Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

மத்திய அரசு துறைகளில் இன்ஜினியர் பணி



மத்திய அரசின் இன்ஜினியர் பிரிவில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட அகில இந்திய அளவில் நடத்தப்படும் Engineering Services Examination-2013 தேர்வு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(UPSC) அறிவித்துள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இன்ஜினியர்

கல்வித்தகுதி: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30க்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200 எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வு பாடத்திட்டம் பற்றிய விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும். எழுத்துத் தேர்வுக்கான அனுமதி கடிதத்தையும் மேற்கண்ட இணையதளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் முறையில் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தமிழக அரசு போலீஸ் துன்புறுத்தலில் வாலிபர் மரணம் ; அதிக இழப்பீடு 4.40 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு



போலீஸ் காவலில் மரணமடைந்தவரின் குடும்பத்துக்கு, அதிக இழப்பீட்டுத் தொகை, 4.40 லட்சம் ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தைச் சேர்ந்த, செல்வி என்பவர், தாக்கல் செய்த மனு:

என் கணவர், அண்ணாமலை. விருத்தாச்சலம் பஸ் நிலையத்தில், பொருட்கள் வாங்கும் போது, அவரை, போலீசார் தாக்கினர். போலீஸ் காவலில் வைத்தனர். அன்று, எங்கள் கிராமத்துக்கு வந்து, பழனிவேல் என்பவரை, விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். மறுநாள், என் கணவர் இறந்து விட்டார். அவரை, சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு போலீசார் சேர்ந்து தாக்கியதாக, பழனிவேல் தெரிவித்தார். 2004ம் ஆண்டு, நவம்பர் மாதம், சம்பவம் நடந்தது. எனக்கு, தகுந்த இழப்பீடு வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை, நீதிபதி டி.ராஜா விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சத்தியசந்திரன் ஆஜரானார். நீதிபதி டி.ராஜா பிறப்பித்த உத்தரவு: மனித உரிமை மீறல் நடந்துள்ளது எனக்கூறி, 1.50 லட்சம் ரூபாய், இழப்பீடு வழங்க, மாநில மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் காவலில் இருக்கும் போது, அவர்களின் துன்புறுத்தலினால், அண்ணாதுரை இறந்துள்ளார். அவருக்கு, மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன. மனித உரிமை கமிஷன் பிறப்பித்த, 1.50 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது, சொற்பமானது தான். நியாயமான இழப்பீடு, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அண்ணாதுரை இறக்கும் போது, அவரது வயது, 40. மாத சம்பளம், 4,500 ரூபாய் என, கணக்கில் கொண்டு, இழப்பீடு தொகை கணக்கிடப்பட வேண்டும்.

எனவே, 5.90 லட்சம் ரூபாய், இழப்பீடு பெற, மனுதாரருக்கு உரிமை உள்ளது. ஏற்கனவே, 1.50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதால், மீதித் தொகை, 4.40 லட்சம் ரூபாயை, இரண்டு மாதங்களில், உள்துறைச் செயலர் வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி ராஜா உத்தரவிட்டுள்ளார்.

எனர்ஜி இன்ஜினியரிங் படிப்பு


அன்றாட தேவைகளுக்கு ஆற்றல் அவசியம். வாழ்க்கையை இயங்க ஆதாரமாக இருக்கும் இந்த எரிபொருள்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன, எங்கிருந்து இது கிடைக்கிறது என்று நாம் ஒருபோதும் சிந்தித்து பார்ப்பது கூட இல்லை.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்கள் எப்படி வருகிறது? இந்த எரிபொருள்கள் எப்படி மின்சாரமாக மாறுகின்றது? என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த எனர்ஜி இன்ஜினியரிங் துறை.

ஆற்றல் மூலங்களை கண்டறிந்து, அவற்றைப் பயன்படுத்தக் கூடிய எரிபொருளாக மாற்றுவது; எரிபொருள்களைத் தேவையான இடங்களுக்கு எடுத்துச் செல்வது; உள்ளூரில் எரிபொருள்களை மக்களின் தேவையை பூர்த்தி செய்ய பாதுகாப்பான முறையில் வினியோகிப்பது என பல நிலைகளிலும், ஆற்றல் துறை நிபுணர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.

வழங்கப்படும் படிப்புகள்
பி.இ., (எனர்ஜி இன்ஜினியரிங்), பி.டெக்., (எனர்ஜி அண்டு என்விரான்மென்டல் இன்ஜினியரிங்), எம்.டெக்., (எனர்ஜிடிக்ஸ்) , எம்.டெக்., (எனர்ஜி), எம்.டெக்., (எனர்ஜி அண்டு என்விரான்மென்டல் இன்ஜினியரிங்), எம்.டெக்., ( எனர்ஜி அண்டு பொலுõசன் கண்ட்ரோல்), எம்.பி.ஏ., (எனர்ஜி மேனேஜ்மென்ட்) ஆகிய பிரிவுகளில் எனர்ஜி படிப்புகள் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 படிப்பில், அறிவியல் பிரிவு படித்தவர்கள் இளநிலை படிப்புகளில் சேரலாம்.

கல்வி நிறுவனங்கள்
தமிழகத்தில் பெரும்பாலான இன்ஜினியரிங் கல்லுõரிகளில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.

1. Anna University , Chennai
2. Kumaraguru College Of Technology, Coimbatore
3. PSG College Of Technology, Coimbatore
4. National Institute Of Technology, Tiruchirappalli
5. Kalasalingam University , Sirivilliputtur

வேலை வாய்ப்புகள்
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள எரிபொருள் தயாரிக்கும் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

திருச்சி ஐ.ஐ.எம் (IIM ) - இல் பகுதி நேர மேலாண்மை முதுகலை பட்டய படிப்பு


திருச்சி ஐ.ஐ.எம்., சென்னை மையத்தில், பகுதி நேர மேலாண்மை முதுகலை பட்டய படிப்பிற்கான, மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருச்சி ஐ.ஐ.எம்., இயக்குனர் பிரபுல்லா அக்னி ஹோத்ரி கூறியதாவது: ஐ.ஐ.எம்., திருச்சியின் சென்னை மையம், திருச்சி வளாகத்துடன், "வீடியோ கான்பரசிங்” மூலம் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம், அங்கிருந்தபடியே பேராசிரியர்கள், தங்கள் தகவல்களை பரிமாறி கொள்ள முடியும். ஆசிரியர்கள், பாட வகுப்புகளும் பதிவு செய்யப்படுகிறது.


பகுதி நேர மேலாண்மை முதுகலை பட்டய படிப்பு கடந்தாண்டு, சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாம் ஆண்டாக மாணவர் சேர்க்கையை துவக்கினோம். இளங்கலையில், 50 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களும், மூன்றாண்டு பணி அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். வாரந்தோறும், நான்கு நாள்கள் மாலையில், வகுப்புகள் நடக்கும். மொத்த இடங்கள், 50. மூன்றாண்டு கல்வி கட்டணம், 10 லட்சம் ரூபாய்.


விண்ணப்ப படிவத்தை, www.iimtrichy.ac.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எழுத்து தேர்வு, நேர்காணலுக்கு பின், சேர்க்கை நடைபெறும். கேட்-2012, ஜிமேட் தேர்வு எழுதியவர்களுக்கு, எழுத்து தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பங்கள், மே, 12க்குள் வந்து சேர வேண்டும்.இவ்வாறு பிரபுல்லா கூறினார்.