Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

புதன், 1 மே, 2013

கர்நாடகத்தில் பாஜக அரசின் கருப்பு அத்தியாயம் முடிவுக்கு வரும்


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அரசின் கருப்பு அத்தியாயம் முடிவுக்கு வரும் என்று, மகாராஷ்டிர மாநில முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

2008-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாவத்தால் பிறந்தது தான் பாஜக அரசு. பெல்லாரியில் நடைபெற்று வந்த சட்டவிரோத சுரங்கத் தொழில் அடிப்படையிலான அரசியலில் உருவானதுதான் பாஜக அரசு. இதன் விளைவாக முதல்வர், அமைச்சர்கள் பலர் சிறைக்குச் சென்று திரும்பியுள்ளனர். பாவத்தால் உருவான அரசை காப்பதிலேயே பாஜகவின் ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்துள்ளது.

பாஜகவின் மோசமான ஆட்சியால் கர்நாடக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு காலத்தில் புகழ் பெற்று விளங்கிய கர்நாடகம், பாஜக ஆட்சியால் கறைபடிந்துள்ளது. இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் கர்நாடகத்தை பீடித்திருந்த பாஜகவின் கருப்பு அத்தியாயம் முடிவுக்கு வரும்.

கர்நாடகத்தில் மீண்டும் ஒளிமயமான நல்லாட்சியை அளிக்க காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நல்லாதரவுடன் கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு நல்லாட்சியை அளிக்கும். பாஜக ஆட்சியால், பூங்கா நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூர் குப்பை நகரமாகியுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதன் மூலம், தென்னிந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்பட்ட பாஜக ஆட்சி முடிவுக்கு வரும்.

மகாராஷ்டிர மாநிலத்திலும் பாஜக - சிவசேனை ஆட்சி 1995-இல் அமைந்தது. 1999-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. அதன்பிறகு, மகாராஷ்டிரத்தில் பாஜகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதேபோல, கர்நாடகத்தில் இனி எந்தக் காலத்திலும் பாஜக ஆட்சிக்கு வர முடியாது என்றார் பிருத்விராஜ் சவாண்.

மெடிக்கல் நானோ டெக்னாலஜி படிப்பு


நுண்ணிய அளவிலான ரோபர்ட்கள், சென்சார்கள், கேமரா மற்றும் இதர பல சாதனங்கள் ஆகியவற்றை கண்டறிந்து மருத்துவத் துறையில் பயன்படுத்துவது, உடலை துளையிடாமல் சிகிச்சை அளிப்பது, நோயாளி உடலின் உட்புறத்தை பாதுகாத்து சிகிச்சை அளிப்பது மற்றும் தனிப்பட்ட செல்களை மட்டும் பாதுகாத்து சிகிச்சை அளிப்பது என பல்வேறு வகையான வருங்கால தொழில்நுட்பம் குறித்து இப்படிப்பில் (மெடிக்கல் நானோ டெக்னாலஜி) ஆய்வு செய்யப்படுகிறது.

மெடிக்கல் நானோ டெக்னாலஜி
மூலமாக எதிர்காலத்தில் நினைத்ததை செய்யலாம். உதாரணமாக நோயாளியின் உடலில், குறிப்பிட்ட பகுதியில்  நானோ அளவுடைய துகள் மூலமாக மருந்து பொருட்களை செலுத்தி குணமடையச் செய்யலாம். உயிரியல் மண்டலங்களில் உள்ள மூலக்கூறுகளை கண்காணித்தல், புதிதாக
உருவாக்குதல், சரி செய்தல், கட்டுப்படுத்துதல் என அனைத்து செயல் முறைகளையும் மெடிக்கல் நானோ டெக்னாலஜி மூலம் மேற்கொள்ளலாம்.

படிப்பு
எம்.டெக்., மெடிக்கல் நானோ டெக்னாலஜி படிப்பானது, 5 வருட ஓருங்கிணைந்த படிப்பாக தஞ்சாவூர் சாஸ்டிரா பல்கலைக்கழகத்தில் கற்றுத் தரப்படுகிறது.

கல்வித் தகுதி: பிளஸ் 2

வேலைவாய்ப்பு
எதிர்காலத்தில் நம்மை ஆளப் போகும் நானோ தொழில்நுட்ப படிப்புக்கான வேலைவாய்ப்பு குறித்து எவரும் அஞ்சத் தேவையில்லை. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல தரப்பட்ட ஆய்வுக் கூடங்களில் இப்படிப்பிற்கான வேலைவாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அறிவியல் திரைப்படங்களில் காட்டப்படுவது போன்ற கற்பனைக்கும் எட்டாத விசயங்கள் மற்றும் சாதனங்கள் உள்ளிட்டவை, நானோ தொழில்நுட்பம் மூலம் நிஜத்தில் நடக்கவும் சாத்தியம் இருக்கிறது. அதனால், நானோ தொழில் நுட்பமானது இன்னும் 10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெறும் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.

ரேடியோ ஜாக்கி மற்றும் செய்தி வாசிப்பாளர் பணிக்கான படிப்பு


இந்திய ஊடகத்துறையின் வளர்ச்சி விகிதம் 12 சதவிகிதமாக இருக்கிறது. 24 மணி நேர செய்தி சேனல்கள், நாளிதழ்கள் மற்றும் எப்.எம்., எனப்படும் பண்பலை ரேடியோக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இத்துறையில் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகிறது. ரேடியோ ஜாக்கியாக விருப்பமுள்ளவர்களுக்கும், டிவியில் செய்திவாசிப்பாளராக விருப்பமுள்ளவர்களுக்காக டெல்லி பல்கலைக்கழகமும், ஆர்.கே., பிலிம்ஸ் அண்ட் மீடியா அகாடமி நிறுவனமும் இணைந்து, மூன்று மாத படிப்பை வழங்குகின்றன.

பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 முடித்திருந்தால் போதுமானது. கல்விக்கட்டணமாக 15 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். செயல்முறை விளக்கமாக பயிற்சி அளிக்கப்படுவதால், எளிதில் நிபுணத்துவம் பெறுகின்றனர்.

தொடர்புடைய துறையில் பிரபலமானவர்கள், நிபுணத்துவம் மிக்கவர்களை அழைத்து வந்து நேரடிப்பயிற்சியும், கலந்துரையாடலும் நடக்கிறது. மேலும் விவரங்களைwww.rkfma.com  என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.