அமெரிக்க அதிபர் பதவிக்கான இறுதிகட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. பல கட்டங்களாக நடந்த இந்த தேர்தலில் சுமார் 120 மில்லியன் மக்கள் வாக்களித்தனர்.
அமெரிக்க அதிபரை அந்நாட்டின் 538 தேர்வு குழுவினர் (எலக்டோரல் காலேஜ்) தங்கள் ஓட்டுகளின் மூலம் தேர்வு செய்கின்றனர். இதில் 270 ஓட்டுகளை பெறும் வேட்பாளரே அதிபராக முடியும்.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவும், குடியரசு கட்சி வேட்பாளராக மாசாசூசெட்ஸ் மாகாணத்தின் முன்னாள் முதல்வர் மிட் ரோம்னியும் போட்டியிட்டனர்.
அமெரிக்காவில் மொத்தம் உள்ள 84 மாகாணங்களில் இரண்டு கட்சிகளுமே சரி சமமான செல்வாக்குடன் இருப்பதாக முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இந்த தேர்தலில் 6 இந்தியர்களும் போட்டியிட்டனர்.
நேற்றைய தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒபாமாவை ஆதரித்து அமெரிக்காவில் வாழும் 75 சதவீத இந்தியர்கள் வாக்களித்தாக வாக்குப்பதிவுக்கு பின்னர் நடந்த கருத்துக்கணிப்பு உறுதிபடுத்தியது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. பென்சில்வேனியா, மாசாசூசெட்ஸ், நியூயார்க், கனெக்ட்கட், மெய்னே, மேரிலேண்ட், இல்லினாய்ஸ், மிச்சிகன், வாஷிங்டன் உள்ளிட்ட பல மாகாணங்களில் ஒபாமா அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார்.
இந்திய நேரப்படி, இன்று காலை 9 மணி நிலவரப்படி ஒபாமா 274 வாக்குகளை பெற்றார். இதன் மூலம் ஒபாமாவின் வெற்றி உறுதியானது. அவரை எதிர்த்து போட்டியிட்ட மிட் ரோம்னி 203 வாக்குகள் பெற்று பின்தங்கி இருந்தார். 10.30 மணியளவில் ஒபாமா 290 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
இதையடுத்து அவர் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து சிகாகோ நகரில் உரையாற்றினார். அவர் கூறியதாவது:
எனக்கு வாக்களித்த அமெரிக்க மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை போட்டி கடுமையாக இருந்தது. ரோம்னி கடும் சவாலாக இருந்தார். இந்த வெற்றி அமெரிக்க மக்களுக்கு கிடைத்த வெற்றி.
அமெரிக்க குடும்பமான நாம் நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றாக பாடுபடுவோம். வேலைக்காக போராடும் சூழல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது. அமெரிக்காவுக்கு சிறப்பான மாற்றம் காத்திருக்கிறது.
சாதாரண மக்களும் உயர் பதவிக்கு வரலாம். முன்னேற்றப் பாதையை நோக்கி ஒற்றுமையாக செல்வோம். நாட்டின் வளர்ச்சிக்காக ரோம்னியுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன். சிரமங்களுக்குப் பிறகே முன்னேற்றம் கிடைக்கும்.
அமெரிக்க மக்கள் கடன் சுமை இல்லாத நிலையை உருவாக்க பாடுபடுவேன். எனது வெற்றிக்காக வலிமையான ஒரு குழு பாடுபட்டது. எனது வெற்றி அமெரிக்க மக்களின் வெற்றி. என்றும் மக்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்.