மத்திய நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:ரிசர்வ் வங்கி அளித்த தகவல்படி, 2011ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையில், ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் கணக்குகளில் உள்ள, 2,481 கோடி ரூபாய் இதுவரை யாரும் உரிமை கோரப்படாமல் உள்ளது. இவ்வாறு, உரிமை கோரப்படாமல் உள்ள பணம், வங்கி ஒழுங்குமுறை சட்டப்பட்டி, முதலீட்டாளர் விழிப்புணர்வு நிதிக்கு பயன்படுத்தப்படும்.
இந்த நிதியை நிர்வகிப்பதற்கு, கமிட்டி நிர்வாகியை, ரிசர்வ் வங்கி நியமிக்கும். செயல்படாத கணக்குகளை, வங்கிகள் ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும். மீண்டும் கணக்கை செயல்படுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் முன்வந்தால் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக