Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 23 பிப்ரவரி, 2013

தங்கம் தகடாக மாறாது...!

என்ன கிடைக்கும்?
முஸ்லிம் லீகையும்,முஸ்லிம் லீக் தலைவர்களையும்
வறுத்தெடுத்து விமர்ச்சிக்க...
ஆஹா கிடைத்ததே!
தின மலத்தின் ஒரு நாள் மலம்,
படம் போட்டு தந்தோமே சமுதயத்திற்கு...

சந்தையில் எடுப்பட்டது
சமுதயத்திற்கு சந்தேகமும் ஏற்பட்டது
சான்றுகள் கிடைத்ததும் சமாதானம் ஆனது.

ஆம்...!
ஏழரை ஆண்டுகளுக்கு முன்னால்
சாமியாருக்கு முன்பாக கையில் எலுமிச்சை பழம்,
அதே படத்தில் கையில் இன்று ஆப்பிள்....

பாவம்...!
திருடர்களுக்கு தப்பிக்கத் தெரியவில்லை
தின மலத்தை கண்டித்து  தலைவர் சொன்ன
அறிக்கையில்  உண்மை வெளிவந்ததும்
உருக்குலைந்து போனார்கள் உளவாளிகள்!

வேறு என்ன கிடைக்கும்?
கிடைத்ததே! இட ஒதுக்கீடு
உண்மைகளை தொலைத்துக்கட்ட...

ஒரு வார்த்தையில் ஒருவர் சொன்னார்!
இட ஒதுகீட்டிற்காக முஸ்லிம் லீக்
எதுவுமே செய்ய வில்லை என்று...

அவர்களுக்குத் தெரிய வில்லை
முஸ்லிம் லீகில் வரலாறு எழுத்திலும் இருக்கும்,
படத்திலும் இருக்கும்,உயிருடன் நடமாடும்
,எழுத்தரசு,போன்ற பல்கலை கழகங்களிலும் இருக்குமென்று.

பாவம்....
வாயடைத்துப் போனார்கள்
ஆதாரங்களின் அணிவகுப்பை அடுக்கிய போது..,

சிராஜுல் மில்லத்தின் கண்டிப்பான வேண்டுகோளையும்
முதல்வரின் கனிவான பதிலையும்,
இறுதியிலே நன்றி கூறும் வார்த்தைகளை உள்ளடக்கிய
படத்தையும் பார்த்து...படபடத்து போனார்கள்...

இது தவிர வேறு என்ன கிடைக்கும்?
கிடைக்கும் எது கிடைத்தாலும்
சமுதாயத்தின் வலிமையான கோரிக்கைகள்
வரலாறாக கிடைக்கும்...!

ஆம்..!
வரவு செலவு கணக்கில் சிக்கி
வம்பில் மாட்டியவர்கள் இல்லை...!

வாலிபர்களின் உண்ர்வுகளைத் தூண்டி
வருடக் கணக்கில் வழக்குகளில் சிக்க
வைத்த பெருமைக்குரியவர்களும் இல்லை...!

மானம்,மரியாதை உள்ள சமுதாயத்தை
இன்றும் கண்ணியதோடும் கவுரவத்தோடும்
வழி நடத்திச் செல்லும்
வரலாற்று நாயகர்கள்...!

தங்கம் தகடாக மாறாது
தாய்ச் சபையின் தலைவர்கள்
அன்றும்....
இன்றும்....
என்றும்...தங்கத் தலைவர்கள்...!

அதனாலே தான்...!
நூறாண்டு வரலாறு கொண்ட இயக்கத்தின்
தலைவர்கள் வரலாற்றில் மின்னிக்கொண்டிருக்கிறார்கள்
(அல்ஹம்துலில்லாஹ்!)




லால்பேட்டை  ஏ.எஸ்.அப்துல் ரஹமான்,அபுதாபி.


வங்கிகளில் உரிமை கோரப்படாத ரூ. 2,481 கோடி: அமைச்சர் நமோ நாராயண் மீனா


 மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:ரிசர்வ் வங்கி அளித்த தகவல்படி, 2011ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையில், ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் கணக்குகளில் உள்ள, 2,481 கோடி ரூபாய் இதுவரை யாரும் உரிமை கோரப்படாமல் உள்ளது. இவ்வாறு, உரிமை கோரப்படாமல் உள்ள பணம், வங்கி ஒழுங்குமுறை சட்டப்பட்டி, முதலீட்டாளர் விழிப்புணர்வு நிதிக்கு பயன்படுத்தப்படும்.

இந்த நிதியை நிர்வகிப்பதற்கு, கமிட்டி நிர்வாகியை, ரிசர்வ் வங்கி நியமிக்கும். செயல்படாத கணக்குகளை, வங்கிகள் ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும். மீண்டும் கணக்கை செயல்படுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் முன்வந்தால் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் வழியில் தேர்வானவர்கள் பணிக்கு சேர்வதில் சிக்கல்!


ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில், வரலாறு உட்பட மூன்று பாடங்களில், தமிழ்வழி சிறப்பு ஒதுக்கீட்டில் தேர்வான, முதுகலை பட்டதாரிகள், பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.

அரசு துறைகளில் பணியில் சேர, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத சிறப்பு ஒதுக்கீடு உள்ளது. கடந்த செப்டம்பரில், டி.ஆர்.பி., தேர்வில், அரசுப்பள்ளிகளுக்காக, 2000க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில், தமிழ் வழிக்கல்வி ஒதுக்கீட்டில், 100 க்கும் மேற்பட்டோர் தேர்வாகினர்.

தமிழகத்தில் இப்பாடங்களுக்கு தமிழ் வழியில் முதுகலை பிரிவு, ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. அக்கல்லூரிகள் எந்த பல்கலை நிர்வாகத்தின் கீழ் வருகிறது, அரசு ஒப்புதல் உள்ளதா போன்ற உண்மைத் தன்மை குறித்த ஆய்விற்கு பிறகே, பணியில் சேர முடியும். இதனால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பாடங்களில் தேர்ச்சி பெற்றோர் கூறுகையில், "ஏற்கனவே விண்ணப்பத்தில் குறிப்பிட்ட படியும், சான்றுகளின் அடிப்படையிலும் தமிழ்வழி ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றுள்ளோம். உண்மை தன்மை ஆய்வு என்ற பெயரில், தேர்ச்சி பெற்றும் 5 மாதங்களாக பணிக்கான உத்தரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம், என்றனர்.

கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், "தமிழ் வழியில் பாடப்பிரிவு உள்ள கல்லூரிகளில், சம்பந்தப்பட்ட பல்கலை மூலம் ஆய்வுப்பணி நடக்கிறது. விரைவில் நியமன உத்தரவு வரும் என, எதிர்பார்க்கிறோம்" என்றனர்.

ஜவகர் சிறுவர் மன்றங்கள் விரைவில் அமையுமா?


ஒன்றியங்கள் தோறும், ஜவகர் சிறுவர் மன்றங்கள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அத்திட்டத்தை அமல்படுத்த, அரசு முன்வந்துள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில், 5 முதல், 16 வயதுக்கு உட்பட்ட, மாணவர்களிடையே, மறைந்திருக்க கூடிய, ஆக்கப்பூர்வமான திறமைகளை கண்டுணர்ந்து, பயிற்சி அளித்து, அவற்றை வெளிப்படுத்துவதற்காக, 1979ல், "தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம்" துவங்கப்பட்டது. கலை மற்றும் பண்பாட்டுத்துறையில் செயல்படும், இம்மன்றத்தில், 24 மாவட்ட சிறுவர் மன்றங்கள், 10 விரிவாக்க மையங்கள், இரண்டு ஊரக மையங்கள் உள்ளன.

தமிழகம் முழுவதும், 36 சிறுவர் மன்றங்கள் தவிர்த்து, சென்னையில், தாம்பரம், சேலையூர், புழுதிவாக்கம், வியாசர்பாடி ஆகிய இடங்களில் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், கைவினை, குரலிசை, நாடகம், உடல்திறன், மிருதங்கம், தபேலா போன்ற, 20க்கும் மேற்பட்ட கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் மாலை நேரங்களில் நடத்தப்படும் பயிற்சி மையங்களில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

குறிப்பாக, ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம், கடந்த, கோடைகாலத்தில் அளிக்கப்பட்ட பயிற்சி முகாம்களில், 4,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர். கிராமப்புறங்களில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மாலை நேரத்தில், இங்கு, பொழுதை வீணாக கழித்து வருகின்றனர். இம்மாணவர்களின் எதிர்கால வாழ்விற்காக, ஒன்றியங்களில் சிறுவர் மன்றங்கள் அமைத்து, பல்வேறு கலை பயிற்சி, கைவினை பயிற்சி அளித்தால், அவர்களின் வாழ்க்கை மேம்படும் என, பல ஆண்டாக கோரிக்கை எழுந்து வந்தது.

இதனால், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், ஒன்றியங்கள் தோறும், சிறுவர் மன்றங்களை அமைக்க, பொதுமக்கள் கோரி விடுத்து வந்தனர். இந்நிலையில், ஒன்றியங்களில், சிறுவர் மன்றங்கள் அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக, தெரிகிறது. மேலும், இத்திட்டம் குறித்த அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியாகலாம் எனவும், அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது. இது குறித்து, கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, விளக்கம் அளிக்க மறுத்து விட்டனர்.