Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

தேசிய அளவில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு வேண்டும்,அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விடுவிக்கப்பட வேண்டும் :முஸ்லிம் மாணவர் பேரவை மாநில மாநாடு கோரிக்கை

சென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் அக்டோபர் 5ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணிவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை மாநில பிரதிநிதிகள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வரு மாறு- 

1. மாணவர் கல்விக் கடன் துரிதமாக கிடைக்கச் செய்தல்
உயர் கல்வி பயிலும் மாண வர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட வேண் டும் என்பது அரசின் நிலைப் பாடு. இந்தக் கல்விக் கடன்கள் எந்தச் சூழ்நிலையிலும் நிராகரிக்கப் படாமல் உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும் என மத் திய அரசு பல முறை அறிவுறுத்தி யுள்ளது. ஆயி னும், எண்ணற்ற ஊர்களில் ஏராளமான வங்கிகள் ஜாமீன் உள்ளிட்ட பல்வேறு கார ணங்களை கூறி விண்ணப்பங் களை நிராகரிக்கின்றன.

மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்று மாண வர்களின் சொந்த ஜாமீன் அடிப்படையில் வங்கிகள் கடன் உதவி வழங்க வேண் டும் என வலியுறுத்துவதோடு, இந்த கல்விக் கடன்களை ஆண்டின் இறுதியில் வழங்காமல் கல்வி யாண்டின் தொடக்கத்திலேயே வழங்க வேண்டும் என இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.



2. கல்விக் கடன் வட்டியை ரத்து செய்ய வேண்டுதல்
பொருளாதாரத்தில் நலிவ டைந்த பிரிவினருக்கு கல்விக் கடன் வழங்கப்படுகிறது. இக் கடனை பெறுகின்ற மாண வர்கள் படித்துப் பட்டம் பெற்று, வேலைவாய்ப்புக்காக காத்தி ருந்து வேலைவாய்ப்புக் களை பெற்றபின், கடன்களை அடைக் கின்றனர். ஆனால், கல்விக் கான கடனுக்கு தொடக்கத்தி லிருந்தே வட்டி விதிக்கப்படுவ தால் உரிய வேலைவாய்ப்பு பெறாதவர்கள் பெரும் சிரமம் அனுபவிக்கின்றனர். எனவே, கல்வி நலனுக்காக மாணவர்களின் நலனுக்காக எத்தனையோ திட்டங்களை தீட்டக்கூடிய மத்திய அரசு, வங்கிகள் வழங்கக்கூடிய கல்விக்கடனுக்கான வட்டியை ரத்து செய்து வங்கிகளின் இந்த வட்டியை ஏற்குமாறு மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது. 3. தமிழகத்திற்கு சிறுபான்மை பல்கலை.

சிறுபான்மை சமூகத்தின் கல்வி மேம்பாட்டு அவசியம் குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு பல பல்கலைக் கழகங் களை அமைத்து சிறுபான்மை யினரை கைதூக்கி விட முடி வெடுத்துள்ளது. அதன் தொடக்கமாக 6 பல்கலைக் கழகங்கள் அமைக்கப்பட உள்ளன. அவ்வாறு அமைக்கப் படும் சிறுபான்மையினருக் கான 6 மத்திய பல்கலைக்கழ கங்களில் ஒன்றை தமிழ்நாட் டில் அமைக்குமாறு மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

4. சிறுபான்மை மொழிக்கான அங்கீகாரம் உறுதி செய்தல்
தமிழகத்தில் மொழிவழி சிறுபான்மையினர் தங்கள் தாய்மொழி வழியில் கல்வி கற்று வந்தனர். சமச்சீர் கல்வி தமிழகத்தில் அமல்படுத்தப் பட்டபோது சிறுபான்மை மொழிகளுக்கான அந்தஸ்து காப்பாற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு அது ஏற்கப்பட்டது.


ஆனால், உர்தூ, மலை யாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் அரபி வழியில் கல்வி கற்கும் வாய்ப்பு படிப்படியாக குறைக்கப் பட்டு சிறுபான் மையின மொழிகள் நசுக்கப் பட்டு விடுமோ என்ற ஐயப்பாடு தமிழக சிறுபான்மை மொழி பேசுவோருக்கு ஏற்பட்டுள் ளது.

எனவே, சிறுபான்மை மொழி பேசுவோர் தங்கள் தாய் மொழியிலேயே கல்வி கற்க தகுந்த உத்தரவு பிறப் பித்து அதை உறுதிப்படுத் துமாறு தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5. தமிழ்நாடு மாநில உர்தூ அகாடமி வேண்டுதல் 

தமிழகத்தில் உர்தூ மொழி பேசுவோர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்கின் றனர். உர்தூ மொழியின் நன்மைக்காக கடந்த காலங்களில் உர்தூ அகாடமி செயல்பட்டு வந்தது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டரை வருடங்களுக்கு மேலாகியும் உர்தூ அகாடமி இதுவரை அமைக்கப்படவில்லை. நிதி நிலை அறிக்கையில் அறிவிக் கப்பட்டும் இது செயல்படுத் தப்படாதது உர்தூ மொழி பேசுவோரிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள் ளது.

