Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

செவ்வாய், 1 ஜனவரி, 2013

பெண்களை போலீஸ் ஸ்டேசனில் விசாரணைக்கு அழைக்க ‌கூடாது: பஞ்சாப் முதல்வர் உத்தரவு


பஞ்சாப்பில், விசாரணை என்ற பெயரில் இனி பெண்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தக்கூடாது என அம்மாநில முதல்வர், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த சிலநாட்களுக்கு முன் பஞ்சாப் மாநிலம் பாடியாலா மாவட்டத்தில் டீன்ஏஜ் பெண் ஒருவர் மர்மகும்பலால் கற்பழிக்கப்பட்டார்.

இது தொடர்பாக அவரை போலீசார் அடிக்கடி போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.இதனால் அவர் மனவேதனை அடைந்தார்.இதையடுத்து அம்மாநில முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், மாநில டி.ஜி.பி.க்கு பிறப்பித்த உத்தரவில், பெண்கள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது சம்பந்தப்பட்ட பெண்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தக்கூடாது.

அப்படி விசாரிக்க நேரிட்டால், புகாரை பெற்று சம்பந்த பெண்ணின் வீட்டிற்கே, பெண் போலீசாரை அனுப்பி வீட்டில் வைத்தே விசாரணை நடத்த வேண்டும். தவிர பெண்கள்,‌ பெண் குழந்தைகள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்டம் தோறும் பிரத்யோக கோர்ட்டுகள் அமைக்கவும் பஞ்சாப் , அரியானா கோர்ட் தலைமை நீதிபதி ஏ.கே.சிக்கிரிக்கு கடிதம் வாயிலாகவும் பாதல் பரிந்துரைத்துள்ளார்.

211 பல்கலை பணியிடங்களுக்கு 15 ஆயிரம் பேர் விண்ணப்பம்


மதுரை காமராஜ் பல்கலையில் எழுத்தர் உட்பட காலியாக உள்ள 211 பணியிடங்களுக்கு, 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இப்பல்கலையில், 176 எழுத்தர், 35 வாட்ச்மேன், துப்புரவு மற்றும் தோட்டப் பணியாளர் என, 211 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், டிச.,28 வரை பெறப்பட்டன. இதில், 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து துணைவேந்தர் கல்யாணி கூறுகையில், எதிர்பார்த்ததை விட ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. உரிய ஆய்வுக்கு பின் தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தேர்வு செய்யும் முறை குறித்து ஆலோசிக்கப்படுகிறது விரைவில் அறிவிக்கப்படும், என்றார்.

காயிதே ஆஜம் ,முஹம்மது அலி ஜின்னா ஒரு மதச்சார்பற்ற தலைவர் , அத்வானி மீண்டும் ஒப்புதல்


"ராமகிருஷ்ண மடத்தின் முன்னாள் தலைவர், ரங்கநாதானந்தர் கூறியதன் படியே, முகமது அலி ஜின்னாவை, மதச்சார்பற்ற தலைவர் என கூறினேன்,'' என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், நேற்று முன்தினம் அத்வானி கூறியதாவது:சிறு வயதில் நான், பாகிஸ்தானின், கராச்சி நகரில் வசித்த போது, அங்குள்ள, ராமகிருஷ்ண மடத்திற்கு செல்வது வழக்கம். அங்கு, சுவாமி ரங்கநாதானந்தரின் சொற்பொழிவுகளை கேட்பது உண்டு.
நாடு பிரிவினை அடைந்து இந்தியா வந்த பின், கோல்கட்டாவில், சுவாமியை சில முறை சந்தித்துள்ளேன். ஒரு முறை சந்திக்கும் போது, பாகிஸ்தான் அரசியல் அமைப்பு சட்ட சபையில், முகமது அலி ஜின்னா பேசியதை, சுவாமி என்னிடம் கூறினார்.

"பாகிஸ்தான் மக்கள், மத வேறுபாடுகளை தவிர்க்க வேண்டும்' என, ஜின்னா பேசியுள்ளதை, சுவாமி மூலம் தான் அறிந்தேன். அதன் படி தான், ஏழு ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தான் சென்றிருந்த போது, "ஜின்னாவை மதச் சார்பற்ற தலைவர்' என, கூறினேன்.இவ்வாறு, அத்வானி பேசினார்.