நுண்ணிய அளவிலான ரோபர்ட்கள், சென்சார்கள், கேமரா மற்றும் இதர பல சாதனங்கள் ஆகியவற்றை கண்டறிந்து மருத்துவத் துறையில் பயன்படுத்துவது, உடலை துளையிடாமல் சிகிச்சை அளிப்பது, நோயாளி உடலின் உட்புறத்தை பாதுகாத்து சிகிச்சை அளிப்பது மற்றும் தனிப்பட்ட செல்களை மட்டும் பாதுகாத்து சிகிச்சை அளிப்பது என பல்வேறு வகையான வருங்கால தொழில்நுட்பம் குறித்து இப்படிப்பில் (மெடிக்கல் நானோ டெக்னாலஜி) ஆய்வு செய்யப்படுகிறது.
மெடிக்கல் நானோ டெக்னாலஜி
மூலமாக எதிர்காலத்தில் நினைத்ததை செய்யலாம். உதாரணமாக நோயாளியின் உடலில், குறிப்பிட்ட பகுதியில் நானோ அளவுடைய துகள் மூலமாக மருந்து பொருட்களை செலுத்தி குணமடையச் செய்யலாம். உயிரியல் மண்டலங்களில் உள்ள மூலக்கூறுகளை கண்காணித்தல், புதிதாக
உருவாக்குதல், சரி செய்தல், கட்டுப்படுத்துதல் என அனைத்து செயல் முறைகளையும் மெடிக்கல் நானோ டெக்னாலஜி மூலம் மேற்கொள்ளலாம்.
படிப்பு
எம்.டெக்., மெடிக்கல் நானோ டெக்னாலஜி படிப்பானது, 5 வருட ஓருங்கிணைந்த படிப்பாக தஞ்சாவூர் சாஸ்டிரா பல்கலைக்கழகத்தில் கற்றுத் தரப்படுகிறது.
கல்வித் தகுதி: பிளஸ் 2
வேலைவாய்ப்பு
எதிர்காலத்தில் நம்மை ஆளப் போகும் நானோ தொழில்நுட்ப படிப்புக்கான வேலைவாய்ப்பு குறித்து எவரும் அஞ்சத் தேவையில்லை. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல தரப்பட்ட ஆய்வுக் கூடங்களில் இப்படிப்பிற்கான வேலைவாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அறிவியல் திரைப்படங்களில் காட்டப்படுவது போன்ற கற்பனைக்கும் எட்டாத விசயங்கள் மற்றும் சாதனங்கள் உள்ளிட்டவை, நானோ தொழில்நுட்பம் மூலம் நிஜத்தில் நடக்கவும் சாத்தியம் இருக்கிறது. அதனால், நானோ தொழில் நுட்பமானது இன்னும் 10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெறும் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக