Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 15 ஜூலை, 2012

யா அல்லா ! என்ன நடக்குது இந்த சமூகத்தில் ?

நக்கீரனில் வந்த செய்தி ...............


முஸ்லீம்களுக்குள் மோதல்- போலீஸ் தடியடி
அஹமதியா முஸ்லிம் ஜமாஅத் என்ற அமைப்பு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினர் நேற்று மாலை திருப்பூர் டவுன் ஹாலில் பொதுக்கூட்டம் நடத்தினர். இதற்காக அஹமத்தியா முஸ்லிம் அமைப்பினர் திரண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் திருப்பூர் மாநகர பல்வேறு முஸ்லிம் அமைப்பைச்சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு திரண்டு வந்தனர். ஆவேசமாக வந்த அவர்கள் அங்கு வைக்க ப்பட்டிருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர்.

மதத்துக்கு விரோதமாக எப்படி கூட்டம் நடத்தலாம் என்று கேட்டனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
 
திடீரென்று ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கத் தொடங்கினார்கள். இதில் அஹமத்தியா முஸ்லிம் ஜமா அத் அமைப்பைச் சேர்ந்த அன்சார் அலி அக்பர் (நெல்லை), கோவை கரும்புக்கடையை சேர்ந்த சஜிர் அகமது (31) ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் பெயர் விவரம் தெரியவில்லை. 
 
அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளும் கல்வீசி உடைக்கப்பட்டன. 

மோதல் பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகர்க் தலைமையில் அதிரடிப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் திருப்பூர் மாநகர முஸ்லிம் அமைப்பினரை அப்புறப்படுத்தினார்கள். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். 
 
அந்த நேரத்தில் சிலர் மேம்பாலத்தில் ஏறி நின்றபடி கல் வீசினார்கள். அவர்களையும் போலீசார் விரட்டியடித்தனர். போலீசார் கேட்டுக் கொண்டதையொட்டி பொதுக்கூட்டம் 5.30 மணிக்குள் முடிக்கப்பட்டது.
 
பின்னர் அஹமத்தியா முஸ்லிம் அமைப்பினர் அங்கிருந்து மினி பஸ்கள் மூலம் கோவைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். முஸ்லிம்கள் மோதிக் கொண்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக