Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

சனி, 4 மே, 2013

மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமை அவசியம்


மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமை அவசியம் என, தமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் கூறினார்.

 தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் மையம் சார்பில் திருநெல்வேலியில் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான கருத்தரங்கு, பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

 மையத்தின் தலைமை செயல் அதிகாரி எம். சிவகுமார்
தொடக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில் சிந்தியா பாண்டியன் பேசியதாவது:
 வருங்காலத்தில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக இருக்கின்றன. இவற்றில் பணிபுரிய திறமை வாய்ந்தோராக மாணவர்களை உருவாக்க வேண்டியது கல்லூரிகளின் பொறுப்பு. மாணவர்களிடம் இருக்கும் திறமைகளைக் கண்டறிந்து அவற்றின் மூலம் வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் செயல்திட்டங்களை கல்லூரிகள் வகுக்க வேண்டும். அதற்கு பேராசிரியர்கள் துணையாக இருக்க வேண்டும்.
 தென் தமிழகத்திலுள்ள மாணவர்கள் ஆங்கில மொழிப் புலமையில் பின்தங்கியுள்ளனர். இதனால் பெரிய நிறுவனங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் போகிறது.
 எனவே ஆங்கிலத்தில் பேசும் திறனை மாணவர்களிடம் வளர்க்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. வருங்காலத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப மாணவர்களை இப்போதே தயார்படுத்த வேண்டும். தமிழகத்தில் உயர்கல்வி மேம்பாட்டுக்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் உயர்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

உணவு பதப்படுத்தும் பயிற்சிகள்


தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சியை மேம்படுத்தும் வகையில் உணவு பதப்படுத்துதலில் உள்ள முக்கியதுவம் பற்றிய விரிவான  பயிற்சிகள் வழங்குவதோடு முறையாக கற்றுத்தரப்படுகின்றது.

ஜாம், ஜீஸ், சர்பத், பலவகையான ஊறுகாய்கள் மற்றும் மசாலா பொடிகள் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சி பல நிறுவனங்கள் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் நடத்துகின்றனர். இந்த பயிற்சி ஒரு வாரக் கால பயிற்சியாக அளிக்கப்படுகிறது.

சமுதாய உணவு பதப்படுத்தும் பயிற்சி மையம், உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை (இந்திய அரசு), இராஜாஜி பவன், பெசன்ட் நகர் பஸ் நிலையம் எதிரே, சென்னை -98, தொலைபேசி - 24916004.

மேலும் இந்த பயிற்சியை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் குறைந்த கட்டணத்தில் உணவு பதப்படுத்துதல், மசாலா பொடிகள் உள்ளிட்ட அனைத்து கைத்தொழில்களும் இங்கு பயிற்சியளிக்கப்படுகிறது. சென்னை அருகே ஜி.எஸ்.டி ரோடு, காட்டுப்பாக்கத்தில் இரண்டு நாள் இலவச பயிற்சியாக நடத்துகிறது. தொலைபேசி - 044 26263484

தமிழ்நாடு முழுவதும் பல விவசாய கல்லூரிகளில் இப்பயிற்சிகள் நடத்தப்படுகிறது. மேலும் இப்பயிற்சிக்கான முழு விவரங்கள் அறிய www.tnau.ac.in

25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் கடும் ஏமாற்றம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு

நெல்லையில் நேற்று நிருபர்களிடம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் இசக்கியப்பன் கூறியதாவது:தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் பெற்று வந்தனர். 2004ம் ஆண்ட முதல் 6,7, மற்றும் 8ம் வகுப்புகளுக்கு மாதம் 4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

பின்னர் இவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டதால் ஏற்கனவே பணியாற்றி வந்த இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திய பின்புதான் புதியதாக நியமிக்கப்பட்ட இளநிலை பட்டதாரி ஆசிரியர்களை கால முறை ஊதியத்தில் கொண்டு வர வேண்டும். ஆனால் அப்படி செய்யாததால் ஒரே பணி இரு வேறு ஊதிய விகிதம் என்ற நிலையில் உயர், மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

எனவே, இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வலியுறுத்தி தர்ணா, உண்ணாவிரத போராட்டம், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இக்கோரிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டதில் 10ம் தேதி நடக்கும் மானிய கோரிக்கைக்கு முன்பாக நல்ல தீர்வு காணப்படும் என்றார். எனவே, பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் பணியாற்றும் அரசு, நகராட்சி, மாநகராட்சி, அரசுஉதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாறள்றும் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். இதுசம்பந்தமாக பள்ளி கலி மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். இல்லையெனில் இதுசம்பந்தமாக மாநில அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு கோர்ட்டில் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.