Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 19 மே, 2013

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 15 நாட்களுக்கு கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணிக்கு தடை


திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 15 நாட்களுக்கு கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் (பொ) சுமித்சரண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகர போலீஸ் சட்டம் (1997) செக்ஷன் 41 (2) என்ற உத்தரவு நெல்லை, சேலம், திருச்சி மாநகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன் படி நெல்லை மாநகரப் பகுதியில் நேற்று (18ம் தேதி) முதல் வரும் ஜூன் 2ம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக் கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, தர்ணா நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொது அமைதி, மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.இத்தகவலை கமிஷனர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் தியேட்டர் டெக்னீசியன் படிப்பு


அறுவை சிகிச்சை என்பது மருத்துவத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை அறிவோம். எந்த சிறப்பு மருத்தவமனைகளிலும் ஒரு சர்ஜனின் வெற்றியானது அவரது திறமையைத் தாண்டி இது போன்ற டெக்னீசியன்களையும் பொறுத்தே அமைகிறது.

இதில் எண்ணற்ற பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் நீங்கள் சிறப்பான பயிற்சி பெறவும் சிறப்பான இடத்தில் பணி புரியவும் உதவும் பயிற்சி நிறுவனங்களின் பெயர்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

* Institute of Paramedicals, 56, Matiyari, Deva Road, Chinnhat, Lucknow 226019

* Institute of Public Health & Hygiene RZA44, Mahipalpur, New Delhi - 110037  www.iphhparamedic.org

* ALL INDIA INSTITUTE OF HYGIENE & PUBLIC HEALTH, 110, C.R. Avenue, Kolkata 700073 (W.B.)

* DR. C. V. RAMAN INSTITUTE OF SCIENCE, TECHNOLOGY, COMMERCE AND MANAGEMENT, G.G.UNIVERSITY, BILASPUR

* CHRISTIAN MEDICAL COLLEGE, Thorapadi Post, Bagayam, Vellore - 632002

* APPOLLO INSTITUTE OF HOSPITAL MANAGEMENT AND ALLIED SCIENCE, CHENNAI 

கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பு


தொழிற்படிப்புகளில் ஒன்றாக கருதப்படுவது இந்தப்படிப்பு. சி.ஏ., ஐ.சி.டபிள்யூ. ஏ.ஐ., போன்ற அறிவியல் அல்லாத தொழிற்படிப்புகளுக்கு சமமானதாக இதுவும் கருதப்படுகிறது.

பட்டப்படிப்பு முடிப்பவர்கள் வெறும் கூடுதல் தகுதிக்காக பட்டமேற்படிப்பை படிக்கிறார்கள். ஆனால் பட்டப்படிப்புக்குப் பின் இதுபோன்ற சிறப்புப் படிப்பை மேற்கொண்டால் மிகச்சிறப்பான வேலை வாய்ப்பையும் வளமான எதிர்காலத்தையும் பெற முடியும் என்பதை பலரும் யோசிப்பதில்லை.

பெரிய நிறுவனங்களில் கம்பெனி செகரட்டரியாகவும் தனிப்பயிற்சி செய்பவராகவும் தங்கள் எதிர்காலத்தை இதைப் படிப்பவர் அமைத்துக் கொள்ளலாம். உலகமயமாக்கல் சூழலில் வெளிநாட்டு வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கிறது.

+2 முடித்திருந்தால் இதில் சேர முடியும். பட்டதாரிகளும் இதில் சேரலாம். அடிப்படை படிப்பு, எக்சிகியூட்டிவ் நிலை மற்றும் தொழில்முறை படிப்பு என இதைப் படிக்க வேண்டும். ஓராண்டில் எப்போது வேண்டுமானாலும் இதில் சேரலாம். இந்த மூன்று நிலைப் படிப்புகளுக்கான தோராயமான கட்டணம் சுமார் 20 ஆயிரம் ரூபாய்.

விவரங்கள் பெறும் முகவரி:
Deputy Director,
The Institute of Company Secretaries of India,
No.9, ICSI SIRC House,
9, Wheat Crofts Road,
Numgambakkam, Chennai.
போன்: 044-2827 9898, 2826 8685
இணைய முகவரி: www.icsi.edu