இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக் குழு கூட்டம் இன்று (அக்.5) காலை 10.30 மணிக்கு சென்னை வேப்பேரி, ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள பெரியார் மைய அரங்கில் நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை யில் நடைபெற்ற இக் கூட்டத் தில் மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், காயிதெ மில்லத் சர்வதேச ஒருங்கிணைப் பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. மற்றும் மாநில நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர் கள், மாவட்டங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் 454 பேர் கலந்து கொண்டனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சமுதாயப் பிரபலங் களில் காலம் சென்றோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மஃபிரத்துக்கு துஆ செய்யப் பட்டது.
அதனைத் தொடர்ந்து வருகை தந்த உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை எடுத் துக் கூறினர்.
இக்கூட்டத்தில் கீழ்க் காணும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன:
1. இஸ்லாமிய திருமணச் சட்ட விளக்கக் கருத்தரங்குகள் கூட்டங்கள் வெற்றிக்கு நன்றி
இஸ்லாமிய திருமணச் சட்ட விளக்கக் கருத்தரங்கு கள் தமிழகத்தின் பெரும் பாலான நகரங்களில் சிறப்பாக நடத்தி, முஸ்லிம் சமுதாய மக்கள் மத்தியிலும் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் இடத்தி லும் இஸ்லாமிய திருமணச் சட்டங்கள் பற்றிய தெளிவை யும் விழிப்புணர்வையும் ஏற்ப டுத்திய மாவட்ட முஸ்லிம் லீகுகளுக்கு இப்பொதுக் குழு பாராட்டும் வாழ்த்தும் தெரி விக்கிறது.
இந்தக் கருத்தரங்குகள் வெற்றிபெற அனைத்து வகை களிலும் ஒத்துழைப்பும் ஆதர வும் அளித்துள்ள மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளுக்கும் சங்கைக்குரிய உலமா களுக் கும் சமுதாயச் சான்றோர்க ளுக்கும் புரவலர்களுக்கும் இப்பொதுக்குழு வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்கிறது. 2. """"முன்மாதிரி"" மஹல்லா விருதுகள் வழங்கும்
மஹல்லா ஜமாஅத் மாநாடு
தமிழக முஸ்லிம் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு, 2013 டிசம்பர் 28 சனிக்கிழமை திருச்சியில் நடத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது.
தமிழக முஸ்லிம் மஹல்லா ஜமாஅத்துகளை கிராமப்புற மஹல்லா ஜமாஅத், நகர்ப்புற மஹல்லா ஜமாஅத், மாநகர் மஹல்லா ஜமாஅத் என்று மூவகைப்படுத்தி, ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத் நிர்வாக மும், மஸ்ஜிது பராமரிப்பு, மதரஸா நடத்துதல், ஷரீஅத் பஞ்சாயத்து நடத்துதல், மஹல்லா ஜமாஅத் பைத்துல் மால் நடத்துதல், திருமணப் பதிவு செய்தல், பிறப்பு இறப்பு பதிவு செய்தல், அரசு களின் நலத் திட்டங்களை ஜமாஅத்தினரின் பயன்பாட் டுக்கு உதவி புரிதல் போன் றவைகளில் முன்னுதாரணமாக திகழும் மஹல்லா ஜமாஅத் துகளை மேற்கண்ட மூன்று வகையில் இருந்தும் வகைக்கு ஐந்து ஜமாஅத்துகள் தெரிவு செய்து, அவ்வாறு தேர்வு செய்யப்படும் 15 மஹல்லா ஜமாஅத்களுக்கு முன்மாதிரி மஹல்லா ஜமாஅத் விருதுகள் வழங்கிச் சிறப்பிப்பது எனவும் இப்பொதுக்குழு முடிவு செய்கி றது.
