அமீரக காயிதே மில்லத் பேரவை - துபாய் தேரா கிளையின் சார்பில்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 66 - ஆவது நிறுவன நாள் , ஏப்ரல் - 02கோரிக்கை பேரணி விழிப்புணர்வு கருத்தங்கம் மற்றும் மறைந்த மாநிலசெயலாளர் கமுதி பஷீர் இரங்கல் பிரார்த்தனை கூட்டம் துபாய் - தேரா -அல் அயாத் ஹோட்டலில் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக்அறக்கட்டளை அறங்காவலர் அய்யம் பேட்டை வாலன்.ஜே .ஜெய்லானிபாட்சா அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத்தலைவர் களமருதூர்சம்சுத்தீன் ஹாஜியார் , தேரா பகுதி செயலாளர்கள் குண்டு காசிம் ராஜாஜி, நெல்லை ஷேக் சிந்தா ,துபாய் கிளை மக்கள் தொடர்பு செயலாளர்ஜெ.முஹைதீன் பாட்சா ,அபுதாபி மக்கள் தொடர்பு செயலாளர்ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மெளலவி கலீலுல்லாஹ் ஆலிம் அவர்கள் கிராத்துடன் நிகழ்ச்சிதுவங்கியது . விழாக்குழு செயலாளர் இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ.பரகத்அலி வரவேற்புரையாற்றினார் .நிகழ்ச்சிகளை ஷார்ஜா மண்டலசெயலாளர் தஞ்சை பாட்சா கனி தொகுத்து வழங்கினார் .
அமீரக காயிதே மில்லத் பேரவையின் துபாய் மண்டல செயலாளர்முதுவை ஹிதாயத்துல்லா துவக்க உரையாற்றிய பின்பு ,பன்னாட்டுஇஸ்லாமிய இலக்கிய கழகத்தலைவர் கிளியனூர் இஸ்மத் ,மதுக்கூர்முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் செயலாளர் சாகுல் ஹமீது ,பூதமங்கலம்ஜமாஅத் நிர்வாகி முஹைதீன் அப்துல்காதிர் ,அம்மாபட்டினம் ஜமாஅத்மௌலவி ஷேக் அப்துல்லா ,திட்டச்சேரி ஜமாஅத் சாதிக் ஃபைஜி,லால்பேட்டை ஜமாஅத் தலைவர் ஏ.எம்.ஜக்கரியா,கோட்டக்குப்பம்யஹ்யா மன்பஈ ஹஸ்ரத் ஆகியோர் கருத்துரை வழங்கினர் .
அமீரக காயிதே மில்லத் பேரவை அல்- கூஸ் பகுதி செயலாளர்திண்டுக்கல் ஜமால் மைதீன் இன்றைய காலகட்டத்தில் இந்திய யூனியன்முஸ்லிம் லீக்கின் அவசியம் குறித்து விளக்கமாக உரையாற்றினார்.கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா தனது உரையில்மறைந்த கமுதி பஷீர் அவர்களின் சமூக பணிகள் குறித்தும் ,சிறைசாலைகளில் நம் சமூதாய இளைஞர்களின் நிலை குறித்தும்,அவர்கள் விடுதலைக்காக இந்திய முஸ்லிம் லீக் மேற்கொள்ளும்சட்டப்பூர்வ போராட்டங்கள் குறித்தும், வி.களத்தூரில் சமீபத்தில் நடந்த கலவரங்களில் காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரஹ்மான் எம்.பி.எடுத்த சமாதான நடவடிக்க்கைகள் குறித்தும் மிக விரிவாக எடுத்துக் கூறினார் .
அமைப்புசெயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் முஸ்லிம் லீக் கண்டபோராட்ட களங்களையும்,அகில இந்திய அளவிலும், தமிழகத்திலும் முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு பெற தாய்ச்சபையே காரணம் என்றும் ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துக்கூறினார் .அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொருளாளர் கீழக்கரைஎஸ்.கே.எஸ்.ஹமீது ரஹ்மான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும்அதன் தலைவர்களும் சமுதாய பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பாங்குகுறித்தும் அதனால் ,சமுதாயத்திற்கு ஏற்பட்ட நன்மைகள் குறித்தும் ,இடஒதுக்கீடு ,மதுவிலக்கு ஆகிய விசயங்களில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மேற்கொண்ட பணிகள் குறித்தும் விளக்கினார் .
பொதுசெயலாளர் திருபனந்தாள் ஏ. முஹம்மது தாஹா அவர்கள் தனதுஉரையில் அமீரக காயிதே மில்லத் பேரவை அமீரகத்தில் செய்து வரும் சமுதாயப் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார் .
நிகழ்ச்சியின்இறுதியாக சிறப்புரையாற்றிய அமீரக காயிதே மில்லத் பேரவைதலைவர் 'சேவை செம்மல் ' குத்தாலம் ஏ.லியாகத் அலி அவர்கள் தனத ுஉரையில் மறைந்த முஸ்லிம் லீக்கின் மாநில செயலாளர் கமுதி பஷீர்அவர்களின் இயக்க பணிகள் குறித்து உணர்ச்சி ததும்ப நினைவுபடுத்தியதோடு ஏப்ரல் - 02 தமிழக மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறஇருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கைப் பேரணி வெற்றிபெற அமீரகத்தில் உள்ள தமிழக ஜமாஅத்தார்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து எடுத்து கூறியதோடு, தமிழகத்தில் உள்ள நம் சொந்தபந்தங்கள் உற்றார் உறவினர்கள் ,ஜமாத்தார்கள் அனைவரையும் ஒற்றுமையோடு பேரணியில் கலந்து கொள்ள செய்து பேரணியின்கோரிக்கை வெற்றியடைய செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த தஞ்சை பாட்ஷா கனி, அய்யம் பேட்டை குண்டு ராஜாஜி காசிம், ஆகியோருக்கும், துணை நின்ற இராமநாதபுரம் பரக்கத் அலி, ரஹ்மத்துல்லா, சஹாப்தீன், நெல்லை ஷேக் சிந்தா, வழுத்தூர் முஹைதீன் பாட்ஷா, திண்டுக்கல் ஜமால் முஹைதீன் ஆகியோருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1.தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் சார்பில் ஏப்ரல் - 02 அன்று நடைபெறும் முப்பெரும் கோரிக்கை பேரணி ,ஆர்பாட்டங்கள் சிறப்புற நடத்திட அரும்பாடுபட்டுவரும் மாநில மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் இந்தகருத்தரங்கம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது .
2.ஏப்ரல் - 02 பேரணியில் சமுதாய மக்களை அனைவரையும் பங்கேற்கசெய்ய தமிழகத்தில் உள்ள அனைத்து ஜமாஅத்தார்களும் தயாராகஇருப்பது கண்டு இக்கருத்தரங்கம் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறது.
3.தமிழகத்தில் முஸ்லிம் களுக்கான 3.5% இட ஒதுக்கீட்டை உயர்த்திவழங்க தமிழக அரசையும், அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இந்திய முழுவதும் பல்லாண்டுகள் சிறைசாலைகளில்விசாரணைகைதிகளாக உள்ள அப்பாவிகளை விடுதலை செய்யுமாறும்இந்திய அரசையும் , தமிழக அரசையும் இக்கருத்தரங்கம் வலியுறித்திகேட்டுக் கொள்கிறது.அனைத்து தீமைகளுக்கும் மூளையாக விளங்கும்மதுவை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும் என மத்திய மாநிலஅரசுகளை அமீரக காயிதெமில்லத் பேரவை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத்தலைவர் காயல் நூஹுஹாஜியார் நன்றி கூற , துஆ உடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது .மதுக்கூர் ஜமாஅத் தலைவர் ரஹ்மத்துல்லா, முத்துப் பேட்டை ஜமாஅத் தலைவர் ஃபசுல் ரஹ்மான், திருநெல்வேலி இஷாக், துபாய் சோனாப்பூர்கிளை செயலாளர் ரஹ்மத்துல்லா . சகாபுதீன் , தேரா பகுதி வி.களத்தூர்ஷாகுல் ஹமீது, அபுதாபி முஸஃபா பகுதி செயலாளர்தேவிப்பட்டிணம் நிஜாம் அக்பர்,அய்யம்பேட்டை ஜாபர் அலி, மெஞ்ஞான சபையினர் உளிட்ட அமீரகத்தில் உள்ள திருநெல்வேலி,ராமநாதபுரம்உள்ளிட்ட பல்வேறு ஜமாஅத் அங்கத்தினர்களும் திரளாககலந்துகொண்டனர் .