இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுக்குழு எதிர்வரும் டிசம்பர் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலம்
கோழிக்கோடு கிழக்கு நடக்காவுவில் உள்ள ஹோட்டல் ஈஸ்ட் அவென்யூ வில் மிகச்சிறப்பாக நடை பெறுகிறது. தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவு மற்றும் மனிதவள மேம்பாட் டுத் துறை இணையமைச்ச ருமான இ.அஹமது சாஹிப் இதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டம் 2008 செப்டம்பர் 14-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற போது தலைவராக இ.அஹமது சாஹிபும், தேசிய பொதுச் செயலாளராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனும் ஒருமனதாக தேர்ந்தெடுக் கப்பட்டனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அம் மாநில பெயர்களோடு முஸ்லிம் லீக் அமைப்புகள் செயல்படுவதற்கு பதில், ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ என்ற ஒரே பெயரில் தேசிய அளவில் செயல் படுவது என முடிவெடுக் கப்பட்டது. இதற்கு கேரள ராஜ்ஜிய முஸ்லிம் லீக் கமிட்டி முழுமையான ஒத்துழைப்பு அளித்து அதற்கான சட்டப்பூர்வ மான பணிகளில் ஈடுபட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது.
தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
வரலாற்றுப் பெருமை கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2012 மார்ச் 3-ம் தேதி அங்கீகரித்து ‘ஏணி’ சின்னத்தையும் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தது.இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைமைச் செயலகமாக சென்னை காயிதெ மில்லத் மன்ஸில் செயல்படும் எனவும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்திய நாடாளுமன்றமும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்கின்ற பெயரை அங்கீகரித்து 2012 ஜூன் 27-ல் லோக்சபா செய்தி வெளியீட்டில் வெளியிட்டது.
முதல் கவுன்சில் கூட்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றில் மாநில அளவில் பொதுக்குழு கூட்டங் களோடு தேசிய அளவில் செயற் குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டங்களே இது வரையிலும் நடைபெற்று வந்துள்ளன. ஆனால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்று அகில இந்திய அளவில் ஒரே பெயரில் - ஒரே சட்ட திட்டத்தில் செயல்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது சட்டத் திட்டங்களின்படி தேசிய கவுன்சில் கூட்டத்தை நடத்துகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றில் இது முதல் கவுன்சில் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தேசிய கவுன்சில் மற்றும் செயற்குழு
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டத்திட்டங்களின்படி பத்தாயிரம் உறுப்பினர் களுக்கு ஒரு கவுன்சில் உறுப்பினர் என்ற அடிப்படையிலும், சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து 400 பேர் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் புதிய தேசிய கவுன்சில் கூட்டம் வரும் டிசம்பர் மாதம் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு கேரள மாநிலம் கோழிக்கோடு கிழக்கு நடக்காவுவில் உள்ள ஹோட்டல் ஈஸ்ட் அவென்யூவில் நடைபெறு கிறது.
இதற்கான அழைப்பிதழை தேசிய கவுன்சில் உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அனுப்பியுள்ள தேசியத் தலைவர் இ.அஹமது சாஹிப், ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய கவுன்சுல் உறுப்பினராக தாங்கள் தேர்வு செய்யப்பட் டுள்ளதற்கு மனமார்ந்த வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள் கிறேன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டத் திட்டம் விதி - 7(ஏ)-யின்படி அமைக்கப்பட்ட முதல் கூட்டம் 2-12-2012 காலை 10 மணிக்கு கோழிக்கோடு ஹோட்டல் ஈஸ்ட் அவென்யூவில் நடைபெறு கிறது. இக்கூட்டத்தில் தேசிய நிர்வாகிகள் தேர்தல் ஜனநாயக அடிப்படையில் நடைபெறுகிறது. எனவே, தாங்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்’ என அதில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய செயற்குழு கூட்டம்- பேராசிரியர் அழைப்பு
தேசிய கவுன்சிலுக்கு முன்னதாக, 1.12.2012 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய செயற்குழு கூட்டம் தலைவர் இ.அஹமது சாஹிப் தலைமை யில் கோழிக்கோடு ஹோட்டல் ஈஸ்ட் அவென்யூவில் நடைபெறும் என்றும், அக்கூட்டத்தில்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நான்கு ஆண்டு ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை, மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு அனுப்பப் பட்டுள்ள தேசிய கவுன்சில் உறுப்பினர்களுக்கு அங்கீகாரம், தேர்தல் நடைபெறாத மாநிலங்களுக்கு தேசியத் தலைமையால் நியமிக்கப்பட்ட கமிட்டிகளுக்கான அங்கீகாரம், தேசிய கவுன்சில் கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன் ஆலோசனை ஆகியவை நடை பெறும் என்றும் முக்கியமான இக்கூட்டத்திற்கு தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அழைப்பு விடுத்துள்ளார்.
தேசிய கவுன்சில், செயற்குழு கூட்டங்களில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காள, உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், குஜராத், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், அஸ்ஸாம், உத்தர காண்ட், டெல்லி, கோவா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலி ருந்து பிரதிநிதிகள் பங்கேற்கின் றனர்.
தேசிய கவுன்சில், செயற்குழு கூட்டங்களுக்கான மிகச் சிறப்பான ஏற்பாடுகளை கேரள மாநிலத் தலைவர் பானக்காடு செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்கள் ஆலோசனையில் கேரளமாநில நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
தேசிய கவுன்சில், செயற்குழு கூட்டங்களில் பங்கேற்க உள்ளவர்கள் தங்கள் வருகை குறித்து கேரள மாநில பொதுச் செயலாளர் கே.பி.ஏ. மஜீத் 09447109014 மற்றும் கேரள மாநிலச் செயலாளர் டி.பி.எம். ஜாஹீர் 09846183344, கோழிக் கோடு லீக் ஹவுஸ் 0495 2365969, 2366090 ஆகிய எண்களில் ஏதாவது ஒன்றுக்கு தகவல் தெரிவிக்கும்படியும், இது தேர்தல் கூட்டமாக இருப்பதால் கண்டிப்பாக அழைப்பு உள்ளவர்கள் மட்டுமே இக் கூட்டத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தேசிய கவுன்சிலும் - செயற்குழுவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சியையும், புதிய சகாப்தத்தையும் உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.