Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 12 நவம்பர், 2012

சூரிய ஒளி அடுப்பு கண்பிடிப்பு : பள்ளி மாணவ ,மாணவிகள் சாதனை


தேவகோட்டை மாணவர்கள், "சூரிய ஒளி அடுப்பை' கண்டுபிடித்து சாதனை படைத்து உள்ளனர்.தினமும், 16 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. காஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் தட்டுப்பாடும் பெண்களை அச்சுறுத்துகிறது.

இதற்குத் தீர்வுகாண, தேவகோட்டை லோட்டஸ் பள்ளி மாணவர்கள், "சூரிய ஒளி சமைப்பான்' என்ற பெயரில், சூரிய ஒளி அடுப்பை கண்டறிந்து உள்ளனர்.மாணவர்கள் ரஞ்சனி, மணிமாறன், அபினேஷ், அட்சயா, பார்கவி ஆகியோர் ஆசிரியைகள் சண்முகவள்ளி, ஜாஸ்மின் வழிகாட்டுதல்படி, அடுப்பு தயாரித்து உள்ளனர். மரப் பெட்டிக்குள் கறுப்பு வண்ணமிட்ட துத்தநாகத் தகட்டை வைத்துள்ளனர். அதில், ஒளி ஊடுருவும் வகையில் கண்ணாடி தட்டும், ஒளியை பிரதிபலிக்கும் வகையில், முகம் பார்க்கும் கண்ணாடியை மேலேயும் இணைத்துள்ளனர்.

சமைக்கத் தேவையான பொருளை பாத்திரத்தில் போட்டு, கண்ணாடியால் மூடினர். முகம் பார்க்கும் கண்ணாடி மூலம் சூரியஒளி பிரதிபலித்து, அடுப்புக்குள் செல்லும்போது, துத்தநாகத் தகட்டில் வெப்பம் அதிகரிக்கும். இதன் மூலம் சமையல், "ரெடி'. முதற்கட்டமாக, மாணவர்கள் அடுப்பில் வெந்நீர், காய்கறி, பருப்பை வேகவைத்து காண்பித்தனர்.நவ., 18ல் மானாமதுரையில், தேசிய இளம் விஞ்ஞானிகள் மாநாடு நடக்கிறது. அதில், இத்தயாரிப்பு வைக்கப்படும் என, கூறப்பட்டது.

சிரியா அதிபர் ஆசாத்துக்கு எதிராக புதிய கூட்டணி கத்தரில் உருவானது


சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும் எதிர்  படைகளுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. எதிர் படையினர் மற்றும் எதிர்ப்பாளர்களின் புதிய தேசிய கூட்டணி நேற்று கத்தார் நாட்டின் தோகா நகரில் தொடங்கப்பட்டது.

 இந்த புதிய கூட்டணியின் தலைவராக தலைநகர் டமாஸ்கஸ் மசூதியின் முன்னாள் இமாம் மௌசு அல் காதிப் செயல்படுவார்.

இந்த தேசிய கூட்டணி ஒரு அரசியல் கட்சியாக செயல்பட்டு சிரியா மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று இக்கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

உள்நாட்டு போரால் பொதுமக்கள் கொல்லப்படுவது இந்த புதிய கூட்டணியால் தடுத்து நிறுத்தப்படுமேயானால் அது வரவேற்கக்கூடியது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகினறனர்.

ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங்


இந்தியா வந்துள்ள ஆப்கான் அதிபர் ஹமீது கர்சாய், இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். அப்போது ஆப்கானிற்கு ஒத்துழைப்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங், ஹமீது கர்சாயுடன் இன்று நான்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

உரம், நிலக்கரி, தாதுப்பொருட்கள் மற்றும் சிறு திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பாக இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. போரால் நிலைகுலைந்துள்ள ஆப்கானின் மேம்பாட்டிற்காக  ரூ.10000 கோடி நிதி அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.

மேலும் ஆப்கானின் வளர்ச்சி, வலிமை, ஒற்றுமை, இறையாண்மை ஆகிய விசயங்களில் இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

ஆப்கானில் அரசியல் மற்றும் பாதுகாப்பில் மாற்றம் கொண்டு வர உலக நாடுகளின் ஒத்துழைப்பிற்கும் அப்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தங்கள் நாட்டில் அமைதியான சூழல் நிலவுவதால் இந்திய முதலீட்டாளர்கள் அங்கு தொழில் தொடங்க முன்வர வேண்டும் என்று ஹமீது கர்சாய் கேட்டுக்கொண்டார்.

ஆந்திர காங்கிரஸ் அரசுக்கான அதரவு வாபஸ்: மஜ்லிஸே இத்திகாதுல் முஸ்லிமீன்


ஹைதராபாத்தில் சார்மினார் அருகில் புதிதாக ஆக்கிரமித்து உருவாக்கப்படுள்ள  பாக்கியலட்சுமி கோயிலுக்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆதரவு தருகிறார் எனக் கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சார்மினார் நோக்கி பேரணி நடத்திய எம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக எம்.ஐ.எம் கட்சி அறிவித்தது.

எம்.ஐ.எம் கட்சித் தலைவர் இதுகுறித்துக் கூறியபோது, மாநில அரசின் முடிவால் நாங்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தோம்., சிறுபான்மையினர் தொடர்பான பல்வேறு பிரச்னைகளில் அரசின் போக்கு சரியில்லை. எனவே கடந்த 14 வருடங்களாக இருந்த உறவை இப்போது முறித்துக் கொள்கிறோம். ஆந்திராவில் காங்கிரஸின் முகத்தை தோலுரித்துக் காட்டுவோம். ஜகன் மோகன் ரெட்டி நல்ல நண்பர். கிரன் குமார் ரெட்டி ஒரு நண்பராக இருந்தார். 2014 தேர்தல் எப்படி அமைகிறது என்று பார்ப்போம்... என்றார் அவர்.

முன்னதாக, நேற்று முதலில் பேரணியாகப் புறப்பட்ட அக்பருதீன் ஒவைசி மற்ற 4 எம்.எல்.ஏ.க்களுடன் கைதானார். அடுத்து பேரணியாகப் புறப்பட்ட 2 எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். சார்மினார் பகுதியில் கடைகள், அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் சிஆர்பிஎப் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப் பட்டுள்ளனர். அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லை. பதற்றம் நிலவுவதால் மார்க்கெட்டுகள், கடைகள் அடைக்கப்பட்டன. தெருக்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

முதல்வரின் போக்கைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு தங்கள் கட்சி அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவது பற்றி கட்சித் தலைவர்களுடன் விவாதிக்க இருப்பதாக ஒவைசி கூறினார்.

இதற்கிடையே, பிரச்சினையை பெரிதாக்க ,ஆக்கிரமித்து திடீர் கோயிலை உருவாக்கிய பாசிச சக்திகள் , அதற்காக மேற்கூரையில் தார்ப் பாய்கள் கொண்டு நிழல் பந்தல் போட்டுள்ளனர் .