இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் 01-01-2013 செவ்வாய் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னை பூந்த மல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல் அபுபேலஸில் நடை பெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ. அஹமது சாகிப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தேசிய பொருளாள ரும் கேரள அமைச்சருமான பி.கே. குஞ்ஞாலி குட்டி, துணைத் தலைவர் தஸ்தகீர் இப்ராகிம் ஆகா, தேசிய செயலாளர்கள் இ.டி. முகம்மது பஷீர் எம்.பி, அப்துஸ் ஸமத் சமதானி எம்.எல்.ஏ, டெல்லி குர்ரம் அனீஸ் உமர், பீகார் நயீம் அக்தர், தேசிய துணைச் செயலாளர்கள் நாக்பூர் ஷமீம் சாதிக், லக்னோ டாக்டர் மத்தீன், ஆம்பூர் அப்துல் பாசித் (முன் னாள் எம்.எல்.ஏ), இளைஞர் அணி பி.கே. ஃபெரோஸ்,
தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர், மாநில செயலா ளர்கள் காயல் மகபூப், கமுதி பஷீர், திருப்பூர் சத்தார், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநிலச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், பேங்காக் காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் வாவு சம்சுதீன், டைம்ஸ் ஆஃப் லீக் துணை ஆசிரியர் கே.டி. கிஸர் முகம்மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,
முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு
1.இந்திய நாட்டில் சிறுபான்மை சமுதாயங்கள் 18 சதவீதம் உள்ளனர். இவர்களில் பெரும் பான்மையாக அதாவது 13.5 சதவீதம் முஸ்லிம்களாவர்.
கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவேண்டுமென நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா, நீதியரசர் ராஜேந்திர சச்சார் ஆணையங்கள் பரிந்துரைத் தன. இந்த இடஒதுக்கீடு வழங் கப்பட வேண்டும் என மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. ஆனால், இதுவரை இந்த இடஒதுக்கீடு மிகுந்த வருத்தத்தை தருகிறது. எனவே முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
2.அநியாயமாக சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் இக்கூட்டம் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது .
3.இக்கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அனைத்து மாநில தலைநகர்களிலும் மார்ச் மாத இறுதியில் கவன ஈர்ப்பு பேரணி களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்துவது .
கூட்டத்தின் முடிவுக்குப்பின் செய்தியாளர் களை சந்தித்த இ. அஹமது சாஹிப் கூறியதாவது:
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் விடுதலை
முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் அதை நிறைவேற்ற மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அனைத்து மாநில தலைநகர்களிலும் கவன ஈர்ப்பு பேரணிகளை மார்ச் மாதம் இறுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்த உள்ளது.
குஜராத், மகாராஷ்டிரா, உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏராளமான முஸ்லிம்கள் விசாரணையின்றி நீண்ட காலம் சிறை வைக்கப் பட்டுள்ளனர். அற்ப காரணங் களுக்காக வும், காவல்துறைக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்க மறுத்ததற்காகவும், பொய் வழக் குகள் புனையப்பட்டு இவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சிறை வைக்கப் பட்டுள்ள முஸ்லிம் இளைஞர் களில் பெரும்பாலோனோர் குற்ற வழக்குகளில் எத்தகைய தொடர்பும் இல்லாதவர்கள். ஆய்வு செய்தவர்களும் இந்த உண்மையை வெளிபடுத்தி யுள்ளனர்.
எனவே அநியாயமாக சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். முஸ்லிம் லீக் நடத்தவுள்ள பேரணிகளிலும் இந்தக் கோரிக்கை பிரதானமாக வலியுறத்தப் படும்.
கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டு அவருக்கு நீதி மறுக்கப்படுகிறது. கடுமையான உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அவர் உடனடியாக விடுவிக்கப் பட வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல்
நடைபெற உள்ள நாடாளு மன்ற தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் தலைமையலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி யிலும் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து நீடிக்கும். மற்ற மாநிலங்களில் அதற் காக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் ஆய்வு செய்து தரும் அறிக்கையின் அடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்
இவ்வாறு இ. அஹமது சாஹிப் குறிப்பிட்டார்.