3. வார்டு கன்வீனர்கள் நியமனம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாவட்ட, நகர, வார்டு மற்றும் பிரைமரி நிர்வாகிகளில் சிலர் மாற்றப்பட்டும், சிலர் வெளிநாடு சென்றும், அவர் களின் முகவரிகள் மாற்றப்பட் டும் உள்ள நிலையில், மாவட்ட, நகர, வார்டு மற்றும் பிரைமரி நிர்வாகிகளின் புதிய பட்டி யலை தலைமை நிலையத் துக்கு அக்டோபர் 15ம் தேதிக் குள் அனுப்பி வைக்க வேண் டப்படுகிறது. ஒவ்வொருவரின் முழு முகவரியுடன் தொடர் புக்குரிய தொலைபேசி எண்ணும் அவசியம் குறிப்பி டப்படுதல் வேண்டுவதாகும்.
இதுவரை இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் அமைப்புகள் இல்லாமல் இருக்கிற மாநகர, நகர, பேரூர் வார்டுகளில், வார்டு கன்வீனர் என்று அந்த வார்டு முஸ்லிம் லீகர் ஒரு வரைத் தெரிவு செய்து, அவ் வாறு கன்வீனர்கள் நியமிக் கப்பட்டுள்ள வார்டு விவரங் களும், அவைகளின் கன்வீனர் களின் முகவரி மற்றும் தொலைபேசி விவரங்களும், அவர்களின் புகைப்படங் களுடன் அக்டோபர் இறுதிக் குள் தலைமை நிலையத்துக்கு மாவட்ட தலைவர்கள்/செயலா ளர்கள் அனுப்பி வைக்கப் பணிக்கப்படுகிறார்கள்.
அக்டோபர் இறுதிக்குள் இந்த பட்டியல் அனுப்பத் தவறும் மாவட்டங்களில் உள்ள மாநகர, நகர, பேரூர் வார்டுக ளுக்கு, அந்தந்த வார்டுகளில் உள்ள முஸ்லிம் லீக் உறுப்பி னர்களில் ஒருவரை வார்டு கன்வீனராக நியமித்து அறி விக்கும் அதிகாரத்தை தலைமை நிலையம் செயல் படுத்தும் என்றும் முடிவு செய் யப்படுகிறது.
4. தேர்தல் நிதி
இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு தமிழகம் முழுவதிலும் உள்ள சமுதாய மக்களிடமி ருந்து தேர்தல் நிதி திரட்டுவது என்றும், ரூ. 10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ. 2 ஆயிரம், ரூ. ஆயிரம், ரூ. 500, ரூ. 100 என்று நன்கொடை ரசீது அச்சிட்டு மாவட்ட முஸ்லிம் லீகுகள் மூலம் அக்டோபர் 15ம் தேதியி லிருந்து துவங்குவது என்றும் முடிவு செய்யப்படுகிறது.
5. காஜிகளுக்கு அங்கீகாரம்
தலைமை காஜி, மாவட்ட காஜிகள், மஹல்லா ஜமாஅத் துகளில் இயங்கும் மஸ்ஜிதுக ளின் இமாம்களான மஹல்லா காஜிகள், முஸ்லிம் தனியார் சட்டப்படி நடைபெறும் திரு மணம் மற்றும் மணமுறிவு நிகழ்வுகளின் போது முன் னின்று, அக்காரியங்களை நிறைவேற்றி வைக்கும் பழக்க மும் பண்பாடும் பாரம்பரியமாக முஸ்லிம் சமுதாயத்தில் காலங் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில்தான் திருமணம் அல்லது மண முறிவு நடந்ததற்கான அத் தாட்சி சான்றிதழ்களை காஜி கள் வழங்கிவரும் வழக்கமும் தொடர்ந்து வருகிறது. இத்தகைய காஜிகளின் சான்றிதழ்கள் நீதிமன்றங்களி லும், அரசாங்க அலுவலங்களி லும் சொத்து மற்றும் பாகப் பிரிவினைகள் நடக்கும் மன் றங்களிலும், ஏற்றுக்கொள்ளப் படுவதும் தொன்று தொட்டு நடைமுறையில் உள்ள வழக்க மேயாகும். இந்தப் பாரம்பரிய முறை யில் திருமணம், மணமுறிவு மற்றும் வாரிசுதாரர்கள் பற்றிய காஜிகளின் சான்றளிப்புகளை தமிழக அரசும் மத்திய அரசும் அங்கீகரித்து ஏற்று, காஜிக ளின் சான்றிதழ்கள் சட்டப்படியா னவை என்று அறிவிக் குமாறு மத்திய, மாநில அரசுகளை இப்பொதுக்குழு கேட்டுக்கொள் கிறது.
6. மஹல்லா ஜமா அத் திருமணப்பதிவு
தமிழக முஸ்லிம் மஹல்லா ஜமாஅத் திருமணப்பதிவு தப்தர் (பதிவேடு)களில், தமிழ் நாடு அரசு 2009இல் நிறை வேற்றியுள்ள திருமண கட்டா யப்பதிவு சட்டத்தில் முஸ்லிம் சமுதாயத்தினரின் திருமண பதிவுக்கென்று தனியே தரப்பட்டுள்ள படிவம் 1(அ) இல் கண்டுள்ள விவரங்களின்படி முஸ்லிம் திருமணங்களைப் பதிவு செய்யுமாறும், அதற்கு ரிய நான்கு நகல்களை வைக்குமாறும், பதிவு செய்யப் பட்ட படிவ நகல் ஒன்றை மணமகன் வீட்டாருக்கும், மற்றொன்றை மணமகள் வீட்டாருக்கும், மற்றொன்றை மஹல்லா ஜமாஅத்திற்கும், மற்றொன்றை மாவட்ட காஜியின் திருமணப் பதிவு கோப்புக்கும் தரும் வகையி லும் தப்தர்களை அமைத்துக் கொள்ளுமாறு தமிழக முஸ்லிம் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை இப்பொதுக் குழுக் கேட்டுக் கொள்கிறது.
7. முஸ்லிம் திருமணங்களை சிறப்பு திருமணப் பதிவு சட்டப்படி பதிவு செய்யாதீர்
மஹல்லா ஜமாஅத் தப்தர் களில் பதிவு செய்யப்படும் திருமணங்கள், அரசு பதிவா ளர் அல்லது சார் பதிவாளர் இடம் பதிவு செய்யும்போது, படிவம் 1(அ) இல் உள்ளபடியும், மஹல்லா ஜமாஅத் தப்தரில் உள்ளபடியும் பதிவு செய்ய வேண்டும் என்றும், முஸ்லிம் திருமணங்களை விஷேச திருமணப்பதிவு சட்டப்படி (ளுயீநஉயைட ஆயசசயைபந ஹஉவ) பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் தத்தமது ஜமாஅத் தார்களுக்கு விளக்கி கூறு மாறும் இப்பொதுக் குழு வலியுறுத்தி கேட்டுக் கொள் கிறது. 8. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துக
இந்திய சிறுபான்மையருள் பெரும்பான்மையாகவுள்ள முஸ்லிம் சமுதாயம், கல்வி, பொருளாதார, சமூக வாழ்வில் மிகவும் பின் தங்கியும், எஸ்ஸி, எஸ்.டி. வகுப்பினரின் நிலையி லும் தாழ்ந்து உள்ள நிலையி லும் உள்ளதால், முஸ்லிம் களின் மேம்பாட்டுக்கென நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன், அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் களுக்கென்று தனியே 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக் கப் பரிந்துரை செய்துள்ளதை மத்திய அரசு சட்டமாக்கி, முஸ்லிம் சமுதாயத்திற்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட் டுக்கொள்கிறது.
9. பொதுசிவில் சட்டம் பற்றிய பிரிவை நீக்குக
இந்திய அரசியல் அமைப் புச் சட்டத்தில் உள்ள 44வது பிரிவும், நாடு முழுவதிலும் எல்லா மக்களுக்கும் ஏற்கும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அதில் இடம் பெற்றி ருக்கும் வாசகமும் அதே அரசியல் அமைப்புச் சட்டத் தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கும், மத சுதந்திரத்திற்கும், சமயச் சார்பின்மைக் கொள்கைக்கும் மாறுபட்டும் முன்னுக்குப் பின் முரணா கவும் இருப்பதால், அந்த 44வது பிரிவை அரசியல் அமைப்புச்சட்டத்திலிருந்து முற்றிலுமாக நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டுமென மத்திய அரசை இப்பொதுக் குழுக் கூட்டம் வற்புறுத்து கிறது.
10. உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம் நீதிபதிகள் நியமனம் செய்யக் கோரிக்கை
சென்னை உயர்நீதிமன்றத் தில் நிரந்தர நீதிபதிகள் 40 பேரும் கூடுதல் நீதிபதிகள் இருவரும் உள்ளனர். அறுபது நீதிபதிகள் நிரந்தரமாக இருப்ப தற்கு நியதி இருக் கிறது. இப்போதுள்ள 42 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த வராக இருக்கிறார். அவரும் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெறவுள்ளார் என்று கூறப்பட்டு வருகிறது. 42 நீதிபதிகள் இருந்த போது 4 முஸ்லிம் நீதிபதி கள் இருந்து வந்துள்ள மரபு இருக்கிறது. அந்த பாராட்டுக் குரிய மரபு இப்பொழுது பின்பற்றப் படாதிருப்பது, தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்குரிய பிரதிநிதித் துவமே இல்லை என்னும் வருந்ததக்க நிலையை உருவாக்கியிருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளில் குறைந்தபட்சம் நான்கு முஸ்லிம் நீதிபதிகள் இடம்பெறும் வகையிலும் சமூக நீதியை நிலை நிறுத்தும் வகையிலும் நீதிபதிகளின் நியமனங்களைச் செய்யுமாறு மத்திய மாநில அரசுகள் பரிந் துரைக்க இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
11. இலங்கை வடக்கு மாகாண புதிய அரசுக்கு வரவேற்பு
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நடந்த மாகாண கவுன்சில் தேர்தலில், தமிழ் தேசிய முன்னணி 80 சதவீதம் வாக்குகளைப் பெற்று, அமோக வெற்றியைக் குவித்து, நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர் களை முதலமைச் சராகத் தேர்வு செய்திருப்பதை இக்கூட்டம் மிகுந்த மகிழ்ச்சியோடு வரn வற்று வாழ்த்துகிறது.
இலங்கையின் இறை யாண்மையையும் ஒற்றுமை யையும் நிலைநிறுத்தும் வகை யில், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் அதிகாரப் பகிர்வுகளையும் ஜனநாயக முறையில் பெறுவதற்குரிய அணுகுமுறையை தமிழ்தேசிய முன்னணி அரசு பின்பற்றும் என முதலமைச்சர் திரு விக் னேஸ்வரன் அவர்கள் தெரி வித்திருப்பது மிகுந்த பாராட் டுக்குரியதாகும்.
வடக்கு மாகாண தமிழ் தேசிய முன்னணி அரசின் இந்த பண்பட்ட, பாராட்டுக் குரிய, பக்குவப்பட்ட அரசியல் ரீதியான அணுகு முறைக்கு இலங்கை அரசும், இந்திய அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங் களும் தேவைப்பட்ட ஒத்து ழைப்பு, ஆதரவு, உதவிகள் அனைத் தையும் செய்திட முன்வர வேண்டும்மென இக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
12 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி
2014 மே மாதம் நடைபெற விருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்று, ஜனநாயகப் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்வதென்றும், தேசிய அளவில் ஜனநாயக, சமயச்சார்பற்ற, சமதர்ம, சமூகநீதிக் கொள்கைகளைப் பேணிப் பாதுகாப்பதுடன், மாநில அரசுகளின் உரிமைக ளுக்கு உரிய மதிப்பளித்து, மாநிலந்தோ றும் தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதா ரத்துறைகளில் தன்னிறைவு பெறும் வகையில் எல்லா வகையான ஒத்துழைப்பும் நல்கிவருவதோடு, நாட்டு மக்களின் சமூகப் பன்முகத் தன்மையை மதித்துப்போற்றி, மதம், மொழி, இனம், மற்றும் கலாச்சார வழிப்பட்ட சிறு பான்மை மக்களின் உரிமை களுக்கு பாதுகாப்பளித்து, அவர்களின் நன் மதிப்பைப் பெறுகின்ற நல்லாட்சி அமையப் பாடுபடுவதெனவும் இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் தி.மு.க.வுக்கும் இடை யில் நீண்ட காலமாக தொடர்ந்து நீடித்து வரும் கொள்கை ரீதியான உறவும், கூட்டணியும் தொடரும் என இப்பொதுக்குழு முடிவு செய்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.