Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 5 ஜனவரி, 2013

பத்து வயது சிறுமியை ஓராண்டாகபலாத்காரம் செய்த சுகுமார் என்ற கிழடன் கைது

கேரளா மாநிலம் மூணாறு அருகே, பத்து வயது சிறுமியை கடந்த ஓராண்டாக, பலாத்காரம் செய்து வந்த கிழடனை  , போலீசார் கைது செய்தனர்.

கேரளா, இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவன் , சுகுமார், 62. சிறிய கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டருகில் வசிக்கும், பத்து வயதான, ஐந்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு, மிட்டாய் உட்பட இனிப்பு வகைகளை கொடுத்து, ஏமாற்றி கற்பழித்துள்ளா.

சிறுமியின் தந்தை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விடவே, தாயார் கூலி வேலை செய்து வருகிறார். சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டிலும், கடையிலும் வைத்து, கடந்த ஓராண்டாக, சுகுமார் கற்பழித்து வந்துள்ளான் .இது குறித்து, குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினருக்கு தகவல் வரவே, அவர்கள்சிறுமியை அழைத்து விசாரித்தபோது உண்மை என, தெரியவந்தது. இக்குழுவினர் கொடுத்த புகார்படி,வெள்ளத்தூவல் போலீசார், சுகுமாரை கைது செய்தனர்.

தமிழகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு ரூ. 50 கோடியில் புதிய விடுதி


ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு, 50 கோடி ரூபாய் செலவில், 60 பேர் தங்கும் வகையில் விடுதி கட்டும் திட்டத்தை மேற்கொள்ள, வீட்டுவசதி வாரியம் ஒப்புதல் தெரிவித்து உள்ளது.

கடந்த, தி.மு.க., ஆட்சிக் காலத்தில், மீண்டும் மேலவையை கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பழைய, எம்.எல்.ஏ., விடுதி கட்டடம் இடிக்கப்பட்டு, 1.4 ஏக்கர் நிலத்தில், 10 மாடி கட்டடமாக, புதிய மேலவை உறுப்பினர் விடுதி கட்ட திட்டமிடப்பட்டது. லிப்ட், ஏ.சி., உடற்பயிற்சிக் கூடம், நூலகம் என, அனைத்து நவீன வசதிகளுடன், ஒவ்வொன்றும், 985 சதுர அடி பரப்பளவு கொண்ட, 100 அபார்ட்மென்ட்களாக, 37.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த விடுதி கட்ட திட்டமிடப்பட்டது.
அண்ணா பல்கலையின்,கட்டட அமைப்பியல் துறை மூலம், இதற்கான வடிவமைப்பு தயாரிக்கப்பட்டு, சி.எம். டி.ஏ.,விடம் திட்ட அனுமதி பெறும் நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மேலவை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. இந்த இடத்தை என்ன செய்வது என்பது குறித்து குழப்பம் நீடித்தது. இந்நிலையில், இங்கு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தங்கி செல்வதற்கான, விடுதி கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இத்திட்டத்துக்கு, கடந்தாண்டு, நவ., 30ம் தேதி நடந்த, தமிழக சட்டசபை வைர விழாவின் போது, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பான நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள, வீட்டுவசதி வாரியத்துக்கு, சட்டசபை செயலகம் பிறப்பித்த உத்தரவு விவரம்: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தங்கி செல்வதற்காக, 60 குடியிருப்புகள், முக்கிய விருந்தினர் தங்குவதற்கு எட்டு குடியிருப்புகள், குழு கூட்ட அறைகள் மற்றும் 250 பேர் அமரக்கூடிய வகையில், அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மாநாட்டு அறை ஆகியவை கட்டப்படும். இத்திட்டத்தை, 50 கோடி ரூபாயில் செயல்படுத்த, தமிழக அரசு நிர்வாகஒப்புதல் வழங்கியுள்ளது. நவீன கட்டுமான
உத்திகளை பயன்படுத்தி, பசுமைகட்டடமாக, வீட்டுவசதி வாரியம் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தலாம்.இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனநல மருத்துவப் பணிக்கு ஏராளமான வாய்ப்பு!


இந்தியாவில் லட்சம் பேருக்கு, ஒரு மனநல டாக்டர் என்ற நிலையே தற்போதுள்ளது. தமிழகத்தில் முதுநிலை படிப்பிற்கான டாக்டர்கள் சேர்க்கையும் மிகக்குறைவு தான்.

உலக சுகாதார ஆய்வின் படி, வரும் 2020 ம் ஆண்டில், ஆண்களின் எண்ணிக்கையில், மனநலம் சார்ந்த நோய்க்கு 2ம் இடம் கிடைக்கும். அதுவே பெண்களின் எண்ணிக்கையில், முதலிடம் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், மனநல சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் அதிகமாக இல்லை. இந்தியாவில் மொத்தமே 6000 மன நல டாக்டர்கள் தான் உள்ளனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, லட்சம் பேருக்கு ஒரு டாக்டர் என்ற நிலையே உள்ளது. மேலை நாடுகளில் 5000 பேருக்கு ஒரு மனநல டாக்டர் இருக்கிறார். மனநலம் என்பது சமூகத்தில் அந்தஸ்து குறைவான விஷயமாக பார்க்கப்படுவதால், சிகிச்சை பெறுவோரும் தயங்குகின்றனர். டாக்டர்களும் இப்படிப்பிற்கு ஆர்வம் காட்டுவதில்லை.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை மனநல டாக்டர் வெ.ராமானுஜம் கூறியதாவது: மனநல டாக்டர்களை அணுகுவதில், இன்னமும் மக்களிடையே தயக்கம் இருப்பது உண்மை தான். ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, டாக்டர்கள் இல்லாதது தான், குறையாக இருக்கிறது. மேற்கத்திய கலாச்சாரத்தைப் போல, நமது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வதால் இருதய நோய், ரத்தஅழுத்தம், நீரிழிவு வருகிறது. இவற்றுக்கு அடிப்படைக் காரணம் மனச்சோர்வு தான், என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சிறப்பு நிபுணர்கள் அந்தந்த நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். அடிப்படை விஷயமான மனச்சோர்வுக்கு மருந்தளிக்க முடியாது. எத்தனை நாட்களுக்கு மருந்து கொடுக்க வேண்டும், என்பதையும் நோயாளிக்கேற்ப தீர்மானிக்க வேண்டும். சிலவகை மனநோய்கள் நூறு சதவீதம் குணமடைய வாய்ப்புள்ளது. இதை கவனிக்காமல் விடும் பட்சத்தில், தற்கொலைகள் அதிகரிக்கின்றன.

தமிழகத்தில் தற்போது முதுநிலை மனநலப் படிப்பிற்கு அரசு, தனியார் கல்லூரிகளில் 30 இடங்கள் தான் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் மனநலத்திற்கு சிகிச்சை பெறுவோர், அதிகரித்து வருகின்றனர். அதற்கேற்ப டாக்டர்கள் இல்லை. எனவே, மனநல முதுநிலைப் படிப்பில் கூடுதலாக சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும், என்றார்.