இந்திய யூனியன்முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்ட தீர்மான விளக்க பொதுக் கூட் டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற் றது.
இக் கூட்டத்தில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., பேசியதாவது-
இந் நகரில் அவ்வப்போது ஏற்படுகிற சிறுசிறு சிராய்ப்புக் களை சமாளித்து ஒற்றுமைப் படுத்தி முன்மாதிரியான ஊர் காயல்பட்டினம் என்பதை பறைசாற்ற வேண்டும். இந் நகரில் பிளவையும், பிரச்சினை களையும் ஏற்படுத்த எந்த சக்திக்கும் இடமளிக்கக் கூடாது. இந் நகரின் ஐக்கி யத்தை சமுதாய ஒற்றுமையை பலப்படுத்த தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற் கொள்ளும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒருமுகமாக ஆதரவு தர வேண்டும்.
DCW இரசாயன ஆலையால் காயல்பட்டினத்தின் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டுள்ளதும் இங்கு ஏராளமானோர் புற்று நோய் உள்ளிட்ட பாதிப்புகளில் அவதிப் படுவதும் அனைத்து தரப்பி னரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டு இந் நகரின் இளைஞர்கள் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள் ளனர். மத்திய அரசின் நேரடி கவனத்திற்கு இப் பிரச்சி னையை கொண்டு சென்று உரிய நடவடிக்கைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளோம். அந்தப் பணி வெற்றி பெறும் வரை முஸ்லிம் லீகின் இந்த நாடாளு மன்ற உறுப்பினர் ஓய மாட்டான் என்பதை இங்கே உறுதியுடன் அறியத் தருகிறேன்.
இந்த மேடையில் இருக்கும் என்னிடம் பார்வையாளர் பகுதியில் இருந்து துண்டுச் சீட்டுகள் எழுதி தரப்பட்டன. அதிலேகூட பாஸ்போர்ட் விண்ணப்பித்தால் காவல் துறையினர் விசாரணை என்ற பெயரால் அலைக் கழிக்கி றார்கள். அதிகம் பணம் கேட்கி றார்கள், பெண்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அதிக நேரம் இருக்கச் செய்கி றார்கள் என குறிப்பிட்டிருந் தனர். காவல் துறையினரின் இந்த செயல் ஏற்கத்தக்கதல்ல. இது நிறுத்தப்பட வில்லை எனில் உரிய இடத்தில் உரிய நடவடிக்கைக்கு முயற்சிப் பேன் என எச்சரிக்க கடமைப் பட்டுள்ளேன் .
செந்தூர் விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும் என்றீர்கள். அதற்காக பலமுறை முயற்சி மேற்கொண்டு செய்து கொடுத்ததும், அதன் நேரத்தை மாற்ற வேண்டும் என்பதை மாற்றித் தந்ததும் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் பேரியக் கம். திருச்செந்தூரிலிருந்து சென்னை வந்து செல்லும் நேரத்தை குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுப்போம்.
எந்தப் பிரச்சினை என்றாலும் எந்த இடத்தில் எப்போது எப்படி தட்ட வேண்டுமோ அந்த வகையில் முயற்சித்து காரிய மாற்றுபவர்கள் முஸ்லிம் லீகர்கள். சிலரை நடுரோட்டிற்கு அழைத்து வந்து கோஷம் போட வைத்து காலையில் கைதாகி மாலையில் விடுவிக்கப்படும் நாடகங்களை முஸ்லிம் லீக் ஒருபோதும் அரங்கேற்றுவ தில்லை. உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அதில் குளிர் காய வைக்கும் கலையை முஸ்லிம் லீக் தலைவர்கள் எங்களுக்கு கற்றுத் தரவில்லை.
இந்திய யூனியன்முஸ்லிம் லீக் வலிமை எங்கேயிருக் கிறதோ அங்கே சமுதாய ஒற்றுமை - மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும். முஸ்லிம் லீக் வலிமை எங்கேயிருக்கிறதோ அங்கே மதநல்லிணக்கம் தடைபடாமல் இருக்கும். முஸ்லிம் லீக் எங்கே வலிமையுடன் இருக்கிறதோ அங்கே நமது உரிமைகள் நிலை நாட்டப்படும்.
இந்திய யூனியன்முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சில் கோழிக்கோட்டில் கூடியபோது சிறப்பு வாய்ந்த பல முடிவுகளை அறிவித்தோம். இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள `ஏணி’ சின்னமே இனி முஸ்லிம் லீக் சின்னமாக இருக்கும்.
தேசிய கவுன்சில் தீர்மானம்
தேசிய கவுன்சில் கூட்டம் நிறைவேற்றிய தீர்மானங்களில் ஒன்று பல்லாண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் களைப் பற்றியது. தமிழ்நாட்டில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விஷயங்களை அரசின் கவனத் திற்கு உரிய முறையில் முஸ்லிம் லீக் கொண்டு செல்கிறது. யாருடைய தூண்டுதல்களால் தாங்கள் இளமை வாழ்வை இழந்தார்களோ அவர்கள் எல்லாம் கைவிட்டு விட்ட நிலையில் அந்த இளைஞர் களின் விடுதலைக்காக பணிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செய்து வருகிறது.
சிறுவனாக சிறைக்கு சென்று இளமையையே தொலைத்து விட்ட அபுதாகிர் கொடி நோயால் தாக்கப்பட்டு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் என ஒவ்வொன்றாக பாதிக் கப்பட்டு இப்போது கண்களும் பார்வையிழந்து விட்டன. நடை பிணமாகி விட்ட அந்த சகோ தரன் சிகிச்சை பெறுவதற்காக 9 முறை பரோல் விடுப்பு பெற்றுக் கொடுத்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். நம் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்கள் ஏற்பாட்டில் இது நடைபெற்றது.
இப்போது நடை பிணமாகி விட்ட அந்த சகோதரரை மீண்டும் பரோலில் விடு முறைக்கு விண்ணப்பித்தால் அரசு அதை தர மறுக்கிறது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலேயே விண் ணப்பித்து நீதிமன்றமும் ஒரு முறையல்ல, இரண்டு முறை உத்தரவிட்டும் அதை செயல்படுத்த அரசு மறுக்கிறது.
மனரீதியாக பாதிக்கப்பட்ட சமுதாயம்
கோவை மருத்துவமனை யில் உயிருக்குப் போராடும் அபுதாகிரை பார்க்கச் சென்றி ருந்தேன். எலும்புக்கூட்டில் துணியை போட்டு போர்த்தியது போன்று படுக்கையில் கிடத்தப் பட்டிருந்தார். நாங்கள் சென்ற போது வெளியில் இருந்த அவரது உறவினர்கள் மண்ணை தூக்கி வாரி இறைத்து யார் யார் பேச்சையோ நம்பி தன் வாழ் வையே தொலைத்து விட்டானே என பதுவா செய்தனர். பின்னர் அபூதாகிர் விடுதலைக் காக பாடுபடும் எங்களுக்காக மடியேந்தி துஆ கேட்டனர். அந்த அளவிற்கு மனரீதியாக கோவை சிறைவாசிகளின் குடும்பத்தார் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று தமிழகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவிற்கு முதல்வர் ஜெய லலிதா செல்கிறார். அமெரிக்கா போன்ற நாடுகளால் விசா மறுக்கப்படும் அளவிற்கு சர்வதேச சமூகத்தால் வெறுக் கப்படும் வகையில் அவமான கரமான கலவரத்துக்கு காரண மாக இருந்தவர் நரேந்திரமோடி. அப்படிப்பட்ட மோடியிடம் நட்பு பாராட்டுகிறார்.
குஜராத்தில் முஸ்லிம்களை அழிக்க மோடி துணை போனார் என்றால் ஆந்திராவில் இஸ்லா மிய கலாச்சார சின்னத்தை அழிக்க அம் மாநில அரசு துணை போகிறது. 420 ஆண்டு பாரம்பரியமிக்க ஹைதராபாத் சார்மினாரில் 1642 முதல் 1960 வரை எந்த சிலையுமில்லை. 1960-ல் சிலை வைக்கப்பட்டு அதை காரணம் காட்டி இன்று பெரிய கோவிலாக எழுப்புகி றார்கள். இதை `தி ஹிந்து’ நாளிதழ் படம் பிடித்துக் காட்டி அம்பலப்படுத்தியுள்ளது. அப்படியானால் 1951-ல் உருவாக்கப்பட்ட சட்டம் என்னா யிற்று? இதை நாடாளுமன் றத்தில் கேட்டு முழங்கினோம்.
ஆகவே, இன்று நம் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்துக்களை உணர்ந்து சமுதாயம் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. பேசினார்.