Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

திங்கள், 12 நவம்பர், 2012

ஆந்திர காங்கிரஸ் அரசுக்கான அதரவு வாபஸ்: மஜ்லிஸே இத்திகாதுல் முஸ்லிமீன்


ஹைதராபாத்தில் சார்மினார் அருகில் புதிதாக ஆக்கிரமித்து உருவாக்கப்படுள்ள  பாக்கியலட்சுமி கோயிலுக்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆதரவு தருகிறார் எனக் கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சார்மினார் நோக்கி பேரணி நடத்திய எம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக எம்.ஐ.எம் கட்சி அறிவித்தது.

எம்.ஐ.எம் கட்சித் தலைவர் இதுகுறித்துக் கூறியபோது, மாநில அரசின் முடிவால் நாங்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தோம்., சிறுபான்மையினர் தொடர்பான பல்வேறு பிரச்னைகளில் அரசின் போக்கு சரியில்லை. எனவே கடந்த 14 வருடங்களாக இருந்த உறவை இப்போது முறித்துக் கொள்கிறோம். ஆந்திராவில் காங்கிரஸின் முகத்தை தோலுரித்துக் காட்டுவோம். ஜகன் மோகன் ரெட்டி நல்ல நண்பர். கிரன் குமார் ரெட்டி ஒரு நண்பராக இருந்தார். 2014 தேர்தல் எப்படி அமைகிறது என்று பார்ப்போம்... என்றார் அவர்.

முன்னதாக, நேற்று முதலில் பேரணியாகப் புறப்பட்ட அக்பருதீன் ஒவைசி மற்ற 4 எம்.எல்.ஏ.க்களுடன் கைதானார். அடுத்து பேரணியாகப் புறப்பட்ட 2 எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். சார்மினார் பகுதியில் கடைகள், அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் சிஆர்பிஎப் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப் பட்டுள்ளனர். அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லை. பதற்றம் நிலவுவதால் மார்க்கெட்டுகள், கடைகள் அடைக்கப்பட்டன. தெருக்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

முதல்வரின் போக்கைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு தங்கள் கட்சி அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவது பற்றி கட்சித் தலைவர்களுடன் விவாதிக்க இருப்பதாக ஒவைசி கூறினார்.

இதற்கிடையே, பிரச்சினையை பெரிதாக்க ,ஆக்கிரமித்து திடீர் கோயிலை உருவாக்கிய பாசிச சக்திகள் , அதற்காக மேற்கூரையில் தார்ப் பாய்கள் கொண்டு நிழல் பந்தல் போட்டுள்ளனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக