Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 9 ஜூலை, 2012

திமுக எம்.பிக்கு அதிமுக அரசு பதவி :கலைஞர் ராஜினாமா செய்யச்சொல்வாரா ?

  கடந்த 15 /06 /2012 அன்று தமிழக வக்ப் வாரிய உறுப்பினர்களாக தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகம்மது ஜான், எம்.எல்.ஏ. அப்துல்ரகீம், காங்கிரஸ் எம்.பி.  ஹாரூன், திமுக எம்.பி. ஜின்னா மற்றும் தமிழ்மகன் உசேன், பாரூக், தலைமை ஹாஜி (சன்னி) சலாஹுதீன் அய்யூப், தலைமை ஹாஜி மெஹ்திகான் ஆகிய 8 பேரை நியமித்து  தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

      அதிமுக அரசு திமுக காரர்களை பழி வாங்கி வருகிறது ,பொய் வழக்கு போடுகிறது என்றும் ,மக்களுக்கு நல்லாட்சி தரவில்லை என்றும் தினசரி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு வருகிறார் .சமீபத்தில் அதிமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டமும் திமுக நடத்தியது .திமுக வை குறை கூறிய மார்க்சிஸ்ட் செயலாளர் ராமகிருஷ்ணனுக்கு  அதிமுக வினரின் குறை கண்ணுக்குத் தெரியவில்லையா? என்று கேள்வி கேட்டுக்கூட கலைஞர் அறிக்கை வெளியிட்டுள்ளார் .
        இந்த சூழலில் ,திமுக வின் எதிரியாக திமுக வினரால் கருதப்படும் அதிமுக அரசு திமுக வின் மாநிலங்களவை உறுப்பினர் ஜின்னாவை   தமிழக அரசு வக்ப் வாரிய உறுப்பினராக நியமித்துள்ளது .அதிமுக வை ,அதன் ஆட்சியை சரமாரியாக எதிர்த்து வரும் திமுக தலைவர் கலைஞர் ஜின்னாவை அந்தபதவியை ஏற்க மறுக்கச்சொல்வாரா ?  என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் .

ஒரு ரூபாய்க்கு ஒரு பச்சைமிளகாய் :ஜெயா அரசு கவனம் செலுத்துமா ?

ஊட்டியில், மலைக் காய்கறிகளின் விலை, வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது; ஒரு பச்சை மிளகாய், ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஊட்டியில் உருளைக் கிழங்கு, பீட்ரூட், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், ஊட்டி அவரை, பச்சை மிளகாய் உட்பட காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. தும்மனட்டி, கூக்கல் தொரை, முத்தொரை பாலாடா, ஓல்டு ஊட்டி, பொரையரட்டி, நஞ்சநாடு, மணியட்டி உள்ளிட்ட கிராமங்களில், காய்கறி விவசாயம் நடக்கிறது.

உள்ளூர் மக்களின் தேவைக்கு மட்டுமின்றி,காய்கறிகள் மேட்டுப்பாளையம் சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அனுப் பப்படுகின்றன.

ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெய்யும் கோடை மழை, இந்தாண்டு போதுமானதாக இல்லை; மேலும், கடந்த ஏப்ரல் மாதம், சில கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால், பல ஏக்கர் விவசாயப் பயிர்கள் நாசமாகின. இதனால், மகசூல் குறைந்து, கடந்தாண்டை விட, தற்போது 20 முதல் 40 சதவீதம் வரை, மலைக் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
ஊட்டியைச் சேர்ந்த மொத்த காய்கறி வியாபாரி ரியாஸ் கூறுகையில், ""ஊட்டியில், இம்முறை போதிய மழை பெய்யவில்லை; அதிகளவு நீர் தேவைப்படும் பச்சை மிளகாய், அவரை போன்றவற்றின் மகசூல், தண்ணீர் இல்லாததால் குறைந்துவிட்டது.

பச்சை மிளகாய் விலை, இதுவரை இல்லாதவாறு, கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது; ஒரு பச்சை மிளகாய் ஒரு ரூபாய் என்ற அளவில் விற்க வேண்டியுள்ளது. என்றார்.


 "நூறாண்டு சாதனை ஓராண்டில் "என்று மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து விளம்பரம் செய்யும் ஜெயா அரசு ,மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமா ? என்பது தான் தமிழக மக்களின் கேள்வியாகும் .