Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 22 ஏப்ரல், 2013

பால்வள தொழில்நுட்ப படிப்பு (food and dairy technology)


இந்தியாவின் முக்கிய தொழிலாக பால்வளதுறை விளங்குகிறது. பால் தொடர்புடைய பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு உள் மற்றும் வெளி நாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. பால் பொருட்கள் தயாரிப்பில் இந்தியா சிறந்த இடத்தை வகுக்கின்றது.

பாலின் மூலம் பல்வேறு உணவு பொருட்கள் தயாரிக்கப்படுவதால், அதற்கு அடிப்படையாக விளங்கும் பசுக்களை நல்ல முறையில் பராமரித்து அதற்கு தேவைபடும் சத்தான ஆகாரங்களை சரியான முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. பதப்படுத்தும் பணியில் பாலை நுகர்வோர் பயன்படுத்தும் விதத்தில் அதை மாற்றுவது, தயிர், வெண்ணெய் போன்ற பொருட்களாக மாற்றும் பணிகளும் உள்ளன. பல்வேறு இடங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பாலானது தொழிற்சாலையை அடைந்தபின் பால் மற்றும் பால் பொருட்களாக பதப்படுத்தப் படுகிறது. இதற்கு டெய்ரி டெக்னாலஜிஸ்டுகள் எனப்படும் தொழில் நுட்ப வல்லுனர்கள் பணியில் நியமிக்கப்படுகிறார்கள். தொழில்நுட்பம் மற்றும் தரக்கட்டுப்பாடு போன்ற பணிகளை இவர்கள் செய்கிறார்கள். பதப்படுத்தும் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்குதல், கொள்முதல் செய்யப்பட்ட பாலை முழுவதுமாக பதப்படுத்துவது போன்ற கூடுதல் பணிகளை இவர்களே செய்கிறார்கள்.

பால்வளத்துறையை முறையாக நடத்த இதற்கென படிப்புகள் வழங்கப்படுகிறது. இது துவக்கத்தில் பால்வளத் தொழில்நுட்பம் என்பது வெடினரி சயின்சின் ஒரு பகுதியாக மட்டுமே இருந்து வந்தது. இத்துறையின் முக்கியத்துவம் அறிந்து பல கல்வி நிறுவனங்களில் இது தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகிறது. இப்படிப்புகளில் முறைப்படுத்தல், உறையிடுதல், சேமித்தல், பரவல், சந்தைப்படுத்தல், வெண்ணெய், நெய், கோவா, பாலாடைக்கட்டி போன்றவற்றை தயாரித்தல் போன்றவற்றை செய்யும் விதத்தை முறையாக கற்று கொடுக்கப் படுகின்றது. இத்துறையில் டிப்ளமோ, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு படிக்க விரும்புபவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவிலோ அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது விவசாயப் பாடப்பிரிவில் பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துறையில் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் பால்வளத் துறை படிப்புகள் வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

* College of Veterinary Science, Andra Pradesh

* Sanjay Gandhi Institute of Dairy Technology

* Indira Gandhi Krishi Vishwavidyalaya, Chattisgarh

* Seth MC College of Dairy Science. Gujrat

* National Dairy Research Institute, Haryana

* University of Agricultural Sciences, Karnataka

* College of Dairy Technology, Madhya Pradesh

* Maharana Pratap University of Agriculture & Technology, Rajasthan

* College of Dairy Science, Rajasthan

* Faculty of Veterinary Science and Animal Science, West Bengal

* Institute of Food and Dairy Technology, Chennai

மின்சாரவியலில் முதுநிலை மற்றும் டிப்ளமோ


சட்டீஸ்கரில் இயங்கி வரும் ஜிந்தால் மின் தொழில்நுட்ப கல்வி நிலையம் முதுநிலை மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முதுநிலை - தெர்மல் பவர் பிளான்ட் டெக்னாலஜி

தகுதி: முழு நேர பி.இ. படிப்பில் மெக்கானிக்கல்/ எலக்ட்ரிகல்/ எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் / கன்ட்ரோல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

முதுநிலை பட்டயம் - தெர்மல் பவர் பிளான்ட் டெக்னாலஜி

தகுதி: மூன்று வருட டிப்ளமோ படிப்பில் மெக்கானிக்கல்/ எலக்ட்ரிகல்/ எலக்ட்ரிகல் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ் / கன்ட்ரோல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து படித்திருக்க வேண்டும்.

வயது: 2013 ஜூலை 01 அன்று 26 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் நடைபெறும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15 மே 2013.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.jipt.org என்ற இணையதளத்தை காணவும்.

கணிதம் படிப்பவர்களுக்கு உதவித்தொகை


சென்னை கணிதவியல் நிறுவனத்தில், கணித துறையில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப் படிப்புகள் வழங்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் வழங்கப்படும் படிப்புகள், இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகளாலும் அங்கீகரிக்கப்படுகிறது. இந்நிறுவனம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.

இங்கு வழங்கப்படும் படிப்புகள் அனைத்தும் முழுவதும் கணிதம் தொடர்பான பாடங்களை உள்ளடக்கியதாகும். மற்ற பாடங்கள் எதுவும் இந்த படிப்பில் இடம்பெறுவதில்லை. மேற்படிப்புகளை தொடர்பவர்களுக்கும், முழவதும் கணிதப் படிப்புகளை படிக்க விரும்புபவர்களுக்கும் இப்படிப்பு ஏற்றதாகும்.

இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் கூட இப்படிப்புகளை முடித்தவர்கள் மேற்படிப்புகளைத் தொடர வாய்ப்பு உள்ளது. பொருளாதாரம், மேலாண்மை, நிதி கணிதவியல், சாப்ட்வேர் போன்ற நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என கணிதவியல் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகிறார்.

பி.எஸ்சி (ஹானர்ஸ்), கணிதம் மற்றும் கணினி அறிவியல், பி.எஸ்சி (ஹானர்ஸ்) இயற்பியல் ஆகிய இரண்டு இளநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றது. நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழத முடியும். இப்படிப்புக்கான கல்விக் கட்டணம் பருவத்திற்கு ரூ.750 செலுத்த வேண்டும்.

இந்த படிப்பிற்கு உதவித் தொகையாக மாதந்தோரும் ரூ.4000 மும், இதர செலவுகளுக்கு ரூ.1000மும் கூடுதலாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் தேர்வுகளில் பெற்ற தேர்ச்சி விகிதத்தைப் பொருத்து உதவித்தொகை வழங்கப்படும்.

முதுநிலைப் படிப்பில் எம்.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், பயன்பாட்டுக் கணிதம் உள்ளிட்ட மூன்று பட்டப் படிப்புகள் வழங்கப்படுகிறது.

எம்.எஸ்சி., கணிதப் படிப்பில் சேர பி.டெக்., பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைப்பெறும். எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்பில் சேர கணினி துறையில் பி.இ., பி.டெக்., முடித்திருப்பது அவசியமாகும். எம்.எஸ்சி., பயன்பாட்டுக் கணிதப் படிப்பில் சேர பி.எஸ்சி.,யில் கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் பி.இ, பி.டெக்., முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

இந்த படிப்பிற்கு கல்வி உதவித் தொகையாக ரூ.4,800 வழங்கப்படுகிறது. கல்வி உதவித் தொகையுடன் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்கு மாதந்தோறும் ரூ.5000 கூடுதலாக வழங்கப்படுகிறது.

பிஎச்.டி., படிப்பில் கணிதம், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகிறது. கணிதப் படிப்பில் சேர எம்.எஸ்சி., கணிதம், பி.இ பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும். இயற்பியல் ஆராய்ச்சி படிப்பில் சேர பி.இ, பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி கணினி அறிவியல் போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

இந்த ஆராய்ச்சிப் படிப்புகளை தொடர்பவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி உதவித் தொகையாக மாதத்திற்கு ரூ.16,000மும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.18,000மும் வழங்கப்படுகிறது. இதை தவிர புத்தகத்திற்கு என தனியாக ஆண்டுக்கு ரூ.10,000 மற்றும் தங்கும் விடுதி செலவுக்கு கல்வித் தொகையில் 30 சதவீதம் கூடுதலாகவும் வழங்கப்படுகிறது.

இந்த கல்வி நிறுவனத்தில் முழநேர படிப்பு மட்டுமல்லாமல் பகுதி நேர ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்கள் அறிய: www.cmi.ac.in