திருநெல்வேலி மாநகரப் பகுதியில் 15 நாட்களுக்கு கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் (பொ) சுமித்சரண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகர போலீஸ் சட்டம் (1997) செக்ஷன் 41 (2) என்ற உத்தரவு நெல்லை, சேலம், திருச்சி மாநகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன் படி நெல்லை மாநகரப் பகுதியில் நேற்று (18ம் தேதி) முதல் வரும் ஜூன் 2ம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக் கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, தர்ணா நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொது அமைதி, மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.இத்தகவலை கமிஷனர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக