Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக விடுதலை செய்யகோரி மார்ச் மாதம் நாடுதழுவிய பேரணி - பேராசிரியர் கே.எம்.காதிர் மொஹிதீன்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவையின் 2 நாள் பயிலரங்கம் சென்னை கிழக்கு கடற்கரைசாலை முட்டுக்காட்டில் அமைந்துள்ள மசூதி தோட்டத்தில் நடை பெற்றது. அதனில் கலந்துகொண்ட பின் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலா ளரும், மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது,

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் துணை அமைப்புகளாக தேசிய அளவில் முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திரத் தொழிலாளர் யூனி யன், மகளிர் அணி ஆகியவை கள் உள்ளன. அதில் ஒன்றான முஸ்லிம் மாணவர் பேரவையை (எம்.எஸ்.எஃப்.) தமிழகத்தில் பலப்படுத்தும் நோக்கத்தோடு 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்
டுள்ளன.

சென்னை மண்டலத்தில் அடங்கிய வட சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், விழுப்புரம் கிழக்கு, மேற்கு, வேலூர் கிழக்கு, மேற்கு, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் புதுவை ஆகிய மாவட் டங்கள் அடங்கிய சென்னை மண்டலத்திற் கான 2 நாள் பயிலரங்கம் நடைபெறுகிறது.

இதில் 458 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். ஒவ்வொ ருவரும் 50 ரூபாய் நுழைவு கட்டணம் செலுத்தி தங்களது சொந்த செலவில் வந்து பங் கேற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தஞ்சை மண்டலம் சார்பில் தரங்கம்பாடியிலும், நெல்லை மண்டலம் சார்பில் குற்றாலத்திலும், மதுரை மண்டலம் சார்பில் கொடைக் கானலிலும் பயிலரங்கங்கள் நடைபெற உள்ளன.

அதனைத்தொடர்ந்து மாநில அளவிலான முஸ்லிம் மாணவர் பேரவை மாநாடு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது.

இந்த பயிலரங்கத்தில் மாணவர்களின் ஒழுக்கம், யோகா பயிற்சி, தீவிரவாத எதிர்ப்பு, மது, பாலியல் வன் கொடுமை, கல்லூரிகளில் ஆயுதம் ஏந்தி வன்முறை உள்ளிட்டவை நுழைய விடக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வும், பயிற்சியும் அளிக்கப்பட்டது.

பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டுப் பயணம் செய்யாத மாணவ சமுதாயத்தை உருவாக்குவது நமது லட்சியமாக இருக்க வேண்டும் என்றும் மாணவர்க ளுக்கு வலியுறுத்தப்பட்டது.. தலைவர்கள், அறிஞர் பெருமக் கள் பங்கேற்று பயிற்சி அளித்த னர்.

மத்திய - மாநில அரசுகள் மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கி வருகிறது. அவைகளை முழுமையாக பயன்படுத்தக் கூடிய வழி முறைகள் குறித்தும் மாணவர் களுக்கு அறிவுறுத்தப்பட்டன.

இந்த பயிலரங்கத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. 

அவை, 1. கல்விக் கடன் பெறும் வழிமுறையை இலகு வாக்க வேண்டும்.

 2. கல்விக் கடனுக்கான வட்டியை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும்

 3. மாவட்ட தலைநகரங்களில் சிறுபான்மையின ருக்கான விடுதிகள் அமைக்கப்பட வேண்டும்.

  4. வன்முறை, மது, ஆபாசம், பாலியல் கொடுமை, திரைப்பட தீவிரவாதம் உள் ளிட்டவைகளிலிருந்து இளைய சமுதா யத்தை காப்பது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.

இந்த தீர்மானங்களை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரசாரத்தை முஸ்லிம் மாணவர் பேரவையினர் தமிழகம் முழுவ தும் செய்ய வேண்டும் என இந்த பயிலரங்கத்தில் பயிற்றுவிக் கப்பட்டது.

மாணவர்களுக்கான கல்விக்கடன் பெறுவதில் ஏற்படும் இடையூறு களை யப்பட்டு கடன் பெறும் நடை முறைகள் இலகுவாக்கப்பட வேண்டும் என்றும், கடனுக் கான வட்டியை ரத்து செய்ய வலியுறுத்தியும் முஸ்லிம் மாண வர் பேரவை சென்னையில் பேரணி நடத்த உள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு களின்படி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனில் இந்தியாவில் சிறு பான்மையினர் 18 சதவீதம் வாழ்கிறார்கள் என்றும், அந்த சிறுபான்மையினரில் பெரும் பான்மையினர் முஸ்லிம்கள் என்று தெரிவித்து, கல்வி வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் தனி இடஒதுக்கிடு இஸ்லாமி யர்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந் துரை செய்துள்ளது. அந்த பரிந் துரையை வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள மாநிலத் தலைநகரங் களில் கவன ஈர்ப்பு பேரணி நடை பெற உள்ளது.

தமிழகத்தில் இப் பேரணி நடைபெறும் இடமும், தேதியும் வரும் 16-ம் தேதியன்று திண்டுக்கல்லில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு வில் முடிவு செய்து அறிவிக்க உள்ளோம்.

இப்பேரணியில் நாடு முழுவதும் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்த உள்ளோம்.

இந்தியாவில் 4 மாநிலங்கள் தான் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படுகி றது. தமிழ்நாட்டில் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு கலைஞர் முதல்வராக இருந்தபோது சட்ட சிக்கல் இல்லாமல் வழங்கினார்.

கேரளாவில் 12 சதவீதம் வழங்கப்படுகிறது. கர்நாட காவில் 4 சதவீதம் வழங்கப் படுகிறது. ஆந்திராவில் அறி விக்கப்பட்டு நீதிமன்றம் தடை செய்து விட்டது. மணிப் பூரில் 4 சதவீதம் வழங்கப்படுகிறது. அனைத்து மாநிலங்க ளும் இதனை பின்பற்றி முஸ்லிம் களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதிர் மொகிதீன் பேட்டியில் தெரிவித்தார்.

15 இடங்களில் பசுமை 'ஏர்போர்ட்' மத்திய அமைச்சர் அஜித்சிங் தகவல்


"இந்தியா முழுவதும், 15 இடங்களில் பசுமை விமான நிலையம் கொண்டு வரப்பட உள்ளது' என, மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர், அஜித்சிங் கூறினார். புதுச்சேரி விமான நிலையத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள, பயணிகள் முனையக் கட்டடத் திறப்பு விழா, நேற்று நடந்தது. புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி, முன்னிலை வகித்தார்.

மத்திய அமைச்சர் நாராயணசாமி, மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வேணுகோபால், வாழ்த்திப் பேசினர். பயணிகள் முனையக் கட்டடத்தை திறந்து வைத்து, சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங் பேசியதாவது: இந்தியாவில், கடந்த பத்தாண்டுகளில், விமான சேவை வேகமான வளர்ச்சி கண்டுள்ளது.

உள்நாட்டு விமான சேவையில், சிறிய விமானங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவில், 2003-04ம் ஆண்டில், சிறிய ரக விமான சேவையின் பயன்பாடு, 1 சதவீதமே இருந்தது. தற்போது, சிறிய விமான சேவைகளின் பயன்பாடு, 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், பெரிய விமான நிறுவனங்கள் கூட, உள்ளூரில் சிறியரக விமான சேவை துவங்குவதில், ஆர்வம் காட்டுகின்றன.

வெகு தொலைவில் இருக்கும் உள்ளூர் நகரங்களுக்கு, போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுப்பதில் சிக்கல் உள்ளது. இந்த இடங்களுக்கு, விமான சேவை பொருத்தமானதாக இருக்கும். இதனால், இந்தியா முழுவதும், 15 இடங்களில் பசுமை விமான நிலையம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பசுமை விமான நிலையங்களில், எந்த வகை சிறிய ரக விமான இயக்குவது என பரிசீலிக்கப்படுகிறது. இதன் மூலம், உள்ளூர் நகரங்கள் ஒன்றொடு ஒன்று இணைக்கப்பட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இவ்வாறு அமைச்சர் அஜித்சிங் பேசினார்.

எம்ப்ளாய்மென்ட் நியூஸ் செய்தித்தாள் இனி இ-வெர்சனிலும்...


 வாரந்தோறும் வெளிவரும் மத்திய அரசின் வேலைவாய்ப்பு செய்தித்தாளான எம்ப்ளாய்மென்ட் நியூஸ், இனிமேல், இணையதளத்திலும் "இ-வெர்சன்" வடிவில் கிடைக்கும்.

அந்த செய்தித்தாளின் சந்தாதாரர்கள், இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான User ID மற்றும் Password போன்றவை, சந்தாதாரரின் பதிவு எண்ணாகவே இருக்கும்.

விரிவான விபரங்களை அறிய http://www.employmentnews.gov.in/ and http://www.employmentnews.gov.in/signon.asp ஆகிய வலைத்தளங்களுக்கு செல்க.

அனைத்து பள்ளிகளுக்கும் இணையதள வசதி


தமிழக அரசின் அனைத்து அலுவலகங்கள், அரசு நிறுவன அலுவலகங்கள், பள்ளிகளில் இணையதள வசதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஒப்பந்த அடிப்படையில், தொலைத் தொடர்பு, பிராட்பேண்ட் இணைப்பை பெற, எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

50 கோடி ரூபாய் மதிப்பிலான இப்பணிகள், மூன்று மாதங்களில் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் நிர்வாகப் பணிகள் அனைத்தும், மின்னணு முறையில் மாற்றப்பட்டு வருகிறது. இதனால், அரசின் தகவல் பரிமாற்றங்களைக் கூட, மின்னணு முறையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, தமிழக ஏரியா நெட்வொர்க், தமிழக டேட்டா மையம், மின்னணு மாவட்டத் திட்டம், மாநில சேவைகளை வழங்கும் வழித் தடம் ஆகிய திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்களை, மாநில அரசு அலுவலர்கள் பயன்படுத்த வேண்டும் என்றால், அலுவலகங்களை இணையதளத்தில் இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தின் அன்றாடப் பணிகளை, மின்னணு முறைக்கு மாற்ற வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

பல சேவைகளை, ஆன்-லைனில் செய்ய வேண்டி இருப்பதால், இணையதள இணைப்புகள் அவசியமாகின்றன. எனவே, தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களிலும், இணையதள வசதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவற்றோடு, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், இணையதள வசதி ஏற்படுத்தப்படுகிறது. இணையதள வசதியோடு, ஒவ்வொரு துறை அலுவலகங்களும், வங்கிகளைப் போல, கணினி நெட்வொர்க்கில் இணைக்கப்படுகின்றன.

இதற்காக, அரசு மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கும், ஒப்பந்தப் புள்ளியை, எல்காட் நிறுவனம் கோரியுள்ளது.ஒவ்வொரு அலுவலகத்துக்கும், தரை வழி தொலைபேசி இணைப்புடன், பிராட்பேண்ட் இணைப்புகள் வழங்குதல், தரை வழி தொலைபேசிக்கு, இலவச உள் அழைப்பு வசதி மட்டும் இருக்கும் வகையில், இணைப்புகள் அளிக்கப்படுகின்றன.

இதுகுறித்து, தமிழக அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து அலுவலகங்களும், இணையதள வசதி பெறும் போது, தகவல் பரிமாற்றம் எளிதாவதோடு, அரசின் அனைத்து செயல் மற்றும் தகவல்களை, இணைய தளம் மூலம், உடனுக்குடன் அறிய முடியும்.

நாட்டின் கடை கோடியில் இருக்கும் அலுவலகங்கள் கூட, மக்களுக்கு உடனுக்குடன் சேவையை அளிக்க முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஒப்பந்தப் புள்ளிகள் முடிவு செய்யப்பட்டு, மூன்று மாதங்களில், அனைத்து அலுவலகங்களிலும், இணையதள வசதி அளிக்கப்படும் என, எல்காட் வட்டாரங்கள் கூறுகின்றன.