அரபிக் கடல் குஜராத் எல்லையில் எல்.பி.ஜீ. சமையல் எரிவாயு ஏற்றிய மகரிஷி கிருஷ்னேத்ரேயா என்ற கப்பல் துபாய் செல்வதற்காக நின்றிருந்தது. இந்த கஅரபிக் கடல் குஜராத் எல்லையில் எல்.பி.ஜீ. சமையல் எரிவாயு ஏற்றிய மகரிஷி கிருஷ்னேத்ரேயா என்ற கப்பல் துபாய் செல்வதற்காக நின்றிருந்தது. இந்த கப்பலின் கம்ப்ரசர் அறை வாயுக்குழாயில் இன்று கசிவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக கப்பல் தலைமை அலுவலர், கேஸ் என்ஜினியர் உட்பட மற்ற 4 மாலுமிகள் அந்த அறைக்குள் இறங்கி கசிவை சரிசெய்துள்ளனர். அப்போது வெளியேறிக்கொண்டிருந்த அந்த விஷ வாயுவில் சிக்கிய 6 பேரும் வெளியேற முடியாமல் மூச்சு திணறி உயிர் இறந்துள்ளனர்.
செய்தி அறிந்த மீட்புக்குழுவினர் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடலையும், அந்த கப்பலிலிருந்த மற்றவர்களையும் மீட்டுள்ளனர். உதவிக்காக இந்திய கப்பல்படை கப்பலும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக