Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 16 ஜனவரி, 2013

ராஜஸ்தான் சாமியார் அஸ்ராம் பாபு 700 கோடி ரூபாய் நில மோசடி

மத்திய பிரதேசத்தில், 700 கோடி ரூபாய் மதிப்புள்ள நில மோசடி குறித்து,ராஜஸ்தான் சாமியார் அஸ்ராம் பாபுவிடம், விசாரணை நடந்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் அஸ்ராம் பாபு. சாமியாரான இவர், சமீபத்தில், டில்லி கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், மத்திய பிரதேசம், ரட்லம் பகுதியில், டில்லி-புனே சாலையில், ஜெயந்த் வைட்டமின்ஸ் என்ற நிறுவனம் உள்ளது.

இது, குளூக்கோஸ் மற்றும் வைட்டமின் மருந்துக்களை தயாரித்து வருகிறது. மத்திய அரசின் நிறுவனங்கள் பட்டியலில் இருந்து, இந்த நிறுவனம், ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டது. கடந்த, 2000ம் ஆண்டு, இந்த நிறுவனத்தின், 200 ஏக்கர் நிலத்தை, சாமியார் அஸ்ராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் ஆகியோர், மோசடி செய்து அபகரித்ததாக, நிறுவனத்தைச் சேர்ந்த பங்குதாரர் புகார் செய்தார். இரண்டாண்டுகளாக நடந்து வரும் இந்த விசாரணை குறித்து, மத்திய அரசின் நிறுவனங்கள் விவகாரத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "அஸ்ராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு குறித்து, விசாரணை நடத்திய அதிகாரிகளின் அறிக்கையும், பரிந்துரையும் எங்களுக்கு கிடைத்துள்ளது' என்றார்.

உதயமே ! நபி உதயமே !


பிறப்பதும் ஒன்று ,இறப்பதும் ஒன்று 
சிறப்பது செம்மையின் சிகரம் என்று 

முறையுடன் வாழ்ந்து நிறைகுடம் காட்டி 
நிறைவுடன் நெஞ்சில் மறை மனம் பூட்டி 

அருள் நபி நாதர் புகழ் தெரியுதே !
தீன் ஆத்மீக வழியும் புரியுதே !

உங்கள் மொழியாவும் வழியானதே !
உங்கள் வழியாவும் வாழ்வானதே !

உதயமே ! நபி உதயமே !

மூணாறில் "மைனஸ் 2 டிகிரி''

 மூணாறில் குளிர் காலம் பிப்ரவரி வரை நீடிக்கும். இதில், டிசம்பர் இறுதி முதல் ஜன., 15 வரை, "மைனஸ் டிகிரி செல்சியஸ்' ஆக மாறி, பனிப் பொழிவு இருக்கும். கடந்த 2011 டிச., 27,28 ல், குறைந்த பட்சமாக "மைனஸ் 2 டிகிரி செல்சியஸ்' எட்டியது. கடந்த டிச., 15 வரை, சராசரி வெப்பநிலை "4 டிகிரி முதல் 6 டிகிரி செல்சியஸ்' ஆக இருந்தது. அதன்பின், காற்று வீசியதால் குளிர் குறைந்தது; சிறிய மழையும் பெய்தது. தற்போது, குளிர் மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று காலை, "3 டிகிரி செல்சியஸ்' இருந்தது. நகரில் இருந்து மூன்று கி.மீ., ல் உள்ள சிவன்மலை, சொக்கநாடு பகுதிகளில், "மைனஸ் 1 டிகிரி' ஆக குறைந்தது. அப்பகுதிகளில் பனிப்பொழிவு காணப்பட்டது. நேற்று, பகலிலும் குளிர் இருந்தது. 

காங்கிரஸ் கட்சிக்கு உயிர்கொடுத்த ராஜசேகர ரெட்டியின் மனைவி தன மகனுக்காக ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை


சிறையில் வாடும் தனது மகன் ஜெகன்மோகன்ரெட்டியை விடுதலை செய்ய கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார் அவரின் தாயார் விஜயலெட்சுமி. ஆந்திராவில் ஓய்.எஸ்.ஆர்.காங்.கட்சியின்தலைவரும், கடப்பா எம்.பி.யுமான ஜெகன்மோகன்‌ரெட்டி (40). சொத்து குவிப்புவழக்கில் சி.பி.ஐ.போலீசாரால் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார்.இவரின் ஜாமின் மனு கோர்ட்டுகளில் தள்ளுபடியானது. சான்சல்குடா சிறையில் உள்ளார்.

இவரின் தாயாரும், எம்.எல்.ஏ.வுமான, விஜயலெட்சுமி (56), நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை , டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது , கடந்த ஆண்டு மே மாதம் முதல் தனது மகன் ஜெகன்மோகன் ,சிறையில் வாடி வருகிறார். ஆளும் காங்கிரஸ் அரசு தன் மகனை பழிவாங்குகிறது எனவும், ஜெகன்மோகன் ரெட்டியை விடுதலை செய்யக்கோரினார். மேலும் ஜெகன் மோகனை விடுதலை செய்ய கோரி 1கோடியே 9 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுவையும் அளித்தார்.

பள்ளிகளுக்கு ஒதுக்கிய நிதியில் அதிகாரிகள் முறைகேடு


தேனி மாவட்டத்தில், இலவச பொருட்களை பள்ளிகளுக்கு அனுப்ப ஒதுக்கிய நிதியை, பள்ளிகளுக்கு வழங்காமல், கல்வித்துறை அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுக்க பள்ளிகளுக்கு அரசு நேரடியாக நிதி வழங்க வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்தி உள்ளன.

மாணவர்களுக்கு ஆண்டிற்கு நான்கு முறை சீருடைகள், மூன்று முறை நோட்டு, புத்தகங்கள், கலர் பென்சில்கள், செருப்பு, கணிதவியல் பெட்டி உட்பட பொருட்களை, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கி வருகிறது.

இப்பொருட்களை மாவட்டத்திற்கு கொண்டு வருவதில் இருந்து, பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கும் வரை, அனைத்து செலவுகளையும், கல்வித்துறை ஏற்றுக் கொள்கிறது. இதற்காக, ஒவ்வொரு உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் இருந்தும், ஒவ்வொரு பள்ளியும் எவ்வளவு தொலைவில் உள்ளது என, வரைபடம் தயாரித்து, கல்வித்துறைக்கு அனுப்பப்படுகிறது.

அதன் அடிப்படையில், இலவச பொருட்களை பள்ளிகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்கு தேவையான நிதியை, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, அரசு வழங்கி விடுகிறது. அவர்கள், இந்நிதியை பள்ளிகளுக்கு வழங்குவதில்லை.

பொருட்களையும், பள்ளிகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதில்லை. மாறாக, அனைத்து பள்ளிகளுக்கும் போன் மூலம் தகவல் தெரிவித்து, உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு வந்து பொருட்களை எடுத்துச் செல்லுமாறு, கூறி விடுகின்றனர்.

பள்ளி நிர்வாகங்கள், தங்கள் சொந்த செலவில் இந்த பொருட்களை எடுத்துச் சென்று, மாணவர்களுக்கு வழங்குகின்றனர். அதிகாரிகள், பள்ளிகளுக்கு கொண்டு போய், பொருட்களை வழங்கியதாக கணக்கு காட்டி, நிதி முறைகேடு செய்கின்றனர். இதனால், கல்வித்துறை அதிகாரிகள் மீது, பள்ளி நிர்வாகங்கள் அதிருப்தியில் உள்ளன. பள்ளிகளுக்கு அரசு நேரடியாக நிதி வழங்க வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்தி உள்ளன.