இதுமட்டுமின்றி, ஆங்கி லேயர் ஆண்டு கொண்டிருந்த 1902-ம் ஆண்டு, சென்னை அண்ணாசாலை தாஹிர் சாஹிப் தெருவில் உர்தூ ஆசிரியர் பயிற்சி பள்ளி துவக் கப்பட்டு கடந்த 111 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்தது. அப் பயிற்சிப் பள்ளிக்கான முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டு விரிவுரை யாளர் பணியிடங்கள் நிரப்பப் படாமலேயே இருந்து அதையே காரணம் காட்டி மாணவர்கள் சேர்க்கப்படாமல் இறுதியில் 6-8-2013-ம் தேதிய அறிவிப்பில் அந்த பயிற்சிப் பள்ளி மூடப்பட்டு விட்டது. இது உர்தூ மொழி பேசுவோருக்கு இழைக்கப் பட்ட மாபெரும் அநீதியாகும்.

எனவே, தமிழக அரசு உர்தூ ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை உடனடியாக திறப்ப தோடு, காலியான பணி இடங் களில் உர்தூ ஆசிரியர்களை நியமிக்கவும், மாநில உர்தூ அகாடமியை அமைக்கவும் வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள் கிறது. 



6. மாவட்ட தலைநகரங்களில் சிறுபான்மை மாணவர் விடுதி
பள்ளிப் படிப்பை முடித்த சிறுபான்மையின மாணவர் கள் உயர் கல்வி பெறுவதற்கு கிராமப்புறங்களில் வாய்ப்புக் கள் இல்லாததால் நகரப்புறங் களையே நாட வேண்டி யுள்ளது. அவ்வாறு நகர்ப்புற கல்லூரி களில் படிக்கும் மாணவர்கள் அங்கு பெரும் தொகை கட்டணமாக வசூலிக் கப்படுவதால் விடுதிகளில் தங்கி படிக்க வாய்ப்பில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது.

மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட நகரங்களில் சிறு பான்மையின மாணவர்களுக் கென விடுதிகள் இல்லை. இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு தடைபடுகிறது.

எனவே, மாவட்ட தலைநக ரங்களில் சிறுபான்மை மாண வர்களுக்கென விடுதிகளை அமைக்குமாறு தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள் கிறது.

7. முஸ்லிம் களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் பொறுப்பேற்றவுடன் மொழி மற்றும் மதச்சிறுபான்மையி னருக்கான தேசிய ஆணை யத்தை 2005 மார்ச் 15-ம் தேதியன்று அமைத்தது. அந்த ஆணையம் 2006 மே 26 அன்று பிரதமரிடம் அந்த அறிக்கையை சமர்ப்பித்தது. சிறுபான்மையினருக்கு 15 சதவீதம் - அதில் முஸ்லிம் களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரைத்த அந்த ஆணை யத்தின் அறிக்கை மத்திய அரசால் ஏற்கப்பட்டு உடனடி யாக அமுல்படுத்தப்பட வேண் டும் என இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

8. தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் இட ஒதுக்கீட்டை உயர்த்துக
தமிழ்நாட்டில் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம் களுக்கு தனி உள்ஒதுக்கீடு 2007 செப்டம்பர் 17-ல் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டது. மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களை கைதூக்கி விட இந்த ஒதுக் கீட்டை உயர்த்தித் தர வேண் டும் என தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வருகிறது.



நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தித்தரப் படும் என தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா அம்மையார் குறிப்பிட்டிருந் தார். அது நிறைவேற்றப்பட வில்லை. எனவே, முஸ்லிம்களுக் கான 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள் கிறது.

9. முழு மதுவிலக்கை அமல்படுத்துக  

அனைத்து தீமைகளுக் கும் காரணம் மது என்றால் அது மிகையல்ல. வருமா னத்தை அதிகரிக்க மதுக் கடைகள் அதிகரிப்பது நமது நாட்டுக்கு உகந்ததல்ல.

கண்ட இடங்களில் எல்லாம் பார் திறக்கப்படுவ தும், இரவு நேரங்களில் கூட அதனை திறக்கச் செய்திருப் பதும், யார் வேண்டுமானாலும் மது வாங்கவும், குடிக்கவும் அனுமதிப்பதும், இளைஞர்கள், குறிப்பாக மாணவர்களை சீரழியச் செய்து வருகிறது.

எனவே இதனை முடிவுக்கு கொண்டு வர தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமுல் படுத்துமாறு இம் மாநாடு வலி யுறுத்துகிறது. 


10. அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை
நாட்டின் பல்வேறு மாநி லங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களில் எண்ணற்ற முஸ்லிம் இளை ஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி ஆண் டாண்டு காலமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் விடு விக்கப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலியுறுத்தியதன் பயனாக மத்திய அரசு மாநி லங்களுக்கு உரிய தாக்கீது களை பிறப்பித்து வருகிறது. அதன் ஒரு அம்சமாக சில தினங்களுக்கு முன்னால் மத்திய உள்துறை அமைச்சர் மாநில முதல்வர்களுக்கு அனுப்பிய தாக்கீதில் அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் இல்லை என்பதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்றுள்ளது. எனவே, இன்னமும் காலம் கடத்தாமல் நாட்டின் பல்வேறு சிறைகளில் உள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் விடுவிக்கப்படுவதோடு நீண்ட காலம் அவர்களுடைய சிறை வாழ்வுக் காக உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.





11.மத்திய அரசின் சிறுபான்மையோருக்கான பல்கலைக் கழகம்
சிறுபான்மையோர் கல்விநிலை மேம்படும் வகையில் மத்திய அரசு அறிவித்துள்ள  சிறுபான்மையோருக்காக தனி பல்கலைகழகத்தில் ஒன்றை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது .
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக