விழுப்புரம் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் சார்பில் நோன்புக்கஞ்சி குருனை அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் பேராசிரியர் .கே.எம்.காதிர் மொஹிதீன் அவர்கள் குருனை அரிசி வழங்கும் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார் .பின்பு செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது ,தமிழகத்தில் பள்ளிவாசல்களை மையமாகக்கொண்டு 11000 ஜமாஅத்துகள் உள்ளன .அதனைத்தான் மொஹல்லா ஜமாஅத் என்று கூறுவர்.
அவ்வாறு அமைந்த மொஹல்லா ஜமாத்தில் இயக்க கருத்துக்களுக்கு இடமில்லை . இயக்க கருத்துகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு ,மொஹல்லா ஜமாத்தில் அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமையாக செயலபடவேண்டும் என்று நாடெங்கிலும் வலியுறுத்தி வருகிறோம் . ஒவ்வொரு ஊரிலும் அமைந்துள்ள ஜமாத்துகள் ஒன்றிணைந்து மாவட்ட அளவில் ஐக்கிய ஜமாத்தாக செயல்படுகின்றன .அந்த அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் கீழ் 436 ஜமாத்துகள் உள்ளன ; வசதி இல்லாத நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிவாசல்களுக்கு நோன்புகஞ்சிக்காக குருனை அரிசி வழங்கும் விழா இங்கு நடைபெற்றது .
இந்த நாட்டில் வாழக்கூடிய அனைத்து மதத்தினருக்கும் இந்திய அரசியல் சாசனம் "தனியார் சட்டம்" என்று வழங்கியது 74 தனியார் சட்டம் உள்ளது .அவ்வாறு அனைத்து மதத்தினருக்கும் வழங்கப்பட்டது போல் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கும் "தனியார் சட்டம் " வழங்கப்பட்டுள்ளது .அதன் அடிப்படையில் முஸ்லிம்களின் திருமணம் ,பாகப்பிரிவினை ,பிறப்பு ,இறப்பு போன்ற பிரச்சினைகளில் இந்தியாவின் பொதுச்சட்டம் தலையிடமுடியாது . அது இஸ்லாமியர்களுக்கு இந்திய அரசியல் சாசனம் சட்டம் வழங்கிய உரிமை , சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு .எனவே ,இஸ்லாமியர்கள் திருமண வயதை அரசாங்கமோ ,அதிகாரிகளோ நிர்ணயம் செய்ய இயலாது .சமீபத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அஹ்மத் உத்தரவின் பேரில்,சில அதிகாரிகள் அரசியல் சட்டத்திற்கு முரணாக ,சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டு ,இஸ்லாமிய திருமணத்தை தடுத்து நிறுத்தி சில நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார்கள் .அதனை, தமிழ்நாடு ஜமாத்துல் உலமா தலைவர் மௌலவி AEM. அப்துர் ரஹ்மான் அவர்கள் கண்டித்து பேட்டி கொடுத்துள்ளார்கள் .அந்த அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதா ,அல்லது உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பதா ? என்று ஆலோசனை நடத்தி வருகின்றோம் .மிக விரைவில் வழக்கு தொடுக்கப்படும் .
நாங்கள் தொடர்ந்து வைத்து வரும் கோரிக்கையான ,ஹஜ் கோட்டாவை அதிகரிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளாராக ஹமீது அன்சாரி அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார் .சோனியா காந்தி முன்மொழிந்து ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அஹமது சாஹிப் ,திமுக சார்பில் டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள் வழி மொழிந்துள்ளனர் .ஹமீது அன்சாரி அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார் ,அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் .
வக்போர்டு சம்பந்தமாக வழக்கு தொடர்ந்தவர்கள் எங்களை அணுகவில்லை .முறையாக வக்போர்டுக்கு ஒரு IAS அதிகாரி ,2 இஸ்லாமிய குருமார்கள் ,முஸ்லிம் அமைப்புகள் மூலம் 2 எம்.பி.கள், 2 எம்.எல்.எ.கள், 2 பேர் பார்கவுன்சிலிருந்தும், 2 பேர் முத்தவல்லிகள் சார்பிலும் தேர்வு செய்யப்படவேண்டும் .எம்.எல்.எ கோட்டாவில் மந்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளார் ,அது விசயமாக கோர்டு தீர்ப்பு வந்தால்தான் முடிவு தெரியும் .
2010 ஆண்டு ஜூலை 13 ஆம்நாள் சுப்ரீம் கோர்டு ஒரு தீர்ப்பு வழங்கியது ,அதனில் ,சாதி வரி கணக்கீடு நடத்தி,பின்பு 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது .தற்போதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது .இந்த சூழ்நிலையில் தமிழக அரசுக்கு ' ஜாதிவாரி கணக்கெடுப்பை மிக விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் 'என்று கோரிக்கை வைக்கின்றோம் . இந்த சூழலில் தமிழக அரசு அனைத்துக்கட்சிகளையும் கூட்டி தமிழக மக்களின் ஒட்டுமொத்தக் கருத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் ,அதன் அடிப்படையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .எந்த நிலையிலும் ,அதனை மாற்ற தமிழக அரசு கட்டுப்படக்கூடாது .
இலங்கை பிரச்சினையை பொருத்தவரை ,அந்நிய நாட்டு பிரச்சினையில் நாம் அத்து மீறி தலையிட்டு நமது நாட்டு பிரச்சினையில் பிறர் தலையிட வழி வகுத்து விடக்கூடாது .அதற்காக ,அங்கே ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது .இலங்கையில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .இது தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கோரிக்கையும் ஆகும் . அதே நேரத்தில் சீனா இலங்கையில் அரவணைப்பை ஏற்படுத்த வழி ஏற்பட்டுவிடுமானால் ,அது நம் நாட்டுக்குத்தான் ஆபத்தாகும் .