Flash News

கொட்டும் மழையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வெள்ள நிவாரணப் பணி

வியாழன், 6 டிசம்பர், 2012

ஓராண்டாக முடங்கி கிடக்கும் குத்தாலம் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம்

இயந்திரம் பழுது காரணமாக, குத்தாலம் எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தில், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுது ஏற்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும், இதுவரை பழுது நீக்கும் பணியை, மின் வாரியம் துரிதப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக, 101 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களின், மொத்த உற்பத்தி திறன், 516 மெகாவாட். இவற்றில், நாகை மாவட்டம் குத்தாலம் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தில், 101 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஒரே யூனிட் உள்ளது. இந்த யூனிட்டில், கடந்தாண்டு மின் உற்பத்திக்கான இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாகியும், இதுவரை பழுதான இயந்திரத்தை மாற்ற, மின் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், 101 மெகாவாட் மின் உற்பத்தி முடங்கியுள்ளது.

 குத்தாலம் எரிவாயு மின் உற்பத்தி நிலைய, இயந்திரம் பழுதாகவில்லை; மாறாக, வழுதூர் எரிவாயு மின் உற்பத்தி நிலைய,"ஜெனரேட்டர்' தான் பழுதாகியது. குத்தாலம் நிலையத்தில் உள்ள, "ஜெனரேட்டரை' எடுத்து, வழுதூர் நிலையத்தில் பொருத்தப்பட்டது. இதன் காரணமாக, குத்தாலம் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது என்றும், மின் வாரிய உயர் அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர். குத்தாலம் மின் உற்பத்தி நிலையத்திற்கு வழங்கப்படும் இயற்கை எரிவாயுவை, தனியார் நிறுவனத்திற்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதே, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதற்கு காரணம் என்றும், வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஏ.கே. அந்தோணி துறையிலிருந்து ஆறு ஆண்டுகளில் 700 விஞ்ஞானிகள் ஓட்டம்

கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 700 விஞ்ஞானிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் இது குறித்த கேள்விக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில கூறியிருப்பதாவது:
பாதுகாப்புத்துறையுடன் இணைந்து செயல்படும் டிஆர்டிஓ என்றழைக்கப்டும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை என்ற அமைப்பில் கடந்த‌ 2007முதல் 2011-ம் ஆண்டு வரையில் சுமார் 637 விஞ்ஞானிகளும் , இந்தாண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி வரையில் சுமார் 50 வி்ஞ்ஞானிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் மற்ற நிறுவனங்களில் கிடைக்கும் அதிக வருவாய் மற்றும் சலுகைகளை எதிர்பார்த்து சென்றதாக அவர் தெரிவித்தார் .

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் டிஆர்டி ஓ அமைப்பானது மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வந்த போதிலும் பாதுகாப்புத்துறை யுடன் இவ்வமைப்பு இணைந்து செயல்படுவதால் மற்ற நிறுவனங்களை போன்ற சலுகைகளை எதிர்பார்க்க முடியாது என கூறினார். மேலும் அமைச்சர் கூறுகையில் விஞஞானிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதி மற்றும் பணிபுரியும் இடத்தினருகே வசிப்பதற்கு ஏற்ற வீடு, பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு போன்ற‌ைவை வழங்கப்படுகிறது. என தெரிவித்தார்.