Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 19 ஜூலை, 2012

பூலோக சொர்க்கத்திலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி

இந்தியாவின் வடகோடியில் உள்ள,இயற்கை அழகு கொஞ்சும் பூலோக சொர்க்கமாக ஒரு காலகட்டத்தில் விழங்கிய  ஜம்மு காஷ்மீர் மாநிலம் பல்வேறு வகையான மலர்கள், குங்குமப்பூ,ஆப்பிள் மற்றும் பாஸ்மதி அரிசி ஆகியவற்றிற்கு புகழ்பெற்றது. 
ங்கு விளையும் பாஸ்மதி அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

இது குறித்து மாநில வேளாண் உற்பத்தி அமைச்சர் குலாம் ஹசன் மிர் கூறுகையில்: 

அமெரிக்காவுக்கு உலகில் இருந்து 18 அரிசி மாதிரிகள் அனுப்பப்பட்டதில் ஜம்மு காஷ்மீரின் சர்வேஷ்வர் பாஸ்மதி அரிசியின் தரம் அங்கீகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்கா, ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்த தரம் மிக்க அரிசியை ஏற்றுமதி செய்யலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

இதனால் இம்மாநில விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். மேலும், இந்த அங்கீகாரம் கிடைத்ததை அடுத்து தனது தரத்தை எப்போதும் உறுதி செய்ய சர்வேஷ்வர் மில் தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஏற்றுமதி தனி நிறுவன முயற்சி மட்டுமல்ல, உலக அளவில் மாநில அரசின் பெயரை பிரதிபலிக்கும் முயற்சியுமாகும் என கூறினார். மேலும் சர்வேஷ்வர் மில்லின் பல்வேறு யூனிட்களை அமைச்சர் குலாம் ஹசன் ஆய்வு செய்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக