Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 19 ஜூலை, 2012

பாவங்கள் மன்னிக்கப்படும் ரமலான் மாதம்


ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி-முஸ்லீம்)


மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விடதாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.



மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும்,உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30

நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்.
அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.

ஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிருத்தி அவற்றின் பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33

நீங்கள் அறியாதவற்றை நான் அறிந்தவன் என்று உங்களுக்குக் கூறவில்லையாஎன்று வானவர்களிடம் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களுக்குப் பணியும் படிக்கூறினான். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வானவர்கள் அனைவரும் பணிந்தனர். இப்லீஸ் என்ற ஷைத்தான் மட்டும் பணிய மறுத்தான். திருக்குர்ஆன் 2:34


எனது கட்டளையை உனக்கு புறக்கணிக்கச் செய்தது எது என்று இப்லீஸை நோக்கி இறைவன் கேட்டதற்குநான் உயர்ந்தவனாஅவர் உயர்ந்தவாரா என்ற ஏற்றத் தாழ்வுகளை திமிர் தனமாக இறைவனுக்கே விளக்கி (?) விட்டு இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட மறுத்தான் இப்லீஸ் !



''எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்ததுஅகந்தை காண்டு விட்டாயா?அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' என்று (இறைவன்) கேட்டான்.

''நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்'' என்று அவன் கூறினான்.
''இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது எனது சாபம் உள்ளது'' என்று (இறைவன்) கூறினான்.
38:75 லிருந்து 78 வரையிலான வசனங்கள்.

உயர்ந்தோன்தாழ்ந்தோன் என்ற ஏற்றத்தாழ்வுகளை இறைவனிடமே கற்பிக்க முனைந்த தலைக்கனம் பிடித்த ஷைத்தான் இறைவனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டான்.அவ்வாறு வெளியேற்றப்பட்டவன் மனித குலத்தை அழிவில் ஆழ்த்தாமல் விடமாட்டேன் என்றுக் கூறி வெளியேறினான்.இப்லீஸினால் ஆதம்(அலை) அவர்களுக்கு ஆபத்து (வழித் தவறுதல்) ஏற்படும் என்பதை முன்கூட்டியே அவர்களுக்குக் கூறி எச்சரிக்கை செய்துஇன்ன மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்றும் தடை வித்தித்தான் இறைவன். திருக்குர்ஆன் 2:35

தடையை மீறினார் வழி தவறினார்.
எதன் பக்கம் நெருங்காதீர்கள் என்று இறைவன் தடை விதித்திருந்தானோ அதையே சிறந்தது என்றும் அதன் மூலமே நிரந்தர இன்பமும்நிலையான வாழ்வும்இருப்பதாகக் கூறி அவரை இலகுவாக வழி கெடுத்தான் இப்லீஸ்.
(20:120).அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப்பற்றியும்,அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)

(20:121).அவ்விருவரும் அதிரிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.
இன்று வரையிலும் அதே பாணியில் அதிகமான மக்களை வழிகெடுத்து வருகிறான் ஷைத்தான்

அன்று -- அந்த மரத்தின் கனி,
இன்று -- மதுமாதுசூது ( இறைவனால் தடுக்கப்பட்ட இன்னும் பல)

மதுமாதுபோன்றவைகள் இறைவனால் தடைசெய்யப்பட்டவைகள்உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவைகள்நரகில் தள்ளக் கூடியவைகள். என்பதை நன்றாக அறிந்திருந்தும் அவற்றில் தான் மன அமைதி கிடைக்கிறதுஅழியக்கூடிய உடல் அழிவதற்கு முன் அனுபவித்துக் கொள் என்ற தீய சிந்தனையை விதைத்து இறைவன் தடைசெய்த தீமைகளை மன அமைதிக்கென்று பொய்யாக ஒரு சிலரை தொடங்கச் செய்து இன்று அதிகமான மக்களின் மன அமைதியையும்உடல் நலத்தையும் கெடுத்து உலகையே குழப்பத்தில் ஆழ்த்தி விட்டான் ஷைத்தான் என்ற இப்லீஸ்.

படிப்பினைகள்
ஆகு என்று சொன்னதும் ஆகிவிடக் கூடியஅழிந்து விடு என்று சொன்னதும் அழிந்து விடக்கூடிய சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு ஆதம்(அலை) அவர்களின் செயல் கோபமூட்டக் கூடியதாகவே இருந்தாலும் கோபம் கொள்ளாமல் அவர் வருந்தித் திருந்தி தனது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதற்காக இட மாற்றம் மட்டும் செய்து சந்தர்ப்பம் வழங்கினான் கருணையாளன் இறைவன்.
அறிவு கொடுக்கப்பட்ட ஆதம்(அலை) அவர்களும்அவரது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் இறைவனின் தடையை பகிரங்கமாக மீறியக் குற்றத்திற்காக தங்களை மிகப்பெரிய பிடியாகப் பிடிக்காமல் இடமாற்றம் மட்டும் செய்து வாழ விட்ட தயாளனின் கருணையை நினைத்து தொடர்ந்து அழுது கண்ணீர் வடித்தனர்.

அவர்களது உள்ளம் வருந்தி கண்கள் கண்ணீரை வடிப்பதைத் தவிற வேறொன்றும் அறியாதவர்களாயிருந்ததை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு பாமன்னிப்புக்கோரும் வார்த்தைகளை அறிவித்தான்.
(2:37) (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்அவன் மன்னிப்பை ஏற்பவன்நிகரற்ற அன்புடையோன்.
(7:23)''எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து,அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர்.

படிப்பினைகள்
உயர்ந்த படைப்பு நானா அவரா என்று ஷைத்தான் அல்லாஹ்விடம் வாக்குவாதம் செய்ததன் பின்னர் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது உயர்ந்தவர் யார் ?தாழ்ந்தவர் யார் என்பது தெளிவாகும்.
ஆதம்ஹவ்வா(அலை) அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி பாவமன்னிப்புக்கோரி இறைவனின் மகத்தான மன்னிப்பைப் பெற்று மீண்டும் இறையடியார்களாக நீடித்ததால் இவர்களே உயர்ந்தவர்கள்.

இப்லீஸ் என்ற ஷைத்தானோ தான் செய்த தவறுக்கு ஏற்கமுடியாத காரணத்தை கூறி அதிலேயே நீடித்து இறையருளுக்கு தூரமாகி இறைவனின் சாபத்திற்கும் உள்ளானதால் இவனே தாழ்நதவன்.
நமது அன்னைதந்தையாகிய ஆதம்ஹவ்வா(அலை) அவர்களின் வழியைப் பின்பற்றி நாம் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டு அதற்காக வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்ர்புக் தங்களை கோரி சீர்திருத்திக் கொண்டால் இறை யருளுக்கு நெருக்கமாகிய ஆதம்(அலை) அவர்களின் வழித்தோன்றலாக இருப்போம்.

இறைவனின் கட்டளையைப புறக்கனித்த குற்றத்திற்கு வருந்தாமல் ஏற்க முடியாத காரணத்தைக் கூறி கொண்டிருந்தால் இறைவனின் சாபத்திற்கு உள்ளான ஷைத்தானின் வழியைப் பின் பற்றியவாராவோம்.
அல்லாஹ் அதிலிருந்தும் அனைத்து மக்களையும் காத்தருள்வானாக !


இறைவன் கோப குணம் கொண்டவனல்லகருணையாளன் என்பதற்கு ஆதம்(அலை) அவர்கள் செய்த இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றத்தை மன்னித்தது உலகம் முடியும் காலம் வரைத் தோன்றும் மனித குலத்திற்கு இறைவன் மன்னிப்பவன்,கருணையாளன் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.

1 -- உலகம் முடியும் காலம் வரை,2 -- மனிதனின் தொண்டைக் குழியை உயிர் வந்தடையும் வரை,
பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்திருப்பதாக அல்லாஹ்வும்அல்லாஹ்வின் தூதரும் கூறுகின்றக் காரணத்தினால்,பாவங்கள் அதிகம் மன்னிக்கப்படுவாக வாக்களிக்கப்பட்ட புனித ரமளான் மாதத்தில் கடந்த காலத்தில் செய்தப் பாவங்களைப் பட்டியலிட்டு இறவா! நீ எங்களை மன்னிக்க வில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளியாகி விடுவோம் என்று அழுதுக் கேளுங்கள்.



ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி-முஸ்லீம்)



பூலோக சொர்க்கத்திலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி

இந்தியாவின் வடகோடியில் உள்ள,இயற்கை அழகு கொஞ்சும் பூலோக சொர்க்கமாக ஒரு காலகட்டத்தில் விழங்கிய  ஜம்மு காஷ்மீர் மாநிலம் பல்வேறு வகையான மலர்கள், குங்குமப்பூ,ஆப்பிள் மற்றும் பாஸ்மதி அரிசி ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. 
ங்கு விளையும் பாஸ்மதி அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

இது குறித்து மாநில வேளாண் உற்பத்தி அமைச்சர் குலாம் ஹசன் மிர் கூறுகையில்: 

அமெரிக்காவுக்கு உலகில் இருந்து 18 அரிசி மாதிரிகள் அனுப்பப்பட்டதில் ஜம்மு காஷ்மீரின் சர்வேஷ்வர் பாஸ்மதி அரிசியின் தரம் அங்கீகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்கா, ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்த தரம் மிக்க அரிசியை ஏற்றுமதி செய்யலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

இதனால் இம்மாநில விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். மேலும், இந்த அங்கீகாரம் கிடைத்ததை அடுத்து தனது தரத்தை எப்போதும் உறுதி செய்ய சர்வேஷ்வர் மில் தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஏற்றுமதி தனி நிறுவன முயற்சி மட்டுமல்ல, உலக அளவில் மாநில அரசின் பெயரை பிரதிபலிக்கும் முயற்சியுமாகும் என கூறினார். மேலும் சர்வேஷ்வர் மில்லின் பல்வேறு யூனிட்களை அமைச்சர் குலாம் ஹசன் ஆய்வு செய்தார்.

முஸ்லிம்களின் தனித்தன்மைகளை பாதுகாக்கும் ஆயுதம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் : பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்

விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பேரவை, விழுப்புரம் கிழக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அல்ஹாஜ் எஸ்.எம். அமீர் அப்பாஸ் ஏற்பாட்டில் பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சிக்கான நொய் அரிசி வழங்கும் விழா விழுப்புரம் ஆனந்தா கான்பரன்ஸ் ஹாலில் கடந்த 15-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்றது.

மௌலவி சாகுல் ஹமீது மஹ்லரி இறைமறை ஓதினார். எஸ்.எம். அப்துல் ஹக்கீம் வரவேற்றுப் பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் காயல் மகபூப் வாழ்த்துரை வழங்கினார்.

முஸ்லிம் லீக் பதிப்பக அறக் கட்டளை மேலாளர் இப்ராஹீம் மக்கீ, விழுப்புரம் கிழக்கு மாவட்டத் தலைவர் டாக்டர் ஏ. இக்பால் பாஷா, மேற்கு மாவட்டத் தலைவர் கள்ளக் குறிச்சி சித்தீக் அஹமது, செயலாளர் சங்கராபுரம் அஹமது கபீர், மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் கே.எம். ஷேக் தாவூது, கோட்ட குப்பம் வி.ஆர். இப்ராஹீம், விழுப்புரம் டி. சாகுல் ஹமீது, டி. சுல்தான் மைதீன், சங்கராபுரம் லியாகத் அலி, கோட்டகுப்பம் அமீர் பாஷா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சியில் பேராசிரியர் பேசியதாவது-

மஹல்லாக்கள் ஒருங்கிணைக்கும் பணி


தமிழகத்தில் 1973-ம் ஆண்டு முதல் மஹல்லாக்களை ஒருங் கிணைக்கும் பணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈடுபாடு கொண்டு செயல்படு கிறது. அதனுடைய ஒருங்கி ணைப்பா ளராக நான் பணியாற்றுகிறேன்.

விழுப்புரம் மாவட்டத்தில் 436 மஸ்ஜித்கள் இயங்குகின் றன. அவைகளை ஒருங்கி ணைத்து ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத் பேரவையை மிகச் சிறப்பாக நடத்துகிறார்கள். இதனுடைய தலைவராக இருக்கின்ற அல்ஹாஜ் எஸ்.எம். அமீர் அப்பாஸ் அவர்கள்தான் விழுப்புரம் கிழக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளராகவும் பணியாற்று கிறார்.

அதேபோன்று, ராமநாதபுர மாவட்டத்தில் 258 பள்ளிவாசல் களை ஒருங்கிணைத்து முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத்தை பொறுப்பு எடுத்து நடத்தக் கூடியவர் நம்முடைய மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜ ஹான், அதேபோன்று கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஜமாஅத்கள் ஒருங்கிணைக் கப்பட்டுள்ளன. 

சென்னை மாவட்டத்தில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இவை களை ஒருங்கிணைக்கக்கூடிய பணியில் முஸ்லிம் லீகின் மூத்த தலைவர் ஏ.கே. அப்துல் ஹலீம் ஹாஜியார் பாடுபட்டார். இன்று புரசை சிக்கந்தரைப் போன்றவர் கள் அந்தப்பணியில் ஈடுபாடு கொண்டிருக்கின்றனர்.

ஆக, ஜமாஅத்களை ஒருங்கிணைக்கக் கூடிய பணியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது தலையாய பணியாகக் கொண்டு செயல் பட்டு வருகின்றது.

தாம்பரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டை முன்மாதிரி மஹல்லாக்களை தேர்ந்தெ டுத்து விருதளித்து கவுரவித் தோம். ஒவ்வொரு மஹல்லாவும் அனைத்து விஷயங்களிலு தன்னிறைவு பெற்ற மஹல்லாக் களாக தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த மஹல்லாக் களின் மாண்பும், கண்ணியமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி வலி யுறுத்தினோம்.

பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து செயல்பட்டு வரக்கூடிய முஸ்லிம் சமூகத் தின் அடிப்படை அமைப்புக் களாகும். அதைக் காப்பற்ற வேண்டியது ஒவ்வொரு முஸ்லி மின் கடமை.

ஷரீஅத்திற்கு எதிராக யார் சொன்னாலும் கேட்க மாட்டோம்


இந்த நாட்டில் நாம் ஜனா ஸாக்களை அடக்கம் செய்கி றோம். ஏன் அதை அடக்கம் செய்யவேண்டும்? எரித்தால் என்ன? 

இவர்களுக்கென்று ஒரு தனிச்சட்டம் எதற்கு? ஒரு பொதுவான சட்டம் ஒன்று கொண்டு வரவேண்டும் என்ற முயற்சிகள் நடந்தது. அந்த முயற்சிகளை தொடர்ந்து போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் செய்யப்பட்டது. மக்கள் மன்றங் களிலும், நாடாளுமன்றம், சட்ட மன்றங்களிலும் இது குறித்து விவாதங்கள் எழுப்பப்பட்டு அம்முயற்சிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகால் முறிய டிக்கப்பட்டது. இந்த அரசியல் அமைப்பில் எங்க ளுக்கு உரிமை தரப்பட்டுள்ளது. அதை எவரும் பறிக்க விடமாட்டோம். அப்படி எவரேனும் பரிக்க முற்படுவார் களேயானால் ஜனநாயக ரீதி யாக அதைத் தடுப்போம். போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் செய்வோம். சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் குரல் எழுப்புவோம். ஷரீஅத் சட்டத் திற்கு எதிராக யார் சொன்னா லும் கேட்கமாட்டோம். 

ஒரு பெண்ணை தலாக் சொல்லக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் உயர்ந்த நீதிபதி ஒரு தீர்ப்பு வழங்கினார். அவர் உச்சநீதிமன்றத்தில் உயர்ந்த நீதிபதி. உயர்வான இடத்தில் உள்ளார் என்பது எங்களுக்கு தெரியும். எங்களது மார்க்கப்படி ஒரு பெண்ணை தலாக் சொல் வது எப்படி என்று எங்களுக்கு சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்திற்கு விரோதமாக யாரும் தீர்ப்பு சொல்ல முடியாது. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதற்கான அதி காரம் சங்கைக்குரிய உலம hக்க ளுக்கு மட்டும்தான். அதுதான் முஸ்லிம் லீக் சொல்லிக் கொடுத்த பாடம். 

உலமாக்களை கண்ணி யப்படுத்துங்கள். இஸ்லாமிய போதனைகள் நமக்கு சொல்லி தந்தது. ஒரு உதாரணம்-ஒருவர் ஒரு பெண்ணை தலாக் செய்யப் போகிறார் என்று தெரிந்து மற்றொரு நபர் இவரிடம், �ஏன் அந்த பெண்ணை விவாகரத்து செய்யப்போகிறீர்� என்று கேட்ட போது, �அந்தப் பெண்ணை நான் இன்னும் விவாகரத்து செய்ய வில்லை. இந்த நிலையில் உங்களிடத்தில் அந்த பெண் ணைப் பற்றி அவர்கள் குறை களைப் பற்றி எவ்வாறு சொல் வது? உங்களிடத்தில் சொல்ல முடியாது� என்று கூறிவிட்டார். அந்த நபர் அந்தப் பெண்ணை விவாகரத்து செய்தபின் மேற்கண்ட நபர் மீண்டும் சந்தித்து, இப்போது விவாக ரத்து செய்துவிட்டீர்கள் அல்லவா? என்ன பிரச்சினை என்று கேட்டபோது, இப்போது அந்த பெண் எனக்கு மனைவியே கிடையாது,எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என் மனைவி இல்லாத நிலையில் அவரது குறையை பற்றி அவதூறு சொல்ல முடியாது� இதுதான் இஸ்லாமிய மார்க்கம் சொல்லிக் கொடுத்த பாடம். 

ஒன்றை தெளிவாக தெரி யப்படுத்துகிறோம். ஜனநாய கத்திலே உரிமையை, நமக் குள்ள தனித்தன்மையை பாதுகாப்பதை தடுத்து நிறுத்து வதற்கான முயற்சிகள் செய் தால் அதைத் தடுத்து நிறுத்து வதற்கான ஆயுதம்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.



 பர்தா-கத்னாவிற்கு தடை


ஜெர்மனில் சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள எந்த ஒரு முஸ்லிமும் சுன்னத் கல்யாணம் செய்யக்கூடாது என்று சொல்லி யிருந்தார்கள். மார்க்க கல்யா ணம் என்று நாம் சொல்கிறோம். இதை யூதர்களும் செய்து வருகிறார்கள். உலகத்தில் உள்ள மருத்து வனையில் பிறந்த 7 நாட்களில் சுன்னத் கல்யாணம் செய்து வருகிறார்கள். ஒரு சமயம் சுர்சத்சிங் ஒரு கட்டுரை எழுதினார். இந்தியாவில் உள்ள எல்லா ஆண்களும் சுன்னத் கல்யாணம் செய்வது நல்லது என்று எழுதினார். காரணம் பாலியல் வியாதி, சுகாதார கேடு ஆகிய வற்றை தடுப்பது என்று எழுதினார். இப்போது ஜெர்மனில் சுன்னத் கல்யாணம் செய்யக் கூடாது என்ற சட்டம் பாராளு மன்றத்தில் இயற்றியுள்ளார்கள். இதே போன்று பிரான்ஸ் சட்டமன்றத்தில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணியக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்துள்ளார்கள். 

லண்டன் பாராளுமன்றத்தில் இந்திய முஜாஹிதீன் அமைப் பிற்கு தடை விதிக்கின்ற சட்டங்களை கொண்டு வரு கின்ற அதிகாரம் ஜனநாயகத் தில் இருக்கின்றது. அதே ஜனநாயகம்தான் நம் நாட்டிலும் இருக்கின்றது. நம் நாட்டில் ஆடு மாடு வெட்டக் கூடாது என்ற சட்டத்தை போட்டு, அந்த வியா பாரிகளைக் கொடுமைப்படுத்தி னார்கள். மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தார்கள். ஒரு ஜனநாயகத்தில் செய்யக் கூடும்-செய்யவும் முடியும். இதனை தடுத்து நிறுத்துவது பலாத்காரம் மூலம், வன்முறை மூலம் தடுத்து நிறுத்த முடியாது. ஜனநாயக ரீதியாக கொண்டு வந்த சட்டத்தை ஜனநாயக ரீதியாகத்தான் முறியடிக்க வேண்டும் 

எல்லா சமுதாய மக்க ளையும் அரவணைத்துக் கொண்டு இருக்கின்ற அணுகு முறை தான் அரசியலில் ஆகுமான அணுகு முறை. அதைத் தான் முஸ்லிம் லீக் சொல்கிறது. அதுமட்டு மில்லை, நமது தனித்தன்மைகள் பாதுகாக்கப் பட வேண்டும். இது நமது கடமையாகும். பாங்கு சொல்வது, மதரஸா நடத்துவது இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை பாதுகாப்பது நமது தனித் தன்மை, நமது மார்க்கப்படி நடந்துகொள்ளும் உரிமை நமக்கு இருக்கிறது. நமக்கு இருந்தாக வேண்டும். அதனை தடுக்க முடியாது அது இந்திய அரசியல் சட்டத்தில் தரப்பட் டுள்ளது. இது இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெற செய்த வர்கள் யார் என்று சொன்னால், முஸ்லிம் லீகினுடைய தலைவர் கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நமது தன்மைக் கான சட்டப்பாதுகாப்பை வரை யறை செய்து இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெறச்செய்து பாதுகாப்பை பெறச்செய்து பாதுகாப்பை பெற்றுத் தந்துள்ள னர். 

இந்த உரிமைகளை ஜன நாயகத்தில் என்றும் பிரித்து விடாமல் இருக்க, ஜனநாயகத் தில் ஒரு இயக்கம் தேவை. அதுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது. இதில் தெளிவாக இருக்க வேண்டும். சமுதாயத்தில் உள்ளவர்களும் சரி, வெளியில் உள்ளவர்களும் சரி, சமுதாயத்தில் குழப்பம் செய்கின்றார்கள். இதனால் பயன் ஏதும் இல்லை. ஷரீஅத் சட்டத்திற்கு மாறாக யார் முயற்சி செய்தாலும் அதனை அரசியல்ரீதியாக ஜனநாயக ரீதியாக தடுத்து நிறுத்த வேண்டிய ஒரு இயக்கம் இந்திய நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டும்தான்.

இவ்வாறு  பேராசிரியர் குறிப்பிட்டார்.


நன்றி :மணிச்சுடர் 

விறு விறுப்பாக ஓட்டுபதிவு :ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள் பிரதிநிதிகள்

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு, இன்று காலையில் துவங்கியது. தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெ., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்தனர். பிரணாப் முகர்ஜிக்கும், சங்மாவுக்கும் இடையே, நேரடி போட்டி நிலவுவதால், விறு விறுப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள எம்.பி.,க்கள் டில்லியில் பார்லி., வளாகத்தில் தங்களின் ஓட்டுக்களை போட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 31 இடங்களில் ஓட்ச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ.,க்கள் மாநிலங்களிலும், எம்.பி.,க்கள் தங்களின் அனுமதிக்கேற்ப ஆங்காங்கே ஓட்டளித்து வருகின்றனர்.


 தமிழக எம்எல்ஏக்கள் ஓட்டு போடுவதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை குழுக்கள் அறையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. டெல்லியில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட ஓட்டுப்பெட்டி மற்றும் வாக்குச் சீட்டுகள், அந்த அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டன. இன்று காலை சீல் திறக்கப்பட்டு, ஓட்டு பெட்டிகளும் வாக்குச்சீட்டுகளும் வாக்குப்பதிவு நடக்கும் அறைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. அறையின் மையப் பகுதியில் ஒரு ஓட்டுப்பெட்டி மட்டும் வைக்கப்பட்டிருந்தது.அதன் அருகே எம்எல்ஏக்கள் தங்கள் வாக்கை பதிவு செய்ய இரு மேஜைகள் போடப்பட்டு, அதில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. ஓட்டுப் பெட்டி அருகே பேரவை செயலாளர் ஜமாலுதீன் அமர்ந்திருந்தார். எம்எல்ஏக்கள் 2 வரிசையில் வந்து ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்தல் கமிஷன் பார்வையாளர்கள் 4 பேர் வாக்குப்பதிவை கண்காணிக்க வந்திருந்தனர். வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. வாக்குச்சாவடி அறைக்கு வெளியே எம்எல்ஏக்கள் அமருவதற்காக 50 இருக்கைகள் போடப்பட்டிருந்தன. தேர்தலை நடத்தும் அதிகாரியான தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், தேர்தல் பார்வையாளர் அஜித் குலாட்டி ஆகியோர் முன்னிலையில் காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பிரணாப் முகர்ஜியின் ஏஜென்டாக காங்கிரஸ் எம்எல்ஏ கோபிநாத்தும், சங்மாவின் ஏஜென்டாக அதிமுக கொறடா மோகனும் நியமிக்கப்பட்டிருந்தனர். 


முதல்வர் ஜெயலலிதா காலை 8.45 மணிக்கே தலைமைச் செயலகம் வந்திருந்தார். முதல் ஆளாக ஜெயலலிதா தனது வாக்கை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். அதிமுக லோக்சபா எம்.பி.க்கள் 9 பேரும், ராஜ்யசபா எம்.பி.க்கள் 4 பேரும் சென்னையில் ஓட்டு போட தேர்தல் கமிஷனிடம் முன்அனுமதி பெற்றிருந்தனர். அவர்கள் 13 பேரும் வாக்களித்தனர். 


திமுக தலைவர் கருணாநிதி காலை 11 மணிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 23 எம்எல்ஏக்களுக்கும் வாக்களித்தனர். 


தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் பாராளுமன்ற பிரதிநிதி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரகுமான் டில்லியில் பார்லி., வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் ஓட்டு போட்டார் .


ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை, ஓட்டளிப்போரின் கை விரல்களில், அடையாள மை எதுவும் இடப்படாது. ஓட்டுச் சீட்டில், பிரணாப் முகர்ஜியின் பெயரும், சங்மாவின் பெயரும் இருக்கும். மக்கள் பிரதிநிதிகள், இவர்களில் யாருக்கு ஓட்டளிக்க விரும்புகின்றனரோ, அவர்களின் பெயருக்கு முன், 1 என்ற எண்ணை எழுதி, ஓட்டுப் பெட்டியில் போட வேண்டும். குறிப்பிட்ட வேட்பாளருக்கு தான், ஓட்டளிக்க வேண்டும் என, எந்த ஒரு அரசியல் கட்சியும், தங்களின் பிரதிநிதிகளை கட் டாயப்படுத்த முடியாது என்பதால், எம்.எல்.ஏ.,க்களும். எம்.பி.,க்களும், சுதந்திரமாக ஓட்டளிக்கலாம். ஓட்டுப் பதிவு முடிந்ததும், பெட்டிகள் சீலிடப்பட்டு, டில்லிக்கு அனுப்பப்படும். வரும், 22ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.