Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 12 மே, 2013

உடற்கூறியல் படிப்பு (Anatomical studies)

பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் துறையை தேர்ந்தெடுத்த மாணவர்கள், பெரும்பாலும் இயற்பியல், வேதியியல், உயிரியல் துறையை தேர்ந்தெடுக்கின்றனர். முதுகலை படிப்பையும் பெரும்பாலும் இந்த துறைகளிலேயே முடிக்கின்றனர்.

மரபணுவியல், மருத்துவ உயிர் வேதியியல், உடலியங்கியல் உள்ளிட்ட அரிய அறிவியல் படிப்புகள் இருந்தும், அவற்றை தேர்ந்தெடுத்து படிக்க முன்வருவதில்லை. இந்த துறைகள் குறித்த விழிப்புணர்வும் மாணவர்களிடம் போதுமான அளவு இல்லை.இவ்வாறு அறியப்படாமல் உள்ள அரிய படிப்புகளில் ஒன்று சென்னை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் உடற்கூறியல் படிப்பு.

உடல் உறுப்புகள் பற்றிய படிப்பான இதில், கருப்பையில் வளரும் குழந்தையின் வளர்ச்சி, மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாடுகள், மனித உடலில் உள்ள பாகங்களின் உள் அமைப்புகள், எலும்பு, மஞ்சைகளின் செயல்பாடுகள், தசைகளின் செயல்பாட்டை, நுண்ணோக்கி வழியாக பார்த்து படித்தல் உள்ளிட்டவை கற்று தரப்படுகின்றன.

பேராசிரியர் பணிஉயிரியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள், இந்த படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். உடற்கூறியல் படிப்பை முடிக்கும் மாணவர்கள், மருத்துவம், துணை மருத்துவ கல்வி நிலையங்களில் பேராசிரியராக பணிபுரிய முடியும். ஆராய்ச்சி துறையிலும் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.

இந்த படிப்பு குறித்த தகவல்களை அறிய விரும்பும் மாணவர்கள், சென்னை பல்கலைக்கழகம், தரமணி வளாகம் என்ற முகவரியிலும், 044-2454 7024 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.மேலும் ,கீழ்கண்ட கல்விநிலையங்களிலும் இந்த படிப்பை படிக்கலாம் ,

1. Bharath University , Chennai

2. Saveetha University ,Chennai 

சிறுபான்மையின மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை


சிறுபான்மையின மாணவிகளுக்கான மத்திய அரசின் மெளலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் உதவி பெற மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் பிளஸ் 1 படிக்கும் சிறுபான்மையின மாணவிகளுக்கு தலா 12,000 ரூபாய் உதவித் தொகையாக இரண்டு தவணைகளில் அளிக்கப்படுகிறது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தை www.maef.nic.in  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செயலர், மெளலானா ஆசாத் தேசிய கல்வி அறக்கட்டளை, செய்ம்ஸ் போர்டு சாலை, புதுடெல்லி-110055 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ- மாணவிகள் ஆர்வம்


கலை- அறிவியல் கல்லூரிகளுக்கு இந்த ஆண்டும் மவுசு அதிகரித்துள்ளது. மாணவர்கள் அதிக அளவில் சேருகிறார்கள்.

என்ஜினீயரிங், எம்.பி. பி.எஸ், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட பல தொழிற்கல்வி படிப்புகளில் சேர விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மற்றொருபுறம் அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் இடையே கடந்த ஆண்டை விட ஆர்வம் அதிகரித்துள்ளது. அரசு கல்லூரிகளாக இருந்தால், மிகக்குறைந்த கட்டணத்தில் சேர முடியும். தனியார் கல்லூரிகளாக இருந்தால் விரும்பிய பாடத்தை சற்று கூடுதலாக பணம் செவழித்து படிக்கலாம்.

சென்னையில் பிரெசிடென்சி, ராணிமேரி, ஸ்டெல்லா மெரி, பாரதி, காயிதே மில்லத், எத்திராஜ், லயோலா, வைஷ்ணவ், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் சேர ஏழை, எளிய, நடுத்தர மாணவர்கள் தவிர வசதி படைத்தவர்களும் படையெடுக்கிறார்கள்.

கடந்த ஆண்டை போல இந்த வருடமும் பி.காம். படிப்பதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களும் பி.காம், பி.காம் ஹானர் படிப்புகளில் சேர விண்ணப்பம் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதேபோல பி.ஏ.தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி, கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியல், பி.சி.ஏ., போன்ற படிப்பு களை அதிக அளவில் தேர்வு செய்கிறார்கள்.

பொறியியல் படித்து விட்டு ஆயிரக்கணக்கானவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கின்ற நிலை உள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு தேர்வாணையிடம் மூலம் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும், வங்கி, ரெயில்வே மற்றும் சிவில் சர்வீஸ், தேர்வுகளை என்ஜினீயரிங், மருத்துவம் படித்த ஆயிரக்கணக்கானவர்கள் சமீப காலமாக எழுதி வருகிறார்கள். அரசின் உயர் பதவிகளுக்கு செல்லக்கூடிய இந்த தேர்வுகளை ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்து இருந்தால் எழுதலாம். ஆனால் என்ஜினீயரிங் படித்தவர்கள் பெருமளவில் எழுதுவது அவர்கள் வேலையில்லாமலும், குறைந்த ஊதியத்தில் வேலை பார்பபதையும் தெளிவாக காட்டுகிறது.

இதனால் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரிடையாக கலை, அறிவியல் பாடத்தை தேர்வு செய்து படித்தால் போட்டித் தேர்வு மூலம் ஏதாவது ஒரு அரசு பணியில் சேரலாம். மேலும் அத்துடன் ஆசிரியர் பயிற்சி (பி.எட்) படித்து முடித்தால் போட்டித் தேர்வு எழுதி ஆசிரியர் பணிக்கு செல்லலாம். இது தவிர ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் பணிகளுக்கும் பட்டப் படிப்பு அவசியம் என்பதால் மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகள் பக்கம் அதிகளவில் விரும்புகிறார்கள்.