தென்காசி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியையும் கடந்து வெயில் அடித்து வருகிறது. பகல் நேரங்களில் பொதுமக்கள் அத்யாவசிய பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் தென்காசியில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. மழை பெய்ததால் நீர்ப்பிடிப்புள்ள பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வரை மழை நீடித்ததால் இதமான சூழல் நிலவி வருகிறது.
Flash News
கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணிவியாழன், 11 ஏப்ரல், 2013
இருளில் மூழ்கியது சென்னை "சாட்டிலைட் சிட்டி"
முன்மாதிரி நகரான சி.எம்.டி.ஏ.,வின் மணலி புதுநகர் மனை பிரிவு குடியிருப்பு பகுதிகளில் மின்விளக்குகள் எரியாததால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதனால், இங்கு மாலை 6:00 மணிக்குமேல், பகுதிவாசிகள் வெளியே நடமாடவே தயங்குகின்றனர்
.மணலி புதுநகரில் "சாட்டிலைட் சிட்டி' என்ற மனை பிரிவை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.,) உருவாக்கியது. இங்கு 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.சி.எம்.டி.ஏ., கட்டுப்பாட்டிலிருந்த மணலி புதுநகர் "சாட்டிலைட் சிட்டி', சென்னை மாநகராட்சியின் 15வது வார்டாக சேர்க்கப்பட்டது. இதனால், அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படும் என, மணலி புதுநகர் மனை பிரிவு மக்கள் எதிர்பார்த்தனர்.
இதையடுத்து, "சாட்டிலைட் சிட்டியை' மாநகராட்சியிடம் ஒப்படைப்பது தொடர்பாக, சி.எம்.டி.ஏ.,வுக்கும், மாநகராட்சிக்கும் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.சமீபத்தில், "சாட்டிலைட் சிட்டி' மாநகராட்சியின் கீழ் வரும் என, மேயர் சைதை துரைசாமி அறிவித்தார். இந்த நிலையில், இனியாவது, "சாட்டிலைட் சிட்டி'யின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், நகர் உருவானபோது அமைக்கப்பட்ட, தார் சாலைகளுக்கு பின் மீண்டும் சாலைகள் அமைக்கப்படவில்லை. தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால், அனைத்தும் பழுதாகி, ஒரு மின்விளக்கு கூட எரியவில்லை.இதனால் மாலை 6:00 மணிக்கு கூட, வெளியில் வருவதற்கு பகுதிவாசிகள் அஞ்சுகின்றனர். விரைவில், மின் விளக்குகளையாவது சரி செய்து கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

ஜிண்டால் அறக்கட்டளை கல்வி உதவித்தொகை
தகுதி
(i) இளநிலை படிப்பில் 60 சதவீதம் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(ii) ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவராக இருக்க வேண்டும்.
உதவி தொகை விபரம்
உதவி தொகை எண்ணிக்கை: மாறுபடும்
கால அளவு: 1 வருடம்
வழங்கப்படும் தொகை: கல்வி கட்டணம் முழுதும் வழங்கப்படும்.
தேர்வு முறை: அறக்கட்டளையின் விதிமுறைப்படி தேர்ந்தெடுக்கபடுவர்
Scholarship : ஜிண்டால் அறக்கட்டளை உதவித்தொகை
Course : அறிவியல் (பி.எஸ்சி.,)
Provider Address :The Trustee Sitaram Jindal Foundation Jindal Nagar, Tumkur Road,
Bangalore – 560 073. www.sitaramjindalfoundation.org
ஊடகத்துறையில் முதுகலை பட்டயப் படிப்பு
முதுகலை பட்டயப் படிப்பில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி படிப்பு வழங்கப்படுகின்றன.
இப்படிப்பு அச்சு, ஒளிப்பரப்பு மற்றும் ஆன்லைன் ஆகிய ஊடகத் துறையில் செயல்படுத்தும் விதம் பற்றி விரிவாக கற்றுத்தரப்படுகின்றது. இந்நிறுவனத்தில் அனுபம் பெற்ற மூத்த நிருபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இளநிலை பட்டப் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு டைம்ஸ் குழுவான டைம்ஸ் ஆப் இந்தியா, எகனாமிக் டைம்ஸ், இந்தியா டைம்ஸ் ஆகியவற்றில் பணியமர்த்தப் படுகின்றனர்.
விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.tcms.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
ஐஐஐடிஎம்(IIITM).,யில் முதுகலை படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி அன்ட் மெனஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில், முதுகலை பட்டப் படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வழங்கப்படும் படிப்புகள்: எம்.எஸ்சி., (ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி, ஜியோ-இன்பர்மேடிக்ஸ்,) ஆகிய படிப்புகளும்,
எம்.பில்.,(ஈக்காலஜிக்கல் இன்பர்மேடிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்)ஆகிய படிப்புகளும் வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி: எம்.எஸ்சி., படிப்பிற்கு, பி.இ, பி.டெக்., படிப்பில் தகுந்த துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எம்.பில்., படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.டெக்., படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை அறிய கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.
மே 22ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மே 31 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். நுழைவுத்தேர்வு ஜூன் 2ம் தேதி நடைபெறுகிறது.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.iiitmk.ac.in என்றஇணையதளத்தை அணுகலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)