Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வெள்ளி, 15 மார்ச், 2013

தாட்கோ திட்டங்களில் பயன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்  திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரும் 30-ஆம் தேதிவரை  அனுப்பலாம் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சி. சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிலம் வாங்குதல் மற்றும் மேம்படுத்துதல், தொழில் முனைவோர் பொருளாதார  மேம்பாட்டுத் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம்,  மருத்துவமனை அமைத்தல், பெட்ரோல், டீசல், கேஸ் சில்லறை விற்பனை நிலையம், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி, பொருளாதார கடனுதவி, துரித மின்  இணைப்புத் திட்டம், விருப்புரிமை நிதி திட்டம், இந்திய குடிமைப்பணி முதன்மைத்   தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி ஆகிய திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி பெறுவதற்கு விண்ணப்பிப்பவர்கள் இந்து ஆதிதிராவிடர்களாக இருக்க வேண்டும். 18 முதல் 55 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சம். சிறப்புத் திட்டமான பெட்ரோல், டீசல், கேஸ் சில்லறை  விற்பனை நிலையம் அமைக்க குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை  இருக்கலாம்.

இத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்  விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு  செய்யும்போது குடும்ப அட்டை எண் அல்லது இருப்பிடச் சான்று, சாதிச் சான்று,  வருமானச் சான்று ஆகியவற்றின் எண், வழங்கப்பட்ட தேதி ஆகியவற்றை அதற்கான  இடத்தில் அவசியம் பதிவு செய்யவேண்டும். இதுபோல் திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதியையும் அதற்கான இடத்தில் குறிப்பிட வேண்டும். புகைப்படத்தை ஸ்கேன்  செய்து பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றார் .

தேசிய உணவுத் தொழில்நுட்ப நிறுவனத்தில் பல்வேறு படிப்புகள்


ஹரியானவில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புக்களுக்கு தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்நிறுவனத்தில் இளநிலை, முதுகலை பட்டப் படிப்பில்( உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவுத் தொழில்நுட்பம்) உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் வழங்குகிறது.

எம்.டெக்., படிப்பில் சேர இளநிலை பட்டப் படிப்புடன், GATE நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஆராய்ச்சி படிப்பில் சேர முதுகலை பட்டப் படிப்புடம் NET, GATE ஆகிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பங்களை www.niftem.ac.in என்ற இணையதளத்தில் மார்ச் 27 மற்றும் 28 தேதி முதல் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் ஜூன் 23ம் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

விரிவான தகவல்களுக்கு http://www.niftem.ac.in/NIFTEM/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.