முதுகலை பட்டயப் படிப்பில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி படிப்பு வழங்கப்படுகின்றன.
இப்படிப்பு அச்சு, ஒளிப்பரப்பு மற்றும் ஆன்லைன் ஆகிய ஊடகத் துறையில் செயல்படுத்தும் விதம் பற்றி விரிவாக கற்றுத்தரப்படுகின்றது. இந்நிறுவனத்தில் அனுபம் பெற்ற மூத்த நிருபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இளநிலை பட்டப் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு டைம்ஸ் குழுவான டைம்ஸ் ஆப் இந்தியா, எகனாமிக் டைம்ஸ், இந்தியா டைம்ஸ் ஆகியவற்றில் பணியமர்த்தப் படுகின்றனர்.
விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.tcms.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக