ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு, 50 கோடி ரூபாய் செலவில், 60 பேர் தங்கும் வகையில் விடுதி கட்டும் திட்டத்தை மேற்கொள்ள, வீட்டுவசதி வாரியம் ஒப்புதல் தெரிவித்து உள்ளது.
கடந்த, தி.மு.க., ஆட்சிக் காலத்தில், மீண்டும் மேலவையை கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பழைய, எம்.எல்.ஏ., விடுதி கட்டடம் இடிக்கப்பட்டு, 1.4 ஏக்கர் நிலத்தில், 10 மாடி கட்டடமாக, புதிய மேலவை உறுப்பினர் விடுதி கட்ட திட்டமிடப்பட்டது. லிப்ட், ஏ.சி., உடற்பயிற்சிக் கூடம், நூலகம் என, அனைத்து நவீன வசதிகளுடன், ஒவ்வொன்றும், 985 சதுர அடி பரப்பளவு கொண்ட, 100 அபார்ட்மென்ட்களாக, 37.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த விடுதி கட்ட திட்டமிடப்பட்டது.
அண்ணா பல்கலையின்,கட்டட அமைப்பியல் துறை மூலம், இதற்கான வடிவமைப்பு தயாரிக்கப்பட்டு, சி.எம். டி.ஏ.,விடம் திட்ட அனுமதி பெறும் நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மேலவை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. இந்த இடத்தை என்ன செய்வது என்பது குறித்து குழப்பம் நீடித்தது. இந்நிலையில், இங்கு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தங்கி செல்வதற்கான, விடுதி கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இத்திட்டத்துக்கு, கடந்தாண்டு, நவ., 30ம் தேதி நடந்த, தமிழக சட்டசபை வைர விழாவின் போது, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டினார்.
இது தொடர்பான நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள, வீட்டுவசதி வாரியத்துக்கு, சட்டசபை செயலகம் பிறப்பித்த உத்தரவு விவரம்: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தங்கி செல்வதற்காக, 60 குடியிருப்புகள், முக்கிய விருந்தினர் தங்குவதற்கு எட்டு குடியிருப்புகள், குழு கூட்ட அறைகள் மற்றும் 250 பேர் அமரக்கூடிய வகையில், அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மாநாட்டு அறை ஆகியவை கட்டப்படும். இத்திட்டத்தை, 50 கோடி ரூபாயில் செயல்படுத்த, தமிழக அரசு நிர்வாகஒப்புதல் வழங்கியுள்ளது. நவீன கட்டுமான
உத்திகளை பயன்படுத்தி, பசுமைகட்டடமாக, வீட்டுவசதி வாரியம் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தலாம்.இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக