Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 16 மார்ச், 2013

செல்போனில் வளர்ந்த காதல் பலாத்காரத்தில் முடிந்தது


திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பொன்னாத்தி நடுத் தெருவை சேர்ந்த இளம் பெண்ணிடம்ராதாபுரத்தை சேர்ந்த ஒருவர் தன்பெயர் மணிகண்டன் (எ) பாலகுரு என்று கூறி அடிக்கடி செல்போனில் பேசிவந்தார்.

இருவரும் செல்போனிலேயே பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் மணிகண்டன் கடந்த 13ம் தேதி இளம் பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி முடவன்குளம் குளம் அருகில் பலாத்காரம் செய்துள்ளார்.

சில நாட்கள் கழித்து அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு சகோதரியின் திருமணம் முடிந்ததும் நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று மணிகண்டன் கூறியுள்ளார்.
இதன் பிறகு மணிகண்டன் அந்த பெண்ணிடம் செல்போனிலும் தொடர்பு கொள்ளவில்லை. அவரை வந்து பார்க்கவுமில்லை. இதனால் சந்தேகமடைந்த இளம்பெண் திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் சிவராஜ்பிள்ளை, எஸ்.ஐ. வின்சென்ட் அன்பரசி வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த மர்ம நபர் மணிகண்டனை தேடி வருகின்றன

டைமண்ட் சம்பந்தமான படிப்புகள்


கடந்த 1978ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய வைரங்கள் கல்வி நிறுவனம், வைரங்கள், ரத்தினங்கள் மற்றும் தங்க நகைத் துறையில் ஆராய்ச்சி மற்றும் படிப்பகளை வழங்கும் ஒரு பிரதான நிறுவனம்.

இந்திய வைரங்கள் தொழில்துறையில் இருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் உயர்தர ஏற்றுமதி மதிப்பீடுகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இக்கல்வி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

இக்கல்வி நிறுவனம், குஜராத் மாநிலத்தில், சூரத் நகரில் அமைந்துள்ளது.

இக்கல்வி நிறுவனத்தின் படிப்புகள்

வைரங்கள் துறை

இப்பிரிவில் 2 டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன.

டைமண்ட் மேனுபேக்சரிங் புரபஷனல்(Diamond Manufacturing Professional)
வைரங்கள் தொடர்பான மதிப்பிடல் மற்றும் திட்டமிடல் துறைகளில் நிலவும் ஆள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் இப்படிப்பு கொண்டுவரப்பட்டது.

இப்படிப்பு 24 வாரங்கள் நடத்தப்படுகிறது. இதற்கான கல்விக்கட்டணம் மட்டும் ரூ.40,800. 10 மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்கள், இதில் சேரலாம்.

டைமண்ட் கிரேடிங் புரபஷனல் படிப்பு
வைர வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் நிலவும் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில், டைமண்ட் கிரேடர்களை உருவாக்க, இப்படிப்பு வழங்கப்படுகிறது.

இப்படிப்பின் காலகட்டம் 20 வாரங்கள். கல்விக் கட்டணமாக மட்டும் ரூ.40,800 வசூலிக்கப்படுகிறது. 10 அல்லது 12ம் வகுப்பை முடித்தவர்கள் இதில் சேரலாம்.

விரிவான விபரங்களுக்கு: www.diamondinstitute.net/diamond-diploma.html#ddsorting

சான்றிதழ் படிப்புகள்
வைரங்கள் துறையில், பவுண்டேஷன் கோர்ஸ் மற்றும் புரபஷனல் கோர்ஸ் என வகைப்பிரித்து, பலவிதமான சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

பவுண்டேஷன் சான்றிதழ் படிப்பு

டைமண்ட் சார்டிங்(Diamond sorting)
8 வாரங்கள் நடத்தப்படும் இந்தப் படிப்பில், கல்விக் கட்டணமாக மட்டும் ரூ.17,400 வசூலிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் இதில் சேரலாம்.

டைமண்ட் கிரேடிங்(Diamond Grading)
8 வாரங்கள் நடத்தப்படும் இந்தப் படிப்பில், கல்விக் கட்டணமாக மட்டும் ரூ. 20,000 வசூலிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் இதில் சேரலாம்.

டைமண்ட் பிளானிங்(Diamond Planning)
8 வாரங்கள் நடத்தப்படும் இந்தப் படிப்பில், கல்விக் கட்டணமாக மட்டும் ரூ.10,200 வசூலிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் இதில் சேரலாம்.

டைமண்ட் பாலிஷிங்(Diamond polishing)
4 வாரங்கள் நடத்தப்படும் இந்தப் படிப்பில், கல்விக் கட்டணமாக மட்டும் ரூ.2,000 வசூலிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் இதில் சேரலாம்.

டைமண்ட் ப்ரூட்டிங்(Diamond Bruting)
4 வாரங்கள் நடத்தப்படும் இந்தப் படிப்பில், கல்விக் கட்டணமாக மட்டும் ரூ.2,000 வசூலிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் இதில் சேரலாம்.

புரபஷனல் சான்றிதழ் படிப்புகள்

டைமண்ட் கிரேடிங்(Diamond Grading)

6 வாரங்கள் நடத்தப்படும் இந்தப் படிப்பில், கல்விக் கட்டணமாக மட்டும் ரூ.16,300 வசூலிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் இதில் சேரலாம்.

டைமண்ட் பிளானிங்(Diamond Planning)

6 வாரங்கள் நடத்தப்படும் இந்தப் படிப்பில், கல்விக் கட்டணமாக மட்டும் ரூ.12,300 வசூலிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் இதில் சேரலாம்.

டைமண்ட் பாலிஷிங்(Diamond Polishing)

16 வாரங்கள் நடத்தப்படும் இந்தப் படிப்பில், கல்விக் கட்டணமாக மட்டும் ரூ.6,100 வசூலிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் இதில் சேரலாம்.

டைமண்ட் ப்ரூட்டிங்(Diamond Bruting)

16 வாரங்கள் நடத்தப்படும் இந்தப் படிப்பில், கல்விக் கட்டணமாக மட்டும் ரூ.6,100 வசூலிக்கப்படுகிறது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் இதில் சேரலாம்.

விரிவான விபரங்களுக்கு: http://www.diamondinstitute.net/diamond-certificate.html

வைரங்கள் துறையில் வழங்கப்படும் தரநிலையற்ற(Non-Standard) சான்றிதழ் படிப்புகள்

தோராய வைர வகைப்படுத்தல் - 12 வாரங்கள் படிப்பு - ரூ.17,000 கட்டணம்

பாலிஷ்டு டைமண்ட் கிரேடிங்(பாலிஷிங் உள்பட) - 12 வாரங்கள் படிப்பு - ரூ.20,000 கட்டணம்

பாலிஷ்டு டைமண்ட் கிரேடிங்(பாலிஷிங் அல்லாத) - 8 வாரங்கள் படிப்பு - ரூ.17,000 கட்டணம்

இண்டர்நேஷனல் சிஸ்டம் ஆப் டைமண்ட் கிரேடிங் - 4 வாரங்கள் படிப்பு - ரூ.16,000 கட்டணம்

மேற்கூறிய படிப்புகளில் சேர 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

பிளானிங் மற்றும் மார்க்கிங் - 6 வாரங்கள் படிப்பு - ரூ.10,000 கட்டணம்

பிளானிங் மற்றும் மார்க்கிங் கணினி மயமாக்கப்பட்டது() - 4 வாரங்கள் படிப்பு - ரூ.13,500 கட்டணம்

இப்படிப்புகளில் சேர, அடிப்படைக் கல்வியை முடித்திருந்தால் போதுமானது.

விரிவான விபரங்களுக்கு: http://www.diamondinstitute.net/diamond-non-standard.html

தொலைநிலைக் கல்விமுறையிலான முதுநிலை டிப்ளமோ

ரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரண மதிப்பீட்டுத் துறையில் முதுநிலை டிப்ளமோ படிப்பு

இப்படிப்பில் சேர, குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இப்படிப்பின் காலம் 52 வாரங்கள். மொத்தக் கட்டணம் ரூ.30,000.

விரிவான விபரங்களுக்கு: http://www.diamondinstitute.net/diamond-correspondence.html

தங்கநகை ஆபரணத்துறை படிப்புகள்

முதுநிலை டிப்ளமோ படிப்பு(கிராஜுவேட் ஜுவல்லரி புரபஷனல்)

இப்படிப்பில் சேர குறைந்தபட்சம் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். படிப்பின் காலம் 36 வாரங்கள். படிப்புக் கட்டணம் ரூ.66,200.

விரிவான விபரங்களுக்கு http://www.diamondinstitute.net/jewellery-graduate-diploma.html

ஜுவல்லரி டிசைன் மற்றும் மேனுபேக்சரிங் டிப்ளமோ படிப்பு

இப்படிப்பின் காலம் 3 ஆண்டுகள். இப்படிப்பில் சேர குறைந்தபட்சம் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். படிப்புக் கட்டணம் மட்டும் ரூ.84,600.

விரிவான விபரங்களுக்கு http://www.diamondinstitute.net/jewellery-higher-diploma.html

டிப்ளமோ படிப்புகள்

ஜுவல்லரி டிசைன் புரபஷனல்:
இப்படிப்பில் சேர 10 அல்லது 12ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். படிப்பின் காலஅளவு 20 வாரங்கள். கல்விக் கட்டணம் ரூ.35,700.

ஜுவல்லரி மேனுபேக்சரிங் புரபஷனல்:
இப்படிப்பில் சேர 10 அல்லது 12ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும். படிப்பின் காலஅளவு 20 வாரங்கள். கல்விக் கட்டணம் ரூ.40,800.

இந்த டிப்ளமோ படிப்புகளைப் பற்றிய விபரங்களுக்கு http://www.diamondinstitute.net/jewellery-diploma.html

சான்றிதழ் படிப்புகள்
தங்க ஆபரணத்துறையில் பவுண்டேஷன் கோர்ஸ் மற்றும் புரபஷனல் கோர்ஸ் என தரம்பிரித்து, மொத்தம் 9 வகையான சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

அவைப்பற்றிய விபரங்களுக்கு http://www.diamondinstitute.net/jewellery-certificate.html.

தங்க ஆபரணத்துறையில் வழங்கப்படும் தரநிலையற்ற(Non-standard) படிப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள http://www.diamondinstitute.net/jewellery-non-standard.html என்ற வலைத்தளம் செல்க.

மேலும், தங்க ஆபரணத்துறையில், தொலைநிலைக் கல்வி மூலம் பலவிதமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

விரிவான விபரங்களுக்கு http://www.diamondinstitute.net/jewellery-correspondence.html.

ஜெம்மாலஜி துறை சார்ந்த படிப்புகள்

டிப்ளமோ படிப்பு

ஜெம்மாலஜி புரபஷனல் எனும் பெயரில் டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது.

விரிவான விபரங்களுக்கு http://www.diamondinstitute.net/gemology-diploma.html

ஜெம்மாலஜியில் பவுண்டேஷன் படிப்பு என்ற பெயரில் ஒரு சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது.

அதைப் பற்றிய விபரங்களுக்கு http://www.diamondinstitute.net/gemology-certificate.html

இத்துறையில் வழங்கப்படும் தரநிலையற்ற(Non-standard) சான்றிதழ் படிப்பைப் பற்றிய விபரங்களுக்கு http://www.diamondinstitute.net/gemology-non-standard.html

ஜெம்மாலஜி துறையில், தொலைநிலைக் கல்வி முறையில், பலவிதமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

விரிவான விபரங்களுக்கு http://www.diamondinstitute.net/gemology-correspondence.html

சர்வதேச படிப்புகள்
மேற்கூறிய படிப்புகள் தவிர, இந்திய வைரங்கள் கல்வி நிறுவனத்தில், சில சர்வதேச படிப்புகளும் வழங்கப்படுகின்றன. அவைப் பற்றிய விபரங்களுக்கு, http://www.diamondinstitute.net/f-a-foundation.html என்ற வலைத்தளம் செல்க.

ஒட்டுமொத்தமாக, இக்கல்வி நிறுவனம் பற்றி அறிய http://www.diamondinstitute.net/ என்ற இணையதளம் செல்க.

அமீர காயிதே மில்லத் பேரவை முஸ்லிம் லீக் நிறுவன நாள் மற்றும் ஏப்ரல் - 2 பேரணி விளக்கம் கருத்தரங்கம்


அமீரக காயிதே மில்லத் பேரவை ,துபாய் - சோனாபூர் கிளை சார்பில் முஸ்லிம் லீக் நிறுவன நாள் மற்றும் ஏப்ரல் - 2 பேரணி விளக்கம் கருத்தரங்கம் சோனாபூர் கிளை தலைவர் ராமநாதபுரம் ரஹ்மதுல்லா தலைமையில்
பவர் குரூப் கம்பனி கேம்ப் மஸ்ஜிதில் நடைபெற்றது .துணைத் தலைவர் காயல் நூஹு சாஹிப்,அபுதாபி மண்டலம் செயலாளர் அதிரை ஷாஹுல் ஹமீது,ஷார்ஜா மண்டலம் செயலாளர் தஞ்சை பாட்சா கனி,ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் கீழை ஏ.ஹமீது யாஸின் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

மஸ்ஜித் இமாம் இம்ரான் கான் கிராத் ஓதினார் , கூட்டத்தின் நோக்கம் குறித்தும் ,இடஒதுக்கீடு மற்றும் சிறைவாசிகள் விடுதலை விசயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்ட சட்டரீதியிலான போராட்டக் களங்கள்  குறித்தும் கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.கே.எம்.ஹபிபுல்லா தனது அறிமுக உரையில் மிக தெளிவாக விவரித்தார் .

துபாய் மண்டல செயலாளர் முதுவை ஹிதாயத் அமீரகத்தில் இயக்க பணிகள் குறித்தும்  , பேரவையின் அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால்  வளர்கின்ற தலைமுறையினருக்கு முஸ்லிம் லீக்கினை எடுத்துச் செல்லும்  பணியின் அவசியம் குறித்து விவரித்தார் . அமைப்புச்செயலாளர் லால்பேட்டை அப்துல் ரகுமான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1948 - மார்ச் 10 ஆம்நாள் தொடரப்பட்ட வரலாற்றினையும் ,இயக்க தலைவர்களின் சீரிய சேவைகள் பற்றியும் தனது உரையில் எடுத்துக்கூறினார் .

பேரவையின் பொருளாளர் கீழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீது ரகுமான் முஸ்லிம் சமுதாயம் இன்றைய கால கட்டத்தில் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் ,அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் விலாவாரியாக பட்டியலிட்டு தனதுரையில் விளக்கினார் .பேரவையின் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ.முஹம்மது தாஹா அவர்கள் அமீரகத்தில் வேலைசெய்துவரும்  இந்திய மக்களுக்காக ,குறிப்பாக தமிழக மக்களுக்காக அமீரக அரசு மற்றும் இந்திய அரசு ஆகியவற்றின் மூலமாக  காயிதே மில்லத் பேரவை செய்துவரும் பணிகள் குறித்து மிக அற்புதமாக விளக்கினார் . இறுதியாக உரையாற்றிய பேரவையின் அமீரகத் தலைவர் "சேவை செம்மல் " குத்தாலம் A .லியாகத் அலி அவர்கள் அகில இந்திய அளவில் மற்றும் தமிழகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவரித்ததொடு , ஏப்ரல் - 2 பேரணிக்கு அமீரகத்தில் உள்ளவர்களின் பங்கு பற்றியும் எடுத்துக் கூறினார் .

இந்த நிகழ்வில் திருநெல்வேலி டவுன் M ,சிந்தா தன்னை காயிதே மில்லத் பேரவையில் இணைத்துக் கொண்டதோடு ,காயிதே மில்லத் பேரவையின் வளர்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் என்று உறுதியளித்தார் .

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ,

1. ஏப்ரல் - 2 ,2013 அன்று தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடக்க இருக்கும் கோரிக்கை பேரணியில் சமுதாய மக்களை கலந்து கொள்ளச் செய்யும் வகையில் , தொலைபேசி , அலைபேசி ,மெயில் , முகநூல் , ட்விட்டர் ஆகியவற்றின் மூலம் பிரச்சார பணிகளை காயிதே மில்லத் பேரவை அங்கத்தினர்கள் தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் .

2.தமிழக அரசு 10- ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ,வரலாற்றுப் பகுதியில் இந்தியாவில் "முஸ்லிம் லீக் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக செயல்பட துவக்கப்பட்டது" என்று குறிப்பட்டுள்ள வாசகத்தை ,உடனடியாக நீக்குமாறு தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம் .

நிகழ்ச்சிகளை பேரவை விழாக்குழு செயலாளர் ராமநாதபுரம் எம்.எஸ்.ஏ.பரகத் அலி தொகுத்து வழங்கினார் .ராமநாதபுரம் ஜவ்வாது  நன்றி கூற துஆ உடன் கூட்டம் நிறைவுற்றது .நிகழ்ச்சியில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் ஊடகத் துறைச் செயலாளர் கும்பகோணம் சாதிக்,தேரா பகுதி செயலாளர் வி.களத்தூர் ஷாஹுல் ஹமீத்,சஹாபுத்தீன் உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் மற்றும் சோனாப்பூர் பகுதி சமுதாய இளைஞர்கள்  உள்ளிட்ட ஏராளமானோர்  கொண்டனர்.