Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? :மரைன் இன்ஜினியரிங் படிப்பு


மரைன் இன்ஜினியரிங் என்பது, கடல்சார் கட்டமைப்பு மற்றும் அறிவியல் தொடர்பான ஒரு பொறியியல் பிரிவாகும். மரைன் இன்ஜினியர்கள், ஒரு கப்பலின் தொழில்நுட்ப மேலாண்மைக்கு முழு பொறுப்பாகிறார்கள்.
Steam turbines, gas turbines and diesel engines போன்ற ஒரு கப்பலின் சாதனங்களை தேர்வு செய்யும் பொறுப்பு இவர்களுடையது. மேலும், கட்டுமானம், இயக்கம் மற்றும் இன்ஜின் அறை பராமரிப்பு போன்ற பணிகள் இவர்களுக்கு முக்கியமானவை. மரைன் இன்ஜினியரிங் பாடமானது, ஆன்த்ரோபாலஜி, ஆர்க்கியாலஜி, சோசியாலஜி மற்றும் மனிதனின் கடல் சம்பந்தமான இன்னும் சில துறைகளுடன் தொடர்புடையது.
மரைன் இன்ஜினியரிங் தொடர்பாக வழங்கப்படும் சில பாட வகைகள்
* Diploma in Marine engineering
* Bachelor of engineering in Marine engineering
* Bachelor of technology in Marine engineering
* Bachelor of technology in naval architecture & ocean engineering
* Master of technology in air armament
* Master of engineering in Marine engineering
* Master of technology in Marine engineering
* Master of technology in ocean engineering and naval architecture

இப்படிப்பில் சேர்வதற்கான அடிப்படை தகுதிகள்
இளநிலைப் படிப்பு
இளநிலைப் பட்டப் படிப்பில் சேர விரும்பும் ஒருவர், கணிதம், இயற்பியல், உயிரியல் மற்றும் வேதியியல் போன்ற அறிவியல் பாடங்களோடு, மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேசமயம் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர வேண்டுமெனில், JEE போன்ற கூட்டு நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தப் படிப்பின் காலகட்டம் 4 வருடங்கள்.
முதுநிலைப் படிப்பு
மரைன் தொடர்பான முதுநிலைப் படிப்பில் சேர்பவர்களுக்கு, பி.இ/பி.டெக் அல்லது வேறு ஏதேனும் சமமான பொறியியல் பிரிவில் இளநிலைப் பட்ட தகுதி இருக்க வேண்டும். முதுநிலைப் படிப்பின் காலஅளவு 2 வருடங்கள்.
இத்துறையில் வழங்கப்படும் சில சிறப்புநிலை(specialisation) படிப்புகள்
* Maritime commerce
* Marine refrigeration
* Command and control system
* Weaponry and weapon systems
* Navigation systems and equipment
* Marine renewable energy research
* Autonomous underwater vehicle research
* Information, communication systems and equipment
* Offshore extractive and infrastructure (cable laying)
வேலை வாய்ப்புகள்
இந்திய அளவில், சிறந்த வேலைவாய்ப்புக்காக, மாணவர்கள் விரும்பி தேர்வு செய்யும் ஒரு சில முக்கிய படிப்புகளில் இதுவும் ஒன்று. இதற்கான வேலை வாய்ப்புகள் ஏராளம். Marine engineer, Ocean engineer and Naval architect போன்ற பணி நிலைகளுக்கு, தனியார், கல்வி, கார்பரேட் மற்றும் அரசுத் துறைகளில் வாய்ப்புகள் நிறைய உள்ளன.
இந்தியா மற்றும் வெளி நாடுகளில் அபரிமித வேலைவாய்ப்புகள் உள்ளன. நவீன உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் நேவிகேஷன் போன்ற அம்சங்களால் இந்தப் பணியின் தன்மை மேம்பட்டுள்ளது மற்றும் விரிவடைந்துள்ளது. மரைன் இன்ஜினியரிங்கில், environmental protection, offshore oil recovery, marine metals and corrosion, renewable energy, remote sensing, naval architecture, defense, underwater vehicles, global climate monitoring and marine transportation போன்ற பணிகள் குறிப்பிடத்தக்கவை.
இத்துறை பொறியாளர்களுக்கான சில பணி நிலைகள்
* Pumpman
* Harbor master
* Chief engineer
* Third engineer
* Fourth engineer
* Second engineer
* Marine engineering officers
* Junior (fifth) engineer
* Navy weapon engineering officer
ஊதியம்
அதிக சம்பளம் கிடைக்கும் துறைகளில் இதுவும் ஒன்றாகும். பயிற்சி நிலையில் உள்ள ஒரு பொறியாளர், மாதம் ரூ.30000 முதல் ரூ.40000 வரை பெறலாம். அனுபவம் மற்றும் விஷயங்களை தெரிந்துகொண்ட பிறகு, ஒருவர் பெறும் ஊதியம் மிக அதிகமாக இருக்கும்.
இந்திய மெர்சன்ட் நேவியில் பணிபுரியும் ஒரு பொறியாளர் கவர்ச்சிகரமான சம்பளம் பெறுகிறார். வெளிநாட்டில் பணிபுரியும் ஒரு மரைன் பொறியாளருக்கு NRI தகுதி கிடைக்கிறது. வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் பெறும் ஊதியமும் அபரிமிதமானது.
எங்கு படிக்கலாம் ? 
2.Sri Venkateswara College of Engineering,http://www.svce.ac.in

3.G.K.M. College of Engineering and Technology, Chennai


4.Vels College of Engineering and Technology - Chennai


5.R.L. Institute of Nautical Sciences, Madurai 


6.Indian Maritime College, Chennai


படிப்பில் பின்தங்கிய மாணவர்களை முன்னேற்றும் ஆசிரியர்களே தேவை

படிப்பில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களை முன்னேற்றும் ஆசிரியர்களே இன்றைய தேவை என்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் கூறினார்.

 சென்னை ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் பில்லபாங் சர்வதேசப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நேருக்குநேர் நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியது:
 வாழ்வில் சாதனை படைக்க விரும்பும் மாணவர்கள் ஏதேனும் ஒரு லட்சியத்தைத் தேர்வு செய்து, அதை அடைவதற்கான முயற்சியில் தொடர்ந்து இடைவிடாமல் கடுமையாக உழைக்க
 வேண்டும்.


 அவ்வாறு உழைக்கும்போது எதிர் வரும் சிரமங்களையும், பிரச்னைகளையும்,சோதனைகளையும் துணிவுடன் எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெற
 வேண்டும்.


 ராமேசுவரத்தில் எனக்கு கல்வி போதித்த ஆசிரியர் சிவசுப்ரமணிய அய்யர், பறவை எவ்வாறு வானத்தில் பறக்கிறது என்பதை விளக்கிக் கூறி, எனது படைப்பாற்றல் திறனை மேம்படுத்த உதவியதால், படிப்படியாக ஏவுகணை பொறியாளராக, விண்வெளித்துறை தொழில்நுட்பப் பொறியாளராக உயர முடிந்தது.


 மற்றொரு ஆசிரியரான அய்யாதுரை சாலமோன், வாழ்க்கையில் முன்னேற லட்சியம், அதை அடைந்தே தீருவேன் என்ற நம்பிக்கை, அந்த லட்சியத்தை அடைவதற்கான கடும் உழைப்பு ஆகியவை அவசியம் என்று வலியுறுத்தி, வழிகாட்டினார். பெரும்பாலான ஆசிரியர்களைப் போன்று அவர் வகுப்பில் நன்கு படிக்கும் மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து மேலும் ஊக்குவிக்காமல், படிப்பில் பின்தங்கியநிலையில் இருந்த மாணவர்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்தினார்.
 அவரைப்போன்று அனைத்து ஆசிரியர்களும் தங்களிடம் கல்வி பயிலும் மாணவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியத்துடன் முன்னேற உதவ வேண்டும்.


 மாணவர்கள் தங்களது தனித்திறனை மேம்படுத்தி, சரித்திரத்தில் இடம் பெறும் வகையில் உழைத்து வாழ்வில் உயர வேண்டும் என்றார்.



ஈரானில் நிலநடுக்கம்: 250 பேர் உயிரிழந்தனர்

ஈரானில் 11 நிமிட இடைவெளியில் 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 250 பேர் உயிரிழந்தனர்.

 ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள ஆஹார், ஹாரிஸ், வர்சாகான் ஆகிய நகரங்களை சனிக்கிழமை மாலை 4.53 மணிக்கு நிலநடுக்கம் உலுக்கியது.
 இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளுக்கும் மேல் பதிவானதாக, தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 நிலநடுக்கத்தால் 250 பேர் வரை இறந்ததாகவும், 400 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கங்களால் 60 கிராமங்கள் பலத்த சேதமடைந்தன. 4 கிராமங்கள் ஒட்டுமொத்தமாகத் தரைமட்டமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மேற்கண்ட நகரங்களில் 5 முறை சிறிய அளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
 இதனால் பீதியில் உறைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியில் ஓடிவந்தனர். நில அதிர்வுகள் அதிகம் உணரப்பட்ட டப்ரிஸ் நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மின்விநியோகம் தடைபட்டுள்ளது. ஈரான் மீட்புப் பணிகள் துறைத்தலைவர் மஹ்மூத் முஸôபர் இது குறித்துக் கூறுகையில், ""அருகிலுள்ள கிராமங்களை ரேடியோ டிரான்ஸ் ரிசீவர் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடிகிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது'' என்றார்.
 ஈரானின் பாம் நகரத்தில் கடந்த 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 31 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.