சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் 05.11.2012 அன்று மாலை தமிழ்நாடு மருத்துவ மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் புதிய விதிமுறைப்படி வெளியிட்டுள்ள முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகளை எம்சிஐ விதிமுறைப்படி திருத்தி வெளியிட வேண்டும்.
கிராமப்புற மாணவர்கள் தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரவே தயங்கும் வகையில் கடுமையான புதிய விதிமுறைகளை புகுத்தியுள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது. சமூக நீதிக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
மருத்துவ படிப்பில் முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை எம்சிஐ விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
முதலாம் ஆண்டில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தால்கூட, ஆறு மாதம் கழித்து தனி பேட்ச்சாகத்தான் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என்றி பிரேக் சிஸ்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக