கு டிரைவர் வேலைக்கு சென்றார். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அவர் சொந்த ஊருக்கு வந்து இரண்டு மாதங்கள் தங்கி விட்டு பின் மீண்டும் சவுதி அரேபியாவிற்கு சென்றார்.
கடந்த 26.12.2011 அன்று அல்போன்ஸ் இறந்து விட்டார் என அவரது மனைவிக்கு போன் மூலம் செய்தி வந்துள்ளது. சிலர் அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்றும், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறியுள்ளனர். அல்போன்ஸ் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் தனது மனைவியிடம் போனில் பேசும் போது, தன்னுடைய முதலாளி கொடுமை படுத்துவதாக கூறியுள்ளார்.
தனது கணவர் எதற்காக இறந்தார் என தெரியாத நிலையில் அவரது உடலை பாலமார்த்தாண்டபுரத்திற்கு கொண்டுவர ஐயம்மாள் கலெக்டர் மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இதுபற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் துராப்ஷாவிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநிலத் தலைவர் கே.எம். காதர்முகைதீன்,வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்ரகுமான் ஆகியோர் மூலம் மத்திய அரசு மற்றும் சவுதி அரேபியா தூதரக அதிகாரிகளிடம் பேசி அல்போன்ஸ் உடலை பாலமார்த்தாண்டபுரத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில் ஆறு மாதங்கள் கழித்து அல்போன்ஸ் உடல் சவுதி அரேபியாவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பாலமார்த்தாண்டபுரத்திற்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அல்போன்ஸ் உடலை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநிலத் தலைவர் கே.எம். காதர் முகைதீன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்ரகுமான் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் துராப்ஷா ஆகியோருக்கு ஐயம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

நெல்லை அல்வா விலை கடும் உயர்வு
நெல்லை என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது, அல்வா. தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் பெரும்பாலும் நெல்லை வழியாக தங்களது பயணத்தை அமைத்துக் கொள்கின்றனர்.
எதற்கு என்றால்? நெல்லையில் சுவையான அல்வாவை வாங்கிச் செல்வதற்குத்தான். நெல்லையில் உள்ள மிட்டாய் கடைகளில் அல்வா வியாபாரம் தினமும் களை கட்டி இருக்கும். வெளியூருக்கு செல்லும் ரெயில் பயணிகள், பஸ் பயணிகள் மாலை நேரத்தில் மிட்டாய் கடைகளில் நீண்ட வரிசையில் காத்து நின்று அல்வா வாங்கி செல்கின்றனர்.
இந்த அல்வாவை கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் பையில் போட்டு, அதற்கு மேல் கடை விளம்பரத்துடன் கூடிய மற்றொரு பிளாஸ்டிக் பையில் பார்சல் கட்டி வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பார்கள்.
இந்த நிலையில் நெல்லை மாநகரில் பிளாஸ்டிக் பைகளுக்கு கடந்த 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அல்வா மற்றும் ஈரப்பதம் கொண்ட இனிப்பு வகைகளை மிட்டாய் கடைக்காரர்கள் தற்போது வாழை இலையில் வைத்து, காகிதத்தால் கட்டி கொடுக்கின்றனர்.
வெளியூர் பயணிகளுக்கு பட்டர் பேக் எனப்படும் ஒரு வகை பையில் போட்டு கொடுக்கின்றனர். இதனால் மிட்டாய் கடைக்காரர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு நெல்லையில் ஒருசில மிட்டாய்க் கடைக்காரர்கள் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளனர்.
நெல்லையில் இதுவரை அல்வா மற்றும் கார வகைகள் கிலோவுக்கு ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் முதல் அல்வா மற்றும் கார வகைகள் விலை கிலோ ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் அல்வா பிரியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதே போல் ரூ.150-க்கு விற்பனை ஆன மஸ்கோத் அல்வா உள்ளிட்ட பிற பொருட்கள் ரூ.200-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுபற்றி மிட்டாய் கடைக்காரர் ஒருவர் கூறுகையில்,
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து இருப்பதால் ஒவ்வொரு பொட்டலத்துக்கும் கூடுதலாக ரூ.2-க்கு மேல் செலவு ஆகிறது. அது மட்டுமல்லாமல் மூலப்பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்து விட்டது. ஏற்கனவே விலையை உயர்த்தும் எண்ணத்தில் இருந்தோம். இந்த நிலையில் திடீரென்று பிளாஸ்டிக் பைகளுக்கான தடை மேலும் செலவை அதிகரித்து இருப்பதால் விலை உயர்த்தப்பட்டு உள்ளது என்றார்.
கல்வி விழிப்புணர்வு மாநாடு ஆலோசனை கூட்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு கும்பகோணத்தில் செப்டெம்பர் 8 ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.
கும்பகோணம் கிரீன் பார்க் ஹோட்டலில் ஒருங்கிணைத்த தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொது செயலாளர் கே எ எம் அபூபக்கர் தலைமை வகித்தார். மாநில கல்வி பனி செயலாளர் ஆடுதுறை ஏ . எம். ஷாஜஹான் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக நோபுள் ஹலிமா ஷாகுல் ஹமீது மற்றும் ராஜகிரி தாவூத் பாட்சா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் அதிரை நசிருதீன், இளைஞர் அணி அமைப்பாளர் முஹமது யூனுஸ், தஞ்சை மாவட்ட செயலாளர் லயன் பஷீர் அஹமது, பொருளாளர் அப்துல் காதர், நாகை வடக்கு மாவட்ட தலைவர் அபுல் ஹசன், செயலாளர் அமீர் நூருல்லாஹ், துணை தலைவர் சிடிசன் மஜீது, நாகை தெற்கு மாவட்ட இணை செயலாளர் ஜான் செய்யது மீரான், திருவாரூர் மாவட்ட தலைவர் ஜலாலுதீன், செயலாளர் முகைதீன் அடுமை, காரைக்கால் மாவட்ட தலைவர் இஸ்மாயில், மாவட்ட செயலாளர் முஹமது அலி, பொருளாளர் அப்துல் நசீர், அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி தலைவர் ஜமால் முஹமது இப்ராகிம், துணை தலைவர் முஹமது ஹுசைன் , அமீரக காயிதே மில்லத் பேரவை மண்டல செயலாளர் ஆவை அன்சாரி, தலைமை நிலைய பேச்சாளர்கள் கொள்ளிடம் ரஷீத் ஜான், தஞ்சை ஜைனுல் ஆபிதீன், அப்துல் கரீம், வலங்கைமான் பி கே இ அப்துல்லாஹ் மற்றும் பல்வேறு மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய, பிரைமரி அமைப்பாளர்கள், நான்கு மாவட்ட இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் உயர் நிலை குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி வரும் செப்டம்பர் மாதம் கும்பகோணத்தில் மாபெரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்துவது என்றும் அம்மாநாட்டில் மாநிலத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுத்தொகையும், ஏழை மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மாநாட்டிற்கு மாநில தலைவர்களையும், கல்வியாளர்களையும், மத்திய அமைச்சரும் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவருமான இ அஹமது மற்றும் கேரளா மாநில முஸ்லிம் லீக் அமைச்சர்களையும் அழைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மாநாட்டிற்கு 500 க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணைத்து ஜமாஅத்திளிருந்தும் கலந்துகொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மாநாடு சிறப்பாக நடைபெற பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டது. சுவர் விளம்பரங்களும், தெருமுனை பிரச்சரக்கூட்டங்களும் நடத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது
முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு : பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலா ளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விருதுநகரில் இன்று பகல் செய்தியாளர்களை சந்தித் தார்.
அப்போது அவர் கூறியதா வது-
முஸ்லிம்கள் - கிறிஸ்த வர்கள் - சீக்கியர்கள் - ஜைனர் கள் - பௌத்தர்கள் - பார்ஸிகள் ஆகிய சிறுபான்மையின சமு தாயங்களுக்கு 4.5 சதவிகித தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்தது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகித ஒதுக்கீட்டிலிருந்து உள்ஒதுக்கீடாக இது வழங் கப்படும் எனவும் அறிவிக்கப் பட்டது. ஆனால் இது செல்லாது என ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து, அது உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டில் உள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடு என்பது நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்ததன் படி 10 சதவிகித இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு தனியாக வழங்கப்பட வேண்டும். இதற் காக அரசியல் சாசனம் திருத் தப்பட்டு இந்த அறிவிப்பு செயல்படுத்தப்பட வேண்டும். உள்ஒதுக்கீட்டால் உரிய பிரதிநிதித்துமும் கிடைப்ப தில்லை. பல்வேறு சட்ட சிக்கல் களும் ஏற்படுகின்றன. ஆறு சிறுபான்மையினர் களுக்கு நாலரை சதவீத இடஒதுக்கீடு என்பது நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. ஆனாலும் முதல் முறையாக மத்தியில் இடஒதுக்கீடு என்பது கொண்டுவரப்பட்டதை வரவேற் றோம்.
தமிழகத்தில் மூன்றரை சதவிகித இடஒதுக்கீட்டை தி.மு.க. ஆட்சியின்போது கலைஞர் அறிவித்தார். இதை உயர்த்தித் தருவதாக தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜெய லலிதா அறிவித்தி ருந்தார். அது இன்னமும் செயல்படுத்தப்பட வில்லை.
மூன்றரை சதவீத இடஒதுக் கீடாவது முஸ்லிம்களுக்கு முறையாக வழங்கப்படுகிறதா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. கலைஞர் ஆட்சியின் போது தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமை யில் இதை கண்காணிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டி ருந்தது. அது செயல்படுகிறதா என்று தெரியவில்லை. ஏனெ னில், அண்மையில் 1,300 மருத்துவர்களும், 41 நூலகர்க ளும் தேர்வு செய்யப்பட்டபோது, முஸ்லிம்கள் ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை.
எனவே, இடஒதுக்கீட்டை மையமாக வைத்து வரும் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி சனிக்கிழமை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்த உள்ளோம். அதில் இடஒதுக்கீடு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் அலசி ஆராயப்பட்டு, விவாதிக் கப்பட்டு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட உள்ளன.
காகிதப் பூ மணக்காது!
அ.இ.அ.தி.மு.க. அரசு இன்று விளம்பரப்படுத்தும் அனைத்துமே அறிவிப்புகள் தான். அவை திட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட வில்லை. ஏட்டளவில் உள்ள அறிவிப்புகள் திட்டங்களாக நிறைவேற்றப்படும் போது, நாம் அதை வரவேற்கலாம் - பாராட்டலாம். இப்போது அது காகிதப்பூ! மணக்காது.
கடந்த ஆட்சியில் அறிவிக் கப்பட்ட பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன., அதில் ஒன்று சுயநிதி பள்ளி களுக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத 12 ஆயி ரம் பணியிடங்களை அரசு பதவிகளாக அறிவித்து பிறப் பிக்கப்பட்ட ஆணை. அது இந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட் டுள்ளது. இதுபோன்று எத்தனையோ திட்டங்களை இந்த ஆட்சி கிடப்பில் போட்டுள் ளது.
இவ்வாறு பேராசிரியர் குறிப் பிட்டார்.

அபுதாபியில் முஸ்லிம் லீக்கினரின் சங்கமம்
ஜூன் 16 , 2012 சனிக்கிழமை , அபுதாபி கேரளா முஸ்லிம் கலாச்சார மையம்,மாட்டோல் பஞ்சாயத் பிரிவு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சமுதாயத்தின் போர்வாள் எம்.அப்துல் ரகுமான் எம்.பி. அவர்களும் ,சமுதாயத்தின் போர்முரசு கேரள சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரகுமான் ரண்டத்தானி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .
அருமையான ஏற்பாடு,அசத்தலான வரவேற்பு,தலைவர்களின் சிறப்பான பேச்சு,பிரமிக்க வைத்த கூட்டம் மொத்தத்தில் மறக்க முடியாத அனுபவம்!
அருமையான ஏற்பாடு,அசத்தலான வரவேற்பு,தலைவர்களின் சிறப்பான பேச்சு,பிரமிக்க வைத்த கூட்டம் மொத்தத்தில் மறக்க முடியாத அனுபவம்!
பிளஸ் டூ முடித்தவர்கள் நேரடியாக பிஎட் படிக்கலாம்!
பிளஸ் டூ படித்த மாணவர்கள் நேரடியாக நான்கு ஆண்டு கல்வியியல் இளநிலைப் பட்டப் படிப்பையும் ஆறு ஆண்டுகள் ஒருங்கிணைந்த முதுநிலை கல்வியியல் பட்டப் படிப்பையும் படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது மைசூரில் உள்ள மண்டல கல்வியியல் இன்ஸ்டிட்யூட். இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
தரமான கல்வியியல் படிப்புகளை வழங்கும் நோக்கத்துடன் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டதுதான் ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுக்கேஷன் எனப்படும் மண்டல கல்வியியல் இன்ஸ்டிட்யூட். ஆஜ்மீர், போபால், புவனேஸ்வரம், மைசூர் ஆகிய இடங்களில் இந்த மண்டல மையங்கள் உள்ளன. மைசூரில் உள்ள மண்டல மையத்தில் உள்ள கல்வியியல் பட்டப் படிப்புகளில் சேருவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இங்கு பிஎஸ்சிஎட் என்ற ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு பட்டப் படிப்பு உள்ளது. பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளையோ இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளையோ, தாவரவியல், உயிரியல், வேதியியல் பாடப்பிரிவுகளையோ எடுத்துப் படித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வுகளில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பிஏஎட் என்ற நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த நான்கு ஆண்டு பட்டப் படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம். பிளஸ் டூ வகுப்பில் ஆங்கிலம், பிராந்திய மொழிப் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். அத்துடன், வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் விஞ்ஞானம், சமூகவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் இரண்டு பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். பிளஸ் டூ தேர்வுகளில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
இதுதவிர, இந்தக் கல்வி நிலையத்தில் எம்எஸ்சிஎட் (இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில்) என்ற ஆறு ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை கல்வியியல் படிப்பும் உள்ளது.
பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், கணிதம், வேதியியல் பாடப் பிரிவுகளை எடுத்துப் படித்து குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இந்த ஒருங்கிணைந்த முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேரலாம்.
இந்த மூன்று படிப்புகளிலும் சேர விரும்பும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5 சதவீதமதிப்பெண் சலுகை அளிக்கப்படுகிறது. இந்தப் படிப்புகளைப் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு மைசூர் பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கும். எம்எஸ்சிஎட் படிப்புக்கு அகில இந்திய அளவில் மாணவர் சேர்க்கை இருக்கும். பிஎஸ்சிஎட், பிஏஎட் படிப்புகளுக்கு தென் மாநிலங்கள் மட்டும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் சேர்க்கப்படுவார்கள். இந்த மூன்று படிப்புகளிலும் சேர விரும்பும் மாணவர்கள், பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு உண்டு. அனைத்துத் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கும், 50 சதவீதபிற மாணவர்களுக்கும் மாதம் ரூ.800 முதல் ரூ.1200 வரையும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டில் பத்து மாதங்களுக்கு மாதம் ரூ.250 வீதம் படிப்புக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு படிப்புக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியே விடுதி வசதி உள்ளது. இந்தப் படிப்புகள் அனைத்தும் ஆங்கில மீடியத்தில் மட்டுமே நடத்தப்படும்.
இந்தப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 'Principal, Regional Institute of Education, Mysore' என்ற பெயருக்கு மைசூரில் மாற்றத்தக்க வகையில் ரூ.500க்கான டிமாண்ட் டிராப்ட் (தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு ரூ.350க்கான டிமாண்ட் டிராப்ட்) எடுக்க வேண்டும். 26 செமீ து 12 செமீ நீளமுள்ள உறையில் ரூ.10 மதிப்புள்ள தபால் தலையை ஒட்டி சுயவிலாசத்தை எழுதி, டிராப்ட்டை இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தக் கல்வி நிலையத்தில் நேரடியாகவும் விண்ணப்பங்களைப் பெறலாம். ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 'Section Officer (academic), Regional Institute of education, Mysore - 570006' என்ற முகவரிக்கு ஜூலை 2ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் எம்எஸ்சிஎட் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஜூலை 15-ம் தேதி நடைபெறுகிறது. பிஎஸ்சிஎட் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது. பிஏஎட், எம்எட் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. மைசூர், ஆஜ்மீர், போபால், புவனேஸ்வரம், ஷில்லாங், புதுதில்லி ஆகிய இடங்களில் எம்எஸ்சிஎட் நுழைவுத் தேர்வு நடைபெறும். பிஎஸ்சிஎட், பிஏஎட், எம்எட் நுழைவுத் தேர்வுகள் மைசூரிலுள்ள ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுக்கேஷன் கல்வி நிலையத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தரமான கல்வியியல் படிப்புகளைப் படிப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் மைசூரில் உள்ள ரீஜினல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுக்கேஷன். இந்தக் கல்வி நிலையத்தில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
விவரங்களுக்கு: www.riemysore.ac.in
மேலும் சில படிப்புகள்
இந்தக் கல்வி நிலையத்தில் எம்எட் ஓராண்டு படிப்பில் சேர பிஎட், பிஎஸ்சிஎட், பிஏஎட் அல்லது அதற்கு இணையான பட்டப் படிப்புகளைப் படித்திருக்க வேண்டும். பட்டப் படிப்புகளில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு மதிப்பெண்களில் 5 சதவீதம் சலுகை உண்டு. முதுநிலைப் பட்டத்துடன் பிஎட் படித்த மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்பில் தென்மாநில மற்றும் யூனியன் பிரதேச மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவர். பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள், நுழைவுத் தேர்வு அடிப்படையில் இந்தப் படிப்புக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் படிப்பில் சேர தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. கைடன்ஸ் அண்ட் கவுன்சலிங் என்ற ஓராண்டு டிப்ளமோ படிப்பும் இங்கு உள்ளது. இந்தப் படிப்பு, தொலைநிலைக் கல்வி மூலம் வழங்கப்படுகிறது. இந்தத் தொலைநிலைப் படிப்புக்கு வரும் செப்டம்பர், அக்டோபரில் அட்மிஷன் நடைபெறும்.
நன்றி :புதிய தலைமுறை